உங்கள் ஆத்துமாவை பிசாசுக்கு விற்க முடியுமா?

கேள்வி உங்கள் ஆத்துமாவை பிசாசுக்கு விற்க முடியுமா? பதில் டாக்டர் ஃபாஸ்டஸின் கற்பனையான கதையில், ஒரு மனிதன் பிசாசுடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறான்: அவனது சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் ஈடாக, மனிதன் 24 வருடங்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியையும் இன்பங்களையும் பெற வேண்டும். பிசாசு வர்த்தகத்திற்கு ஒப்புக்கொள்கிறது, மற்றும் டாக்டர் ஃபாஸ்டஸ் ஒரு பருவத்திற்கு பாவத்தின் இன்பங்களை அனுபவிக்கிறார், ஆனால் அவரது அழிவு சீல் வைக்கப்பட்டுள்ளது. 24 வருடங்களின் முடிவில், ஃபாஸ்டஸ் பிசாசின் திட்டங்களை முறியடிக்க முயன்றார், ஆனால்…

கேள்வி

உங்கள் ஆத்துமாவை பிசாசுக்கு விற்க முடியுமா?

பதில்

டாக்டர் ஃபாஸ்டஸின் கற்பனையான கதையில், ஒரு மனிதன் பிசாசுடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறான்: அவனது சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் ஈடாக, மனிதன் 24 வருடங்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியையும் இன்பங்களையும் பெற வேண்டும். பிசாசு வர்த்தகத்திற்கு ஒப்புக்கொள்கிறது, மற்றும் டாக்டர் ஃபாஸ்டஸ் ஒரு பருவத்திற்கு பாவத்தின் இன்பங்களை அனுபவிக்கிறார், ஆனால் அவரது அழிவு சீல் வைக்கப்பட்டுள்ளது. 24 வருடங்களின் முடிவில், ஃபாஸ்டஸ் பிசாசின் திட்டங்களை முறியடிக்க முயன்றார், ஆனால் அவர் ஒரு பயங்கரமான மரணத்தை சந்திக்கிறார். இந்த புராணக்கதை ஒரு அறநெறி கதையாகவும், பாவத்தின் ஊதியத்திற்கான உருவகமாகவும் நன்றாக கிரியை செய்கிறது, ஆனால் அதன் சதி விவரங்கள் வேதாகமத்தில் இல்லை.

வேதாகமத்தில் சாத்தானுக்கு “தன் ஆத்துமாவை விற்ற” ஒரு உதாரணம் இல்லை, பிசாசுடன் பேரம் பேசுவது சாத்தியம் என்று அது ஒருபோதும் குறிக்கவில்லை. சாத்தானைப் பற்றி வேதம் வெளிப்படுத்தும் சில விஷயங்கள் இதோ இங்கே:

1) தேவதூதர்களையுங்கூட எதிர்க்கும் சக்தி சாத்தானுக்கு உள்ளது (யூதா 9; தானியேல் 10:12-13).

2) சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷமிட்டு ஏமாற்ற முயல்கிறான் (2 கொரிந்தியர் 11:14-15).

3) சாத்தானின் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை தேவன் வழங்கியுள்ளார் (எபேசியர் 6:11-12).

4) சாத்தானின் சக்தி தேவனுடைய சித்தத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது (யோபு 1:10-12; 1 கொரிந்தியர் 10:13).

5) “இப்பிரபஞ்சத்தின் தேவன்”, சாத்தான் உலகில் கிறிஸ்து இல்லாமல் வாழ்பவர்கள் (அவிசுவாசிகள்) மீது ஆதிக்கம் செலுத்துகிறான் (2 கொரிந்தியர் 4:4).

நிச்சயமாக, பிலிப்பி பட்டணத்தில் இளம் குறிசொல்லும் பெண் போன்ற நேரடியாக சாத்தானிய கட்டுப்பாட்டில் பாதிக்கப்படுபவர்கள் இருக்கிறார்கள் (அப். 16:16-19). மாயவித்தைக்காரர்களான சீமோன் (அப். 8:9-11) மற்றும் எலிமா (அப். 13:8) போன்ற பிசாசின் வேலைக்கு தங்களை அர்ப்பணித்தவர்களும் இருக்கிறார்கள். இருப்பினும், இந்த மூன்று எடுத்துக்காட்டுகளில் ஒவ்வொன்றிலும், தேவனுடைய வல்லமை சாத்தானின் அடிமைத்தனத்தை விட மேலோங்குகிறது. உண்மையில், சீமோனுக்கு மனந்திரும்ப ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது (அப். 8:22). வெளிப்படையாக, சீமோனின் ஆத்துமாவை மாற்ற முடியாத வகையில் விற்றுப்போடும் “விற்பனை” எதுவும் அங்கே இல்லை.

கிறிஸ்து இல்லாமல், நாம் அனைவரும் மரணத்தின் ஆக்கினைத்தீர்ப்புக்கு கீழ் இருக்கிறோம் (ரோமர் 3:23). நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன், நாம் அனைவரும் பிசாசுக்கு அடிமைகளாக இருந்தோம், 1 யோவான் 5:19 சொல்வது போல், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” கர்த்தரைத் துதியுங்கள், நமக்கு ஒரு புதிய எஜமானர் இருக்கிறார், அவர் எந்த பாவத்தின் சங்கிலிகளையும் உடைத்து நம்மை விடுவிக்க முடியும் (1 கொரிந்தியர் 6:9-11; மாற்கு 5:1-15).

[English]



[முகப்பு பக்கம்]

உங்கள் ஆத்துமாவை பிசாசுக்கு விற்க முடியுமா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.