ஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வதைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

கேள்வி ஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வதைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? பதில் ஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வது மற்றும் விசுவாசிகள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதவர்களாக இருப்பதுப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பது பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. 1 கொரிந்தியர் 7:7-8-ல் பவுல் நமக்குச் சொல்கிறார்: “எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது….

கேள்வி

ஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வதைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்

ஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வது மற்றும் விசுவாசிகள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதவர்களாக இருப்பதுப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பது பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. 1 கொரிந்தியர் 7:7-8-ல் பவுல் நமக்குச் சொல்கிறார்: “எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.” சிலருக்கு தனிமையாக திருமணம் செய்துகொள்ளாமல் ஏகாந்தமாக இருக்கும் வரமும், சிலருக்கு திருமணம் செய்து கொள்ளும் வரமும் கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறுவதைக் கவனியுங்கள். கிட்டத்தட்ட எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று தோன்றினாலும், அது அனைவருக்கும் தேவனுடைய விருப்பம் என்று இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. உதாரணமாக, திருமணம் மற்றும் / அல்லது குடும்பத்துடன் வரும் கூடுதல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தங்களைப் பற்றி பவுல் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் தனது முழு வாழ்க்கையையும் தேவனுடைய வார்த்தையை பரப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் திருமணம் செய்திருந்தால் அவர் அத்தகைய பயனுள்ள செய்தியாளராக இருந்திருக்க மாட்டார்.

மறுபுறம், சிலர் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுகிறார்கள், தேவனுக்கு ஒரு ஜோடியாக மற்றும் ஒரு குடும்பமாக சேவை செய்கிறார்கள். இரண்டு வகையான மக்களும் சமமாக முக்கியம் உள்ளவர்கள் ஆகும். உங்கள் வாழ்நாள் முழுவதும் கூட தனிமையில் இருப்பது பாவம் அல்ல. வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம், ஒரு துணையை கண்டுபிடித்து குழந்தைகளைப் பெறுவது அல்ல, மாறாக தேவனுக்கு சேவை செய்வது. நம்முடைய வேதாகமத்தைப் படித்து ஜெபிப்பதன் மூலம் தேவனுடைய வார்த்தையைப் பற்றி நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தேவனை நமக்கு வெளிப்படுத்தும்படி நாம் கேட்டால், அவர் பதிலளிப்பார் (மத்தேயு 7:7), அவருடைய நற்செயல்களை நிறைவேற்ற நம்மைப் பயன்படுத்தும்படி அவரிடம் கேட்டால், அவர் அதையும் செய்வார். “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12: 2).

தனிமையாக ஏகாந்தவாழ்வு வாழ்வது ஒரு சாபமாகவோ அல்லது ஒரு ஆணோ அக்கத்து பெண்ணோ திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருக்கும்போது “ஏதோ தவறு” இருப்பதற்கான அறிகுறியாக அவர்களைப் பார்க்கக்கூடாது. பெரும்பாலான மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள், பெரும்பாலான மக்கள் திருமணம் செய்வது தேவனுடைய விருப்பம் என்றும் வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது என்றாலும், ஒரு கிறிஸ்தவர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏகாந்தமாக இருப்பது எந்த வகையிலும் “இரண்டாம் வகுப்பு” கிறிஸ்தவர் என்று அர்த்தம் அல்ல. 1 கொரிந்தியர் 7 குறிப்பிடுவது போல, ஏகாந்தம் என்பது ஏதேனும் இருந்தால், அது உயர்ந்த அழைப்பு. வாழ்க்கையில் எல்லாவற்றையும் போலவே, திருமணத்தைப் பற்றியும் நாம் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்க வேண்டும் (யாக்கோபு 1:5). தேவனுடைய திட்டத்தைப் பின்பற்றுவது, அது திருமணமாக இருந்தாலும், ஏகாந்தமாக இருப்பதாக இருந்தாலும் சரி, அது தேவன் நமக்காக விரும்பும் உற்பத்தித்திறன் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

[English]



[முகப்பு பக்கம்]

ஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வதைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *