இயேசு எப்படிப்பட்ட தோற்றத்தில் இருந்தார்?

கேள்வி இயேசு எப்படிப்பட்ட தோற்றத்தில் இருந்தார்? பதில் இயேசு அவருடைய மாம்சத்தில் வந்த மானுட அவதார காலத்தில் எப்படி இருந்தார் என்று வேதாகமம் எங்கும் ஒரு சரீர விளக்கத்தை கொடுக்கவில்லை. அவரைக் குறித்த சரீரத் தோற்ற விளக்கத்திற்கு நாம் பெற்றிருக்கிற மிக நெருக்கமான விஷயம் ஏசாயா 53:2 இல் உள்ளது, “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” இவை அனைத்தும் நமக்குச் சொல்வது என்னவென்றால், இயேசுவின் தோற்றமானது…

கேள்வி

இயேசு எப்படிப்பட்ட தோற்றத்தில் இருந்தார்?

பதில்

இயேசு அவருடைய மாம்சத்தில் வந்த மானுட அவதார காலத்தில் எப்படி இருந்தார் என்று வேதாகமம் எங்கும் ஒரு சரீர விளக்கத்தை கொடுக்கவில்லை. அவரைக் குறித்த சரீரத் தோற்ற விளக்கத்திற்கு நாம் பெற்றிருக்கிற மிக நெருக்கமான விஷயம் ஏசாயா 53:2 இல் உள்ளது, “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” இவை அனைத்தும் நமக்குச் சொல்வது என்னவென்றால், இயேசுவின் தோற்றமானது மற்ற மனிதர்களைப் போலவே இருந்தது என்பதாகும், அதாவது அவர் சாதாரண தோற்றமுடையவராக இருந்தார். இங்கே ஏசாயா தீர்க்கதரிசி வரவிருக்கும் பாடநுபவிக்கும் தாசன் தாழ்ந்த நிலையில் இருந்து எழும்புவார் என்றும், ராஜ பதவியின் வழக்கமான அடையாளங்கள் எதையும் அணிந்திருக்க மாட்டார் என்றும், அவருடைய உண்மையான அடையாளத்தை விசுவாசத்தின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார்.

கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு முன்பு அவர் வாரினால் அடிக்கப்படுவார் என ஏசாயா மேலும் விவரிக்கிறார். “மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்” (ஏசாயா 52:14), இந்த வார்த்தைகள் அவர் இனி ஒரு மனிதனைப் போல தோற்றமளிக்காத அளவுக்கு அவர் அனுபவித்த பாடுகளையும் கொடுமையையும் விவரிக்கிறது (மத்தேயு 26:67, 27:30; யோவான் 19:3). அவரது தோற்றம் மிகவும் அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

இன்று இயேசுவைப் பற்றிய பெரும்பாலான படங்கள் அவரது மெய்யான உருவத்தைக் குறிப்பிடும் துல்லியமானது இல்லை. இயேசு ஒரு யூதர், அதனால் அவர் கருமையான சருமம், கருமையான கண்கள் மற்றும் கருமையான கூந்தலைக் கொண்டிருக்கலாம். இது பல நவீன படங்களில் பொன்னிறமுடி, நீலக்கண், பொலிவான தோற்றம் கொண்ட இயேசுவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று மட்டும் தெளிவாகிறது: அவர் உண்மையில் எப்படி இருந்தார் என்பதை நாம் அறிவது அவ்வளவு முக்கியமான காரியம் என்றால், அவருடன் மூன்று வருடங்களைக் கழித்த அப்போஸ்தலராகிய மத்தேயு, பேதுரு மற்றும் யோவான் போன்றோர், மேலும் அவருடைய சொந்த சகோதரர்களான யாக்கோபு மற்றும் யூதா போன்றவர்ளை அல்லாமல் வேறு யாரும் நிச்சயமாக நமக்கு ஒரு துல்லியமான விளக்கத்தை அளிக்க முடியாது. ஆனாலும், இந்த புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் இயேசுவினுடைய சரீர பண்புகளைப் பற்றி எந்த விவரங்களையும் நமக்கு வழங்கவில்லை.

[English]



[முகப்பு பக்கம்]

இயேசு எப்படிப்பட்ட தோற்றத்தில் இருந்தார்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.