உலகளாவிய திருச்சபைக்கும் உள்ளூர் திருச்சபைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

கேள்வி உலகளாவிய திருச்சபைக்கும் உள்ளூர் திருச்சபைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? பதில் உள்ளூர் திருச்சபைக்கும் உலகளாவிய திருச்சபைக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்து கொள்ள, ஒவ்வொன்றின் ஒரு அடிப்படை வரையறையை நாம் பெறவேண்டும். உள்ளூர் திருச்சபை என்பது இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கிறதாகும். உலகளாவிய திருச்சபை உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவிலுள்ள எல்லா விசுவாசிகளாலும் உட்படுத்தி இருக்கிறது. திருச்சபை என்ற சொல்லானது கிரேக்க வார்த்தையின் ஒரு மொழிபெயர்ப்பாகும், அதாவது ஒரு கூட்டத்தோடு…

கேள்வி

உலகளாவிய திருச்சபைக்கும் உள்ளூர் திருச்சபைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

பதில்

உள்ளூர் திருச்சபைக்கும் உலகளாவிய திருச்சபைக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்து கொள்ள, ஒவ்வொன்றின் ஒரு அடிப்படை வரையறையை நாம் பெறவேண்டும். உள்ளூர் திருச்சபை என்பது இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கிறதாகும். உலகளாவிய திருச்சபை உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவிலுள்ள எல்லா விசுவாசிகளாலும் உட்படுத்தி இருக்கிறது. திருச்சபை என்ற சொல்லானது கிரேக்க வார்த்தையின் ஒரு மொழிபெயர்ப்பாகும், அதாவது ஒரு கூட்டத்தோடு அல்லது “சபை” (1 தெசலோனிக்கேயர் 2:14; 2 தெசலோனிக்கேயர் 1:1) என்று வருகிறது. இந்த வார்த்தை விசுவாசிகளை இரட்சிப்பதற்கும், பரிசுத்தமாக்குதலுக்கும் தேவனால் “அழைக்கப்பட்டவர்களாகும்”. மேலும், “கர்த்தருக்குச் சொந்தமானவர்கள்” என்றும் பொருள்படும் மற்றொரு கிரேக்க வார்த்தையானது, “கர்த்தருக்கு உரியது” எனப் பொருள்படும், ஆனால் அது புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, மேலும் திருச்சபைக்கு நேரடியாக குறிப்பு கொடுக்கப்படவில்லை (1 கொரிந்தியர் 11:20; வெளிப்படுத்துதல் 1:10) ).

கிறிஸ்துவிற்கு விசுவாசம் வைத்து மற்றும் அவரையே பற்றிச்சார்ந்து கொள்ளுதல் உள்ள அனைவரும் உள்ளூர் சபையாக இருக்கிறார்கள். பெரும்பாலும், எக்கிளீசியாவின் கிரேக்க வார்த்தையானது உள்ளூர் கூடிவருதலைக் (1 தெசலோனிக்கேயர் 1:1; 1 கொரிந்தியர் 4:17; 2 கொரிந்தியர் 11:8) குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளூர் திருச்சபை இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. பெரிய நகரங்களில் பல உள்ளூர் திருச்சபைகள் உள்ளன.

உலகளாவிய திருச்சபை உலகம் முழுவதும் கொடுக்கப்பட்ட பெயர். இந்த வழக்கில் திருச்சபையின் கருத்து கூடுகை மட்டுமல்ல, ஆனால் திருச்சபையில் அமைந்திருக்கும். திருச்சபையானது ஒரு உத்தியோகபூர்வ கூட்டத்தை நடத்தவில்லை என்றாலும் கூட திருச்சபை தான். அப்போஸ்தலர் 8:3-ல், சபையினர் அவர்கள் வீடுகளில் இருக்கும்போதே இன்னும் திருச்சபையாக இருப்பதைக் காணலாம். அப்போஸ்தலர் 9:31 ல், பன்மைச்சொல் திருச்சபைகள் என்று KJV-யில் மொழிபெயர்த்திருப்பது உண்மையிலேயே ஒருமையாக திருச்சபை என்றே இருக்க வேண்டும், இது உலகளாவிய திருச்சபையை விவரிக்கிறது, உள்ளூர் சபைகளை மட்டும் அல்ல. சில சமயங்களில் உலகளாவிய திருச்சபை “கண்ணுக்குத் தெரியாத திருச்சபை” என்று அழைக்கப்படுகிறது – இது தெரு முகவரி, ஜி.பி.எஸ் அல்லது உடல் கட்டமைப்பு போன்றவைகள் இல்லாததைக் குறிக்கக்கூடியது, மற்றும் உண்மையாகவே இரட்சிக்கப்படுபவர் யார் என்பதைக் தேவன் மட்டுமே காண முடியும். திருச்சபை “கண்ணுக்கு தெரியாத” திருச்சபை என வேதவாக்கியத்தில் எங்கும் விவரிக்கப்படவில்லை, மற்றும் ஒரு மலை மீதுள்ள பட்டணம் அது நிச்சயமாக தெரியும் என்று பொருள் (மத்தேயு 5:14). உலகளாவிய திருச்சபை பற்றி பேசும் வசனங்களை இங்கே காண்கிறோம்: 1 கொரிந்தியர் 12:28; 15:9; மத்தேயு 16:18; எபேசியர் 1:22-23; கொலோசெயர் 1:18.

[English]



[முகப்பு பக்கம்]

உலகளாவிய திருச்சபைக்கும் உள்ளூர் திருச்சபைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.