கிறிஸ்தவ தற்காப்பளித்தல் என்றால் என்ன?

கேள்வி கிறிஸ்தவ தற்காப்பளித்தல் என்றால் என்ன? பதில் “அப்போலோஜி” என்கிற ஆங்கில வார்த்தை ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, இதன் பொருள் “ஒரு பாதுகாப்பைக் கொடுப்பது” என்பதாகும். கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாடு என்பது கிறிஸ்தவ விசுவாசத்தைப் பாதுகாப்பதற்கான விஞ்ஞானமாகும். தேவன் இருக்கிறார் என்பதை சந்தேகிக்கும் மற்றும் / அல்லது வேதாகமத்தின் தேவன் மீதான நம்பிக்கையைத் தாக்கும் பல சந்தேகவாதிகள் இருக்கின்றனர். வேதாகமத்தின் தெய்வீக உந்துதல் மற்றும் பிழையில்லா தன்மையைத் தாக்கும் பல விமர்சகர்கள் உள்ளனர். தவறான கோட்பாடுகளை…

கேள்வி

கிறிஸ்தவ தற்காப்பளித்தல் என்றால் என்ன?

பதில்

“அப்போலோஜி” என்கிற ஆங்கில வார்த்தை ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, இதன் பொருள் “ஒரு பாதுகாப்பைக் கொடுப்பது” என்பதாகும். கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாடு என்பது கிறிஸ்தவ விசுவாசத்தைப் பாதுகாப்பதற்கான விஞ்ஞானமாகும். தேவன் இருக்கிறார் என்பதை சந்தேகிக்கும் மற்றும் / அல்லது வேதாகமத்தின் தேவன் மீதான நம்பிக்கையைத் தாக்கும் பல சந்தேகவாதிகள் இருக்கின்றனர். வேதாகமத்தின் தெய்வீக உந்துதல் மற்றும் பிழையில்லா தன்மையைத் தாக்கும் பல விமர்சகர்கள் உள்ளனர். தவறான கோட்பாடுகளை ஊக்குவிக்கும் மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கிய சத்தியங்களை மறுதலிக்கும் பல கள்ளப்போதகர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட இந்த இயக்கங்களை மற்றும் நபர்களை எதிர்த்துப் போராடுவதும், அதற்கு பதிலாக கிறிஸ்தவ தேவனையும் கிறிஸ்தவ சத்தியத்தையும் ஊக்குவிப்பதே கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாடின் நோக்கமாகும்.

கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாட்டின் முக்கிய வசனம் 1 பேதுரு 3:15, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” ஒரு கிறிஸ்தவர் தனது நம்பிக்கையை முழுமையாகப் பாதுகாக்க முடியாமல் போவதற்கு எந்தவிதமான சாக்குபோக்கும் இல்லை. ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவை விசுவாசிப்பதைப் பற்றிய அவர்களுடைய நியாயமான விளக்கத்தை அளிக்க கூடியவராக இருக்கவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவரும் தற்காப்பளித்தல் கோட்பாட்டின் நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவரும், அவர் எதை நம்புகிறார், ஏன் அதை நம்புகிறார், மற்றவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது, பொய்கள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாட்டின் இரண்டாவது அம்சம் 1 பேதுரு 3:15-ன் இரண்டாம் பாதியாகும், “சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” என்பதாகும். கிறிஸ்தவ விசுவாசத்தை தற்காப்பளித்தல் கோட்பாட்டின் மூலமாக பாதுகாப்பது ஒருபோதும் முரட்டுத்தனமாகவோ, கோபமாக அல்லது அவமரியாதைக்குரியதான நிலையிலோ நிச்சயமாக இருக்கக்கூடாது. கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது, நம்முடைய பாதுகாப்பிலும், அதே சமயம் நம்முடைய விளக்கக்காட்சியில் கிறிஸ்துவைப் போன்றவர்களாகவும் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் ஒரு விவாதத்தை வென்றாலும், ஒரு நபரை கிறிஸ்துவிடமிருந்து இன்னும் விலகிச் செல்லத்தக்கதாக நம் அணுகுமுறை இருக்குமானால், கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாட்டின் உண்மையான நோக்கத்தை நாம் இழந்துவிட்டோம் என்றர்த்தமாகும்.

கிறிஸ்தவ தற்காப்பளித்தல் கோட்பாட்டின் இரண்டு முதன்மையான முறைகள் உள்ளன. முதலாவது, பொதுவாக பாரம்பரிய இலக்கிய நயம் வாய்ந்த தற்காப்பளித்தல் கோட்பாடு என அழைக்கப்படுகிறது, கிறிஸ்தவ செய்தி உண்மை என்பதற்கான ஆதாரங்களையும் ஆதாரங்களை பகிர்வதையும் உள்ளடக்கியது. இரண்டாவதாக, பொதுவான “முன்கருதல்” தற்காப்புக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது, இது கிறிஸ்தவ எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள முன்னுரிமைகளை (முன்கூட்டிய இருக்கிற கருத்துக்கள், அனுமானங்களை) எதிர்கொள்வதாகும். கிறிஸ்தவ தற்காப்புக் கோட்பாட்டின் இரண்டு முறைகளின் ஆதரவாளர்கள் எந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒருவருக்கொருவர் விவாதிக்கின்றனர். நபர் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து இரு முறைகளையும் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கிறிஸ்தவ தற்காப்புக் கோட்பாடு வெறுமனே இவைகளுக்கு உடன்படாதவர்களுக்கு கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் சத்தியத்தை நியாயமான முறையில் முன்வைக்கிறது. கிறிஸ்தவ தற்காப்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியமான அம்சமாகும். நற்செய்தியை அறிவிக்கவும், நம்முடைய விசுவாசத்தைப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளோம் (மத்தேயு 28:18-20; 1 பேதுரு 3:15). கிறிஸ்தவ தற்காப்புக் கோட்பாட்டின் சாராம்சம் அதுதான்.

[English]



[முகப்பு பக்கம்]

கிறிஸ்தவ தற்காப்பளித்தல் என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.