எசேக்கியல் 28 ஆம் அதிகாரத்தில் உள்ள தீரு ராஜாவின் தீர்க்கதரிசனம் சாத்தானைக் குறிக்கிறதா?

கேள்வி எசேக்கியல் 28 ஆம் அதிகாரத்தில் உள்ள தீரு ராஜாவின் தீர்க்கதரிசனம் சாத்தானைக் குறிக்கிறதா? பதில் முதல் பார்வையில், எசேக்கியேல் 28:11-19 இல் உள்ள தீர்க்கதரிசனம் ஒரு மனித ராஜாவைக் குறிக்கிறதாக தோன்றுகிறது. வேதாகமத்தில் உள்ள சில வலுவான தீர்க்கதரிசன கண்டனங்களைப் பெற்றதுதான் தீரு (ஏசாயா 23:1–18; எரேமியா 25:22; 27:1–11; எசேக்கியேல் 26:1–28:19; யோவேல் 3:4–8; ஆமோஸ் 1:9,10). தீரு அதன் அண்டை நாடுகளை சுரண்டுவதன் மூலம் அதன் செல்வத்தை கட்டியெழுப்புவதற்கு பெயர் பெற்றது. பண்டைய…

கேள்வி

எசேக்கியல் 28 ஆம் அதிகாரத்தில் உள்ள தீரு ராஜாவின் தீர்க்கதரிசனம் சாத்தானைக் குறிக்கிறதா?

பதில்

முதல் பார்வையில், எசேக்கியேல் 28:11-19 இல் உள்ள தீர்க்கதரிசனம் ஒரு மனித ராஜாவைக் குறிக்கிறதாக தோன்றுகிறது. வேதாகமத்தில் உள்ள சில வலுவான தீர்க்கதரிசன கண்டனங்களைப் பெற்றதுதான் தீரு (ஏசாயா 23:1–18; எரேமியா 25:22; 27:1–11; எசேக்கியேல் 26:1–28:19; யோவேல் 3:4–8; ஆமோஸ் 1:9,10). தீரு அதன் அண்டை நாடுகளை சுரண்டுவதன் மூலம் அதன் செல்வத்தை கட்டியெழுப்புவதற்கு பெயர் பெற்றது. பண்டைய எழுத்தாளர்கள் தீரு நகரத்தை நேர்மையற்ற வணிகர்களால் நிரப்பப்பட்ட நகரம் என்று குறிப்பிட்டனர். தீரு மத விக்கிரகாராதனை மற்றும் விபச்சார வேசித்தனத்தின் மையமாக இருந்தது. வேதாகம தீர்க்கதரிசிகள் தீருவை அதன் பெரும் செல்வம் மற்றும் மூலோபாய இருப்பிடத்தைக் கொண்டு வந்த பெருமைக்காக கண்டித்தனர். எசேக்கியேல் 28:11-19 இல் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலின் நாளில் தீரு ராஜாவுக்கு எதிராக குறிப்பாக வலுவான குற்றச்சாட்டாகத் தோன்றுகிறது, ராஜாவின் தீராத பெருமை மற்றும் பேராசைக்காக அவர் கண்டனம் தெரிவித்தார்.

இருப்பினும், எசேக்கியேல் 28:11-19 இல் உள்ள சில விளக்கங்கள் எந்த ஒரு மனித ராசாவுக்கும் பொருந்தாமல் அதற்கும் அப்பாற்பட்டவை. எந்த அர்த்தத்திலும் ஒரு பூமிக்குரிய ராஜா “ஏதேனில்” அல்லது “காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்” அல்லது “தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில்” இருப்பதாக கூற முடியாது. எனவே, பெரும்பாலான வேதாகம விளக்கவுரையாளர்கள் எசேக்கியேல் 28:11-19 இரட்டை நிறைவேறுதலைக் கொண்ட தீர்க்கதரிசனம் என்று நம்புகிறார்கள், இது தீரு ராஜாவின் பெருமையை சாத்தானின் பெருமையுடன் ஒப்பிடுகிறது. தீரு ராஜா உண்மையில் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாக சிலர் முன்மொழிகின்றனர், இது இருவருக்கும் இடையிலான தொடர்பை இன்னும் சக்திவாய்ந்ததாகவும் பொருந்தக்கூடியதாகவும் ஆக்குகிறது.

அவனது வீழ்ச்சிக்கு முன்பாக்க, சாத்தான் உண்மையில் ஒரு அழகான தேவனுடைய சிருஷ்டி (எசேக்கியல் 28:12-13). அவன் எல்லா தேவதூதரிலும் மிக அழகான மற்றும் சக்திவாய்ந்தவனாக இருக்கலாம். “காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்” என்ற சொற்றொடர் சாத்தான் தேவனுடைய இருப்பை “பாதுகாத்துக்கொண்டிருந்த” தேவதூதன் என்பதைக் குறிக்கிறது. பெருமை சாத்தானின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அவனை மிகவும் அழகாக சிருஷ்டித்த பெருமையை தேவனுக்கு கொடுப்பதற்கு பதிலாக, சாத்தான் தேவனுக்கு முன்பாக தன்னையே பெருமைப்படுத்திக்கொண்டான், அவனது உயர்ந்த நிலைக்கு அவனே காரணம் என்று நினைத்தான். சாத்தானின் கலகம் நிமித்தம் தேவன் சாத்தானை தனது சமுகத்தில் இருந்து துரத்தினார், இறுதியில், தேவன் சாத்தானை நித்திய காலத்திற்கும் எரிகிற அக்கினிக்கடலில் எரிந்து கண்டனம் செய்வார் (வெளிப்படுத்துதல் 20:10).

சாத்தானைப் போலவே, தீருவின் மனித ராஜாவும் பெருமைப்பட்டான். தேவனுடைய இறையாண்மையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, தீருவின் ராஜா தனது சொந்த ஞானம் மற்றும் வலிமைக்கு தீருவின் செல்வத்தைக் காரணம் காட்டினான். அவனது ஆடம்பரமான நிலைப்பாட்டில் திருப்தி அடையாத தீரு ராஜா மேலும் மேலும் முயன்றான், இதன் விளைவாக தீரு மற்ற நாடுகளின் நன்மைகளைப் பெற்று, மற்றவர்களின் இழப்பில் தனது சொந்த செல்வத்தை விரிவுபடுத்தியது. ஆனால் சாத்தானின் பெருமை அவனது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் இறுதியில் அவனது நித்திய அழிவுக்கு வழிவகுக்கும், தீரு நகரம் அதன் செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்தை இழக்கும். தீருவின் மொத்த அழிவு பற்றிய எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் நேபுகாத்நேச்சார் (எசேக்கியல் 29:17-21) மற்றும் இறுதியில் மகா அலெக்சாண்டர் போன்றோர்களில் ஓரளவு நிறைவேறியது.

[English]



[முகப்பு பக்கம்]

எசேக்கியல் 28 ஆம் அதிகாரத்தில் உள்ள தீரு ராஜாவின் தீர்க்கதரிசனம் சாத்தானைக் குறிக்கிறதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.