ஃபிலியோக் விதிமுறை என்றால் என்ன?

கேள்வி ஃபிலியோக் விதிமுறை என்றால் என்ன? பதில் ஃபிலியோக் விதிமுறை என்பது, பரிசுத்த ஆவியானவரின் தொடர்பில் திருச்சபையில் இன்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது. கேள்வி என்னவெனில், “பரிசுத்த ஆவியானவர் பிதாவினிடமிருந்து சென்றாரா அல்லது பிதாவிலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் சென்றாரா? என்பதாகும். லத்தீன் மொழியில் உள்ள ஃபிலியோக் என்ற வார்த்தையின் அர்த்தம் “மற்றும் குமாரன்” என்பதாகும். இது “ஃபிலிலியோக் விதிமுறை” என்று குறிப்பிடப்படுவதால், “மற்றும் குமாரன்” என்ற சொற்றொடரை நைசின் விசுவாச அறிக்கையில் சேர்க்கப்பட்டு, “பரிசுத்த ஆவியானவர்” பிதாவிலிருந்து “மற்றும்…

கேள்வி

ஃபிலியோக் விதிமுறை என்றால் என்ன?

பதில்

ஃபிலியோக் விதிமுறை என்பது, பரிசுத்த ஆவியானவரின் தொடர்பில் திருச்சபையில் இன்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது. கேள்வி என்னவெனில், “பரிசுத்த ஆவியானவர் பிதாவினிடமிருந்து சென்றாரா அல்லது பிதாவிலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் சென்றாரா? என்பதாகும். லத்தீன் மொழியில் உள்ள ஃபிலியோக் என்ற வார்த்தையின் அர்த்தம் “மற்றும் குமாரன்” என்பதாகும். இது “ஃபிலிலியோக் விதிமுறை” என்று குறிப்பிடப்படுவதால், “மற்றும் குமாரன்” என்ற சொற்றொடரை நைசின் விசுவாச அறிக்கையில் சேர்க்கப்பட்டு, “பரிசுத்த ஆவியானவர்” பிதாவிலிருந்து “மற்றும் குமாரனிடமிருந்து” புறப்பட்டார் என்பதையே இது காட்டுகிறது. கி.பி. 1054-ல் இந்த காரியத்தைக் குறித்து பெரும் வாக்குவாதம் உண்டானது. இறுதியில், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இடையே பிளவு ஏற்பட்டது. இரண்டு திருச்சபைகளும் இன்னும் ஃபிலியோக் விதிமுறையில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது.

யோவான் 14:26 நமக்கு சொல்லுகிறது, “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே …” யோவான் 15:26 நமக்கு சொல்லுகிறது, “பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன்”. யோவான் 14:16 மற்றும் பிலிப்பியர் 1:19 ஆகியவற்றைக் காண்க. இந்த வேதவாக்கியங்கள், பிதாவினிடத்திலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் ஆவியானவர் அனுப்பப்படுவதைக் காட்டுகின்றன. ஃபிலியோக் விதிமுறையில் முக்கியமான விஷயம் பரிசுத்த ஆவியின் தெய்வீகத்தை பாதுகாப்பதற்கான ஒரு விருப்பமாகும். பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (அப்போஸ்தலர் 5:3-4). ஃபிலியோக் விதிமுறையை எதிர்ப்பவர்கள் அதை அப்படி எதிர்க்க காரணம் பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் குமாரனிடத்திலிருந்து புறப்பட்டு வருவதாக இருப்பதால் பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் குமாரனுக்கு “கீழ்ப்படிகிறவர்” என்கிற நிலையில் இருப்பதாலே இந்த எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். பிதா மற்றும் குமாரன் ஆகியோரிடமிருந்து வரும் பரிசுத்த ஆவியானவர் என்கிற காரியம் ஆவியானவர் பிதாவுடனும் குமாரனுடனும் சமமான நிலையில் தேவனாக இருப்பதை பாதிக்காது என்று ஃபிலியோக் விதிமுறையை ஆதரிப்பவர்கள் நம்புகிறார்கள்.

ஃபிலியோக் விதிமுறையின் சர்ச்சை ஒருவேளை நாம் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கிற தேவனின் நபராகிய ஒரு அம்சம் அடங்கும். தேவன் ஒரு முடிவற்ற எல்லையில்லாத நபராக இருக்கிறபடியால், நம் வரையறுக்கப்பட்ட மனித மனங்களில் இறுதியாக நிலையில் புரிந்துகொள்ளமுடியாது. பரிசுத்த ஆவியானவர் தேவன் ஆவார், மற்றும் அவர் இயேசு கிறிஸ்துவின் இடத்தில் “பூமியில்” இருக்கத்தக்கதாக தேவன் அவரை அனுப்பினார். பரிசுத்த ஆவியானவர் பிதாவினிடமிருந்து அனுப்பப்பட்டாரா அல்லது பிதாவிலிருந்தும் குமாரனிடமிருந்தும் அனுப்பப்பட்டாரா என்கிற கேள்விக்கு தீர்க்கமான பதிலைக் கொடுக்க முடியாது அப்படி கொடுக்கவும் இயலாது. ஃபிலியோக் விதிமுறை என்பது ஒருவேளை ஒரு சர்ச்சைக்குரியதாவே இருக்க வேண்டும்.

[English]



[முகப்பு பக்கம்]

ஃபிலியோக் விதிமுறை என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.