ஏன் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் /முகமதியர்கள் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர்?

கேள்வி ஏன் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் /முகமதியர்கள் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர்? பதில் முதலாவது நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், எல்லா அரேபியர்களும் முகமதியர்கள் அல்ல மற்றும் எல்லா முகமதியர்களும் அரேபியர்கள் அல்ல என்பதாகும். அநேக அரேபியர்கள் முகமதியர்களாக இருக்கிற போதும் அநேக முகமதியரல்லாத அரேபியர்களும் இருக்கின்றனர். அரேபிய முகமதியர்களை பார்க்கிலும் அரேபியரல்லாத முகமதியர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அதிகமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இரண்டாவதாக, எல்லா அரேபியர்களும் யூதர்களை வெறுக்கிறதில்லை மற்றும் எல்லா…

கேள்வி

ஏன் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் /முகமதியர்கள் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர்?

பதில்

முதலாவது நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், எல்லா அரேபியர்களும் முகமதியர்கள் அல்ல மற்றும் எல்லா முகமதியர்களும் அரேபியர்கள் அல்ல என்பதாகும். அநேக அரேபியர்கள் முகமதியர்களாக இருக்கிற போதும் அநேக முகமதியரல்லாத அரேபியர்களும் இருக்கின்றனர். அரேபிய முகமதியர்களை பார்க்கிலும் அரேபியரல்லாத முகமதியர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அதிகமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இரண்டாவதாக, எல்லா அரேபியர்களும் யூதர்களை வெறுக்கிறதில்லை மற்றும் எல்லா முகமதியரும் யூதர்களை வெறுக்கிறதில்லை அதுபோலவே எல்லா யூதர்களும் அரேபியர்களையும் முகமதியரையும் வெறுக்கிறதில்லை என்பதை நினைவு கூறவேண்டியது முக்கியம். நாம் ஒரேமாதிரியான எண்ணங்கொண்ட ஜனங்களிடமிருந்து கவனமாக விலகியிருக்கவேண்டும். மேலும் பொதுவான நிலையில் பார்த்தால் அரேபியர்களும் முகமதியர்களும் யூதர்கள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் உள்ளவர்கள் போலவே யூதர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் உண்டு என்பதாக அறிந்துகொள்ளலாம்.

இந்த வெளிப்படையான குரோதம் மற்றும் விரோதத்திற்கான வேத விளக்கத்திற்கு வரலாறானது ஆபிரகாமிற்கு கொண்டு செல்கிறது. யூதர்கள் ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் வம்சாவளியில் வந்தவர்கள். அரேபியர்கள் ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் வம்சாவளியில் வந்தவர்கள். இஸ்மவேல் அடிமையின் குமாரனாக இருக்கிறான் (ஆதியாகமம் 16:1-6) ஈசாக்கு ஆபிரகாமுடைய சுதந்தரத்தை சுதந்தரிக்கும் வாக்குத்தத்தத்தின் புத்திரனாக இருக்கிறான் (ஆதியாகமம் 21:1-3), எனவே இந்த இரண்டு குமாரர்களுக்குமிடையே சில விரோதங்கள் இருப்பது சாத்தியமே. இஸ்மவேல் ஈசாக்கை பரியாசம்பண்ணினதால் (ஆதியாகமம் 21:9), சாராள் ஆபிரகாமிடத்தில் ஆகாரையும் இஸ்மவேலையும் புறம்பே தள்ளும்படியாக கேட்டுக்கொண்டாள் (ஆதியாகமம் 21:11-21). இதுவும் இஸ்மவேலுடைய இருதயத்திலே ஈசாக்குக்கு விரோதமான கசப்பை உண்டாக்கிற்று. தேவதூதன் ஆகாரிடத்திலே தீர்க்கதரிசனமாக இஸ்மவேல் “தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்” என்று சொன்னான் (ஆதியாகமம் 16:11-12).

இஸ்லாமிய மதம் அதில் விசுவாசமுள்ள அநேக அரேபியர்கள் நிமித்தமாய் யூதர்களுக்கு எதிராகவுள்ள தனது பகைமையை இன்னும் ஆழமாக்கியது. குரான் இஸ்லாமியர்களுக்காக யூதர்களுக்கு விரோதமான சில முரண்பாடான உபதேசங்களை கொண்டுள்ளது. யூதர்களை சகோதரர்களாக பாவிக்க வேண்டும் என்று ஒரு புறமும் யூதர்கள் இஸ்லாமியத்திற்கு மாறாவிட்டால் அவர்களை இஸ்லாமியர்கள் தாக்கும்படியாக மறுபுறம் கட்டளையும் கொடுக்கப்பட்டுள்ளது. யார் ஆபிரகாமின் உண்மையான வாக்குத்தத்தத்தின் குமாரன் என்பதில் முரண்பாட்டை குரான் அறிமுகப்படுத்துகிறது. எபிரேய வேதாகமத்தில் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் என்றும் குரானில் இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்மவேலையே ஆபிரகாம் தேவனுக்கு பலியாக கொடுக்க போனார் ஈசாக்கை அல்ல என்று குரான் போதிக்கிறது (இது ஆதியாகமம் 22 அதிகாரத்திற்கு முரணானது). யார் வாக்குத்தத்தத்தின் குமாரன் என்கிற வாதமே இப்பொழுது யுத்தங்களுக்கு வழிவகுக்கிறது.

ஈசாக்குக்கும் இஸ்மவேலுக்கும் இருக்கிற அந்த பழைமையான கசப்புக்கள் தான் இன்று யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இருக்கக்கூடிய எல்லாவித விரோதங்களுக்கும் காரணம் என்று விளக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றின் படி யூதர்களும் அரேபியர்களும் சமாதானத்தோடும் ஒருவருக்கொருவர் வித்தியாசமில்லாமலும் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. இவர்களின் பகைக்கான முதலாவது காரணம் நவீன காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளே. இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜக்கிய நாடுகள் அரேபியர்கள் குடியிருந்த (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரவேலின் ஒரு பகுதியை யூதர்களுக்கு கொடுத்தனர். யூதர்கள் அந்த நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதை அநேக அரேபியர்கள் கடுமையாக எதிர்த்தனர். அரபு நாடுகள் இனைந்து யூதர்களை அப்பகுதியில் இருந்து விரட்ட யுத்தங்களை தொடுத்தனர், ஆனால் அவர்கள் தோல்வியை தழுவினர். அது முதற்கொண்டு அண்டை நாடான இஸ்ரவேரருக்கும் அரேபியர்களுக்கும் மிக பெரிய பகைமை தொடர்ந்து நிலவிவருகிறது. இஸ்ரவேல் ஒரு சிறிய நிலப்பரப்பில் உள்ளது, அது ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய மிகப்பெரிய அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ளது. தேவன் ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபுக்கு கொடுத்த தேசத்தில் இஸ்ரவேலர் தேசமாக உருவாக வேண்டும் என்பது வேதாகமத்தின் அடிப்படையிலான நம்முடைய கண்ணோட்டம். அதே நேரத்தில் இஸ்ரவேலர்கள் அவர்களுடைய அயலகத்தாரான அரேபியர்களோடு சமாதானத்தோடும் நன்மதிப்போடும் நடந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று நாம் விசுவாசிக்கிறோம். சங்கீதம் 122:6 சொல்கிறது: “எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.”

[English]



[முகப்பு பக்கம்]

ஏன் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் /முகமதியர்கள் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.