இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் என்ன?

கேள்வி இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் என்ன? பதில் நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? இந்த கேள்வியை சரியாக புரிந்துகொள்ள நீங்கள் முதலில் “இயேசு கிறிஸ்து”, “சொந்த”, மற்றும் “இரட்சகர்” ஆகிய சொற்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து யார்? அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு நல்ல மனிதனாக, மாபெரும் போதகராக அல்லது தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்வர். இயேசு கிறிஸ்துவை பொறுத்தமட்டில் இந்த விஷயங்கள்…

கேள்வி

இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? இந்த கேள்வியை சரியாக புரிந்துகொள்ள நீங்கள் முதலில் “இயேசு கிறிஸ்து”, “சொந்த”, மற்றும் “இரட்சகர்” ஆகிய சொற்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

இயேசு கிறிஸ்து யார்? அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு நல்ல மனிதனாக, மாபெரும் போதகராக அல்லது தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்வர். இயேசு கிறிஸ்துவை பொறுத்தமட்டில் இந்த விஷயங்கள் யாவும் சரியானவைகள் தான், ஆனாலும் இயேசு மெய்யாகவே யார் அவர் எப்படிப்பட்டவர் என்பதை இவைகள் முழுமையாக வரையறுத்து கூறவில்லை. இயேசு மாம்சத்தில் வந்த தேவன் மற்றும் மனித உருவில் வந்த தேவன் என்று வேதாகமம் கூறுகிறது (யோவான் 1:1, 14-ஐ பாருங்கள்). நமக்கு போதித்து, நம்மை குணமாக்கி, நம்மை திருத்தி, நம்மை மன்னித்து, நமக்காக மரிக்கும்படியாக தேவன் இந்த உலகத்தில் வந்தார்! இயேசு கிறிஸ்து தேவன், சிருஷ்டிகர் மற்றும் பரமாதிகாரமுள்ள ஆண்டவராக இருக்கிறார். இந்த இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

ஒரு இரட்சகர் என்றால் என்ன, நமக்கு ஏன் ஒரு இரட்சகர் வேண்டும்? நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் சொல்கிறது (ரோமர் 3:10-18). நம்முடைய பாவத்தின் விளைவாக, நாம் தேவனுடைய கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் ஆனோம். நாம் செய்த பாவத்திற்கான நீதியான தண்டனை என்னவென்றால், அளவில்லாத நித்திய தேவனிடத்தில் இருந்து நிதியமான தண்டனை ஆகும் (ரோமர் 6:23; வெளிப்படுத்துதல் 20:11-15). அதனால்தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவையாக இருக்கிறது!

இயேசு கிறிஸ்து இப்பூமியில் வந்து நம் ஸ்தானத்தில் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவங்களுக்காக செலுத்தி முடித்த எல்லையற்ற முடிவில்லாத தொகையாகும் (2 கொரிந்தியர் 5:21). இயேசு நம்முடைய பாவங்களுக்கான தண்டனையின் விலைக்கிரயத்தை செலுத்தும்படியாக மரித்தார் (ரோமர் 5:8). இயேசு விலைக்கிரயத்தை கொடுத்து தீர்த்தபடியினால் நாம் கொடுக்க வேண்டியதில்லை. மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்தபோது, நம்முடைய பாவங்களுக்காக செலுத்தப்படவேண்டிய தொகையை செலுத்த போதுமானவையாக இருந்தது என்று நிரூபித்தார். அதனால்தான் இயேசு ஒரே ஒருவர் மட்டும்தான் இரட்சகர் (யோவான் 14:6, அப்போஸ்தலர் 4:12)! இயேசுவை நீங்கள் உங்களுடைய இரட்சகராக நம்புகிறீர்களா?

இயேசு உங்கள் “சொந்த” இரட்சகராக இருக்கிறாரா? பலர் கிறிஸ்தவத்தை சபையில் கலந்துகொள்பவர்கள், சில சடங்குகளை ஆசரிப்பது, மற்றும் / அல்லது சில பாவங்களைச் செய்யாமல் இருப்பதுதான் என கருதுகின்றனர். அது கிறிஸ்தவம் அல்ல. உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவு அல்லது ஐக்கியத்தில் இருப்பதாகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் சொந்த விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இயேசுவின்மேல் வைக்கிறீர்கள். மற்றவர்களின் விசுவாசத்தால் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை. சில நற்செயல்களை செய்வதன் மூலம் யாரும் மன்னிக்கப்படுவதில்லை. இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி இயேசுவை உங்கள் வாழ்வில் இரட்சகராக தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வதாகும். மேலும் உங்களுடைய பாவங்களுக்கான தண்டனையின் விலைக்கிரயத்தை செலுத்தும்படியாக அவர் மரித்தார் என்றும் அதை தம்முடைய உயிர்த்தெழுதலினாலே உறுதிபடுத்தினார் என்றும் பரிபூரணமாக நம்பவேண்டும் (யோவான் 3:16). இயேசு தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராக இருக்கிறாரா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட அல்லது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள். நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். “ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். எனக்கு அருளிய இலவச பரிசாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!”

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

[English]



[முகப்பு பக்கம்]

இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.