ஆதியாகாமாத்தில் ஜனங்கள் நீண்ட ஆயுள் நாட்கள் வாழ்ந்ததின் காரணம் என்ன?

கேள்வி ஆதியாகாமாத்தில் ஜனங்கள் நீண்ட ஆயுள் நாட்கள் வாழ்ந்ததின் காரணம் என்ன? பதில் ஆதியாகாமத்தின் முதல் சில அதிகாரங்களில் குறிப்பிடபட்ட ஜனங்கள் நீண்ட காலம் வாழ்ந்ததின் காரணம் என்ன என்பது ஒரு மறைபொருள் ஆகும். வேதாகம நிபுணர்கள் இதற்கு அநேக காரணங்களை குறிப்பிடுகின்றனர். ஆதியாகமம் 5 அதிகாரத்தில், கர்த்தருக்கு பயந்து நடந்த ஆதாமின் சந்ததியாரின் பட்டியல் இருக்கிறது; இதுவே மேசியாவை பிறப்பிக்கும் சந்ததியாகும். அவர்கள் கர்த்தருக்கு பயப்பட்டு அவருக்கு கீழ்ப்படிந்தபடியினால் நீண்ட வாழ்வு பெற்றிருக்க கூடும் ….

கேள்வி

ஆதியாகாமாத்தில் ஜனங்கள் நீண்ட ஆயுள் நாட்கள் வாழ்ந்ததின் காரணம் என்ன?

பதில்

ஆதியாகாமத்தின் முதல் சில அதிகாரங்களில் குறிப்பிடபட்ட ஜனங்கள் நீண்ட காலம் வாழ்ந்ததின் காரணம் என்ன என்பது ஒரு மறைபொருள் ஆகும். வேதாகம நிபுணர்கள் இதற்கு அநேக காரணங்களை குறிப்பிடுகின்றனர். ஆதியாகமம் 5 அதிகாரத்தில், கர்த்தருக்கு பயந்து நடந்த ஆதாமின் சந்ததியாரின் பட்டியல் இருக்கிறது; இதுவே மேசியாவை பிறப்பிக்கும் சந்ததியாகும். அவர்கள் கர்த்தருக்கு பயப்பட்டு அவருக்கு கீழ்ப்படிந்தபடியினால் நீண்ட வாழ்வு பெற்றிருக்க கூடும் . இது ஒரு விவரமாய் இருந்தாலும், இந்த மனிதர்களின் நீண்ட ஆயுசு அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை சார்ந்தது என்று வேதம் எந்த இடத்திலும் சொல்லுவதில்லை. மற்றும், ஆதியாகமம் 5-ம் அதிகார்த்தில் ஏநோக்கை தவிர மற்ற யாரும் கர்த்தருக்கு பயந்து வாழ்ந்ததாக சொல்லப்படவில்லை. அந்த காலகட்டத்தில் எல்லா மனிதர்களும் அநேக நூற்றாண்டுகள் வாழ்ந்திருப்பார்கள் என்று கருதப்படுகின்றது. இதற்கு அநேக காரணங்கள் உள்ளன.

ஆதியாகமம் 1:6,7 கூறுகிறது, பூமி ஜலத்தால் சூழ்திருந்தது என்று. இது “கிரீன் ஹவுஸ்” விளைவை உண்டுபன்னி இருக்க கூடும், மற்றும் வெப்பம் தாக்காதபடி பூமியை பாதுகாத்திருக்க கூடும். இதின் விளைவாக சிறந்த வாழ்க்கை நிலை இருந்திருக்க கூடும். ஆதியாகமம் 7:11 குறிப்பிடுகின்றபடி, வெள்ள பெருக்கம் வந்த போது வானத்தின் மதகுகள் திறந்ததினால் தண்ணீர் பூமியின் மேல் ஊற்றப்பட்டது. இப்படியாக, அந்த சிறந்த வாழ்க்கை நிலை முடிந்தது. இந்த வெள்ள பெருக்கத்திற்கு முன் (ஆதியாகமம் 5:1-32) மற்றும் அதற்கு பின் (ஆதியாகமம் 11:10-32) வாழ்ந்தவர்களின் ஆயுள் காலத்தை ஒப்பிட்டு பாருங்கள். இந்த வெள்ள பெருக்கத்திற்கு பிறகு மனிதர்களின் ஆயுசு நாட்கள் குறைந்ததை பார்க்கிறோம்.

மற்றொரு கருத்து என்னவென்றால், சிருஷ்டிப்புக்கு பிறகு வாழ்ந்த சில தலைமுறைகளில் மரபு வழி அடையாளத்தில் சில குறைபாடுகள் உண்டாயிற்று. ஆதாமும் ஏவாளும் பூரணமாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள். உண்மையாக அவர்களுக்கு வியாதி மற்றும் சுகவீனங்களை எதிர்க்கும் சக்தி அதிகமாய் இருந்தது. அவர்கள் சந்ததியார்களுக்கும் இந்த எதிர்க்கும் சக்தி இருந்தது, ஆனால் அதே அளவிற்கு அல்ல. காலபோக்கில், பாவத்தின் விளைவாக மரவு வழி அடையாளம் அதிகமாக சீரழழிந்தது. அதனால், மனிதர்கள் அதிகமாக வியாதிபட்டு மற்றும் மரித்தார்கள். இதன் விளைவாக ஆயுல் காலம் குறைந்திருக்க கூடும்.

[English]



[முகப்பு பக்கம்]

ஆதியாகாமாத்தில் ஜனங்கள் நீண்ட ஆயுள் நாட்கள் வாழ்ந்ததின் காரணம் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.