ஆவியில் கொல்லப்படுதல் வேதாகமத்தின்படியானதா?

கேள்வி ஆவியில் கொல்லப்படுதல் வேதாகமத்தின்படியானதா? பதில் மிகவும் பொதுவான நிலையில், “ஆவியிலே கொல்லப்படுதல்” என்பது ஒரு தேவ ஊழியர் ஒருவர் மீது தனது கைகளை வைக்கும்போது அந்த நபர் தரையில் விழுந்து நிலைகுலைந்து விழும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கருதுகிறார்கள். ஆவியில் கொல்லப்படுதலை நடப்பிக்கிரவர்கள், வேதாகமத்தில் “செத்தவர்களைப்போல” விழுந்தவர்களை (வெளிப்படுத்துதல் 1:17) அல்லது முகங்குப்புற விழுகிறவர்களைப் பற்றி பேசும் வேதவசனங்களைப் பயன்படுத்துகிறார்கள் (எசேக்கியேல் 1:28; தானியேல் 8:17-18; 10:7-9). இருப்பினும், இந்த ஆவியில் கொல்லப்படுதலுக்கும்…

கேள்வி

ஆவியில் கொல்லப்படுதல் வேதாகமத்தின்படியானதா?

பதில்

மிகவும் பொதுவான நிலையில், “ஆவியிலே கொல்லப்படுதல்” என்பது ஒரு தேவ ஊழியர் ஒருவர் மீது தனது கைகளை வைக்கும்போது அந்த நபர் தரையில் விழுந்து நிலைகுலைந்து விழும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கருதுகிறார்கள். ஆவியில் கொல்லப்படுதலை நடப்பிக்கிரவர்கள், வேதாகமத்தில் “செத்தவர்களைப்போல” விழுந்தவர்களை (வெளிப்படுத்துதல் 1:17) அல்லது முகங்குப்புற விழுகிறவர்களைப் பற்றி பேசும் வேதவசனங்களைப் பயன்படுத்துகிறார்கள் (எசேக்கியேல் 1:28; தானியேல் 8:17-18; 10:7-9). இருப்பினும், இந்த ஆவியில் கொல்லப்படுதலுக்கும் வேதாகமத்தில் காண்கின்ற முகங்குப்புற விழுவதற்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன.

1. கிறிஸ்துவின் மறுரூபமலை மாதிரியைப் போன்ற சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அப்பால் ஒரு தரிசனத்தையோ அல்லது ஒரு சம்பவத்தையோ பார்த்தவர்கள் விழுந்ததாக வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது (மத்தேயு 17:6). வேதாகமத்தின்படி இல்லாத ஆவியில் கொல்லப்படுதல், ஒருவர் மற்றொருவரின் தொடுதலுக்கு அல்லது பிரசங்கியின் கையில் இயங்குவதைப் பிரதிபலிக்கிறார்.

2. வேதாகம நிகழ்வுகள் சில இடங்களில் மட்டும் இருந்தன, மற்றும் சிலர் வாழ்வில் அரிதாகவே நடந்தன. ஆனால் ஆவியில் கொலையுண்ணப்படுதல் நிகழ்வு மீண்டும் மீண்டும் நிகழ்வதொடு, அநேகருக்கு நடக்கும் அனுபவமாக இருக்கிறது.

3. வேதாகம நிகழ்வுகளில், ஜனங்கள் யாரை அல்லது எதைப் பார்க்கிறார்களோ அவர்கள் முகங்குப்புற விழுகிறதை கண்டுகொள்ளலாம். ஆனால் ஆவியில் கொல்லப்பட்டவர்கள், பிரசங்கியின் கை அலைக்கு பதில் அல்லது திருச்சபை தலைவரின் தொடுதலின் விளைவாக (சில சந்தர்ப்பங்களில் தள்ளப்படுவதால்) பின்வாங்கிக் கொண்டு விழுகிறார்கள்.

ஆவியில் கொல்லப்படுவதற்கான அனைத்து எடுத்துக்காட்டுகளும் ஒரு தொடுதல் அல்லது தள்ளுவதற்கான குற்றங்கள் அல்லது எதிர்வினைகள் என்பதாக நாங்கள் கூறவில்லை. பலர் ஒரு சக்தி அல்லது ஒரு வல்லமையை அனுபவிப்பதாக கூறுகின்றனர். எனினும், இந்த கருத்துக்கு வேதாகம அடிப்படையை நாம் காணவில்லை. ஆமாம், இதில் சில ஆற்றல் அல்லது சக்திகள் இருக்கலாம், ஆனால் அவ்வாறாயின், அது பரிசுத்த ஆவியின் வேலையின் விளைவாகவும் அல்ல, தேவனாலும் அல்ல.

ஆவிக்குரிய கனியைப் பெறுவதைத் தவிர்ப்பது துரதிர்ஷ்டம், ஏனெனில் நம் வாழ்வில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் நோக்கத்திற்காக பரிசுத்த ஆவியானவர் நமக்கு அளிக்கிற நடைமுறை வாழ்விலுள்ள கனியைத் தவிர வேறொன்றுமில்லை (கலாத்தியர் 5:22-23). ஆவியால் நிறைந்திருப்பது இத்தகைய மோசடிகளால் நிரூபிக்கப்படவில்லை, ஆனால் தேவனுடைய வார்த்தையோடு நிறைந்து வழிந்தோடும் ஒரு வாழ்க்கை மூலம் அது தேவனுக்கு துதியையும், நன்றியையும், மற்றும் கீழ்ப்படிதலையும் கொண்டிருக்கிறது.

[English]



[முகப்பு பக்கம்]

ஆவியில் கொல்லப்படுதல் வேதாகமத்தின்படியானதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.