ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு மோசமான பாவம் செய்ய முடியும்?

கேள்வி ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு மோசமான பாவம் செய்ய முடியும்? பதில் கிறிஸ்தவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள் — நாம் மரிக்கும் வரை அல்லது இயேசு திரும்பி வரும் வரை நாம் பாவத்திலிருந்து முற்றிலும் விடுபட மாட்டோம். இருப்பினும், ஒரு கிறிஸ்தவராக மாறுவது வாழ்க்கை மாற்றத்தில் விளைகிறது (2 கொரிந்தியர் 5:17). ஒரு நபர் மாம்சத்தின் கிரியைகளை உற்பத்தி செய்வதிலிருந்து விலகி (கலாத்தியர் 5:19-21) ஆவியின் கனியைக் காண்பிப்பார் (கலாத்தியர் 5:22-23), ஏனெனில்…

கேள்வி

ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு மோசமான பாவம் செய்ய முடியும்?

பதில்

கிறிஸ்தவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள் — நாம் மரிக்கும் வரை அல்லது இயேசு திரும்பி வரும் வரை நாம் பாவத்திலிருந்து முற்றிலும் விடுபட மாட்டோம். இருப்பினும், ஒரு கிறிஸ்தவராக மாறுவது வாழ்க்கை மாற்றத்தில் விளைகிறது (2 கொரிந்தியர் 5:17). ஒரு நபர் மாம்சத்தின் கிரியைகளை உற்பத்தி செய்வதிலிருந்து விலகி (கலாத்தியர் 5:19-21) ஆவியின் கனியைக் காண்பிப்பார் (கலாத்தியர் 5:22-23), ஏனெனில் அவருக்கு உள்ளே இருக்கும் பரிசுத்த ஆவியானவர் தனது வாழ்க்கையில் மேலும் மேலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். இந்த மாற்றம் உடனடியாக நிகழவில்லை, ஆனால் அது காலப்போக்கில் நிகழ்கிறது. ஒரு நபர் மாறிய வாழ்க்கையை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர்/அவள் ஒரு உண்மையான விசுவாசி அல்ல. கிறிஸ்தவர்கள் கடுமையான பாவங்களைச் செய்யலாம். கிறிஸ்தவர்கள் (அல்லது கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்) கொடூரமான குற்றங்களைச் செய்வதினால் வரலாறு நிரம்பியுள்ளது. இந்தப் பாவங்களுக்காகவும் இயேசு மரித்தார். அவற்றைச் செய்யாததற்கு மேலும் காரணம்!

1 கொரிந்தியர் 6:9-11 இல், அப்போஸ்தலன் பவுல் விசுவாசிகள் எந்த வகையான பாவ வாழ்க்கையிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறார். வசனம் 11 கூறுகிறது, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.” “இருந்தீர்கள்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். விசுவாசிகள் 9-10 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள காரியங்களைச் (பாவங்களைச்) செய்தார்கள், ஆனால் அவர்கள் இப்போது வேறுபட்டவர்கள். விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் இரட்சிக்கப்பட முடியுமா? ஆம். தொடர்ந்து பாவம் செய்து வாழ்பவன் விசுவாசியா? இல்லை. நாம் கிறிஸ்தவர்களாக மாறும்போது, நம் வாழ்க்கை மாறும். பாவம் நிறைந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்ளும் எவனும் பொய் சொல்கிறான், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான், அல்லது உண்மையில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் ஒழுக்கத்தை அனுபவிக்கப் போகிற ஒரு விசுவாசி (எபிரெயர் 12:5-11).

பாவம் செய்யும் அவிசுவாசிக்கும் பாவம் செய்யும் விசுவாசிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒருவர் தனது பாவத்தை நேசிக்கிறார், மற்றவர் அதை வெறுக்கிறார். கர்த்தருடன் நடக்கையில் தடுமாறும் விசுவாசி, அதற்காக வருந்துகிறான், அதை ஒப்புக்கொள்கிறான், மீண்டும் அதைச் செய்யக்கூடாது என்று விரும்புகிறான், அதைத் தவிர்க்க தேவனுடைய வல்லமையையும் கிருபையையும் பயன்படுத்த முயல்கிறான். அவர் எவ்வளவு பாவம் செய்ய முடியும் என்பதை அவர் கருத்தில் கொள்ளவில்லை, இன்னும் ஒரு கிறிஸ்தவராக கருதப்படுகிறார். மாறாக, எதிர்காலத்தில் பாவத்தின் தோற்றத்தைக் கூட அவர் எவ்வாறு தவிர்க்கலாம் என்று அவர் கருதுகிறார்.

[English]


[முகப்பு பக்கம்]


ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு மோசமான பாவம் செய்ய முடியும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.