கடைசி நியாயத்தீர்ப்பில் என்ன சம்பவிக்கிறது?

கேள்வி கடைசி நியாயத்தீர்ப்பில் என்ன சம்பவிக்கிறது? பதில் கடைசி நியாயத்தீர்ப்பைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதைத் தவிர்க்க முடியாது என்பதாகும். கடைசிக் காலங்களில் தீர்க்கதரிசனத்தை நாம் எப்படி விளக்கலாம் என்பதை பொருட்படுத்தாமல், “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரெயர் 9:27). நாம் அனைவரும் நம் சிருஷ்டிகரிடம் சந்திக்கப்போகும் தெய்வீக நியமனத்தைக் கொண்டிருக்கிறோம். கடைசி நியாயத்தீர்ப்பின் சில விவரங்களை அப்போஸ்தலனாகிய யோவான் பதிவு செய்திருக்கிறார்: “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும்…

கேள்வி

கடைசி நியாயத்தீர்ப்பில் என்ன சம்பவிக்கிறது?

பதில்

கடைசி நியாயத்தீர்ப்பைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதைத் தவிர்க்க முடியாது என்பதாகும். கடைசிக் காலங்களில் தீர்க்கதரிசனத்தை நாம் எப்படி விளக்கலாம் என்பதை பொருட்படுத்தாமல், “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரெயர் 9:27). நாம் அனைவரும் நம் சிருஷ்டிகரிடம் சந்திக்கப்போகும் தெய்வீக நியமனத்தைக் கொண்டிருக்கிறோம். கடைசி நியாயத்தீர்ப்பின் சில விவரங்களை அப்போஸ்தலனாகிய யோவான் பதிவு செய்திருக்கிறார்:

“பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்” (வெளிப்படுத்துதல் 20:11-15).

இந்த குறிப்பிடத்தக்க வேதப்பகுதி நமக்கு கடைசி நியாயத்தீர்ப்பை அறிமுகப்படுத்துகிறது—அதாவது மனித வரலாற்றின் முடிவு மற்றும் நித்திய ராஜ்யத்தின் ஆரம்பம் வரப்போவதைக் குறிப்பிடுகிறது. நாம் இதை உறுதியாக நம்பலாம்: நாம் கேட்பதில் எந்த தவறும் செய்யக்கூடாது, ஏனென்றால் நாம் ஒரு நாள் நீதியுள்ள தேவனால் நியாயமாக நியாயந்தீர்க்கப்படுவோம் (மத்தேயு 5:48; 1 யோவான் 1:5). இது பல மறுக்க முடியாத சான்றுகளினால் வெளிப்படுகிறது. முதலில், தேவன்தாமே முற்றிலும் நீதியுள்ளவராகவும் நியாயமானவராகவும் இருப்பார் (அப்போஸ்தலர் 10:34; கலாத்தியர் 3:28). இரண்டாவதாக, தேவனை ஒருவராலும் ஏமாற்ற முடியாது (கலாத்தியர் 6:7). மூன்றாவதாக, தேவனை எந்தவிதமான தப்பெண்ணங்கள், சாக்குபோக்குகள் அல்லது பொய்களால் வீழ்த்த முடியாது (லூக்கா 14:16-24).

தேவனுடைய குமாரனாக, இயேசு கிறிஸ்து நீதியுள்ள நியாயாதிபதியாக இருப்பார் (யோவான் 5:22). அனைத்து அவிசுவாசிகளும் “பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில்” கிறிஸ்துவால் நியாயந்தீர்க்கப்படுவார்கள், மேலும் அவர்கள் செய்த கிரியைகளுக்கு தக்கதாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவிசுவாசிகள் தங்களுக்கு எதிராக கோபத்தை சேமித்து வைத்திருப்பார்கள் (ரோமர் 2:5) மற்றும் “தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” (ரோமர் 2:6) என்று வேதாகமம் மிகத்தெளிவாக கூறுகிறது. (“கிறிஸ்துவின் நியாயாசனம்” (ரோமர் 14:10) என்ற வித்தியாசமான நியாயத்தீர்ப்பில் விசுவாசிகளும் நியாயந்தீர்க்கப்படுவார்கள், ஆனால் கிறிஸ்துவின் நீதி நமக்கு அளிக்கப்பட்டு, நம்முடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதால், நாம் அப்போது வெகுமதிகளைப் பெறுவோம், நம்முடைய கிரியைகளின்படி தண்டிக்கப்படுவதில்லை.) கடைசி நியாயத்தீர்ப்பில், இரட்சிக்கப்படாதவரின் தலைவிதியானது சர்வஞானியாகிய தேவனுடைய கரங்களில் இருக்கும், அவர் அனைவரையும் அவரது ஆத்துமாவின் நிலைக்கு ஏற்ப தீர்ப்பளிப்பார்.

இப்போதைக்கு, நம் தலைவிதி நம் கையில் உள்ளது. நம் ஆத்துமாவின் பயணத்தின் முடிவு நித்திய பரலோகத்தில் அல்லது நித்திய நரகத்தில் இருக்கும் (மத்தேயு 25:46). நம் சார்பாக கிறிஸ்துவின் பலியை ஏற்றுக்கொள்வதன் மூலம் அல்லது நிராகரிப்பதன் மூலம் நாம் எங்கு இருக்க வேண்டும் என்பதை நாம் இன்று தேர்வு செய்ய வேண்டும், மேலும் இந்த பூமியில் நமது சரீர வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு முன்பு நாம் அந்த தேர்வை செய்ய வேண்டும். மரணத்திற்குப் பிறகு, இனி ஒரு தேர்வு நமக்கு இல்லை, மேலும் தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக நிற்பதே நம் விதி, அங்கு எல்லாம் அவருக்கு முன்பாக வெளிப்படையாகவும் நிர்வாணமாகவும் இருக்கும் (எபிரேயர் 4:13). ரோமர் 2:6 தேவன் “அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” என்று அறிவிக்கிறது.

[English]



[முகப்பு பக்கம்]

கடைசி நியாயத்தீர்ப்பில் என்ன சம்பவிக்கிறது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.