கிறிஸ்துவினுடைய வருகையின் வெளிச்சத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டும்?

கேள்வி கிறிஸ்துவினுடைய வருகையின் வெளிச்சத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டும்? பதில் இயேசு கிறிஸ்துவின் வருகை விரைவில் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம், அதாவது, எந்தவொரு சமயத்திலும் அவருடைய வருகை ஏற்படலாம். அப்போஸ்தலனாகிய பவுலுடன், “நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது” (தீத்து 2:13) என்பதை தேடுகிறோம். இன்று கர்த்தர் திரும்பி வரலாம் என்று அறிந்தால், சிலர் தாங்கள் செய்கிறவற்றை நிறுத்தவும், அவருக்காக…

கேள்வி

கிறிஸ்துவினுடைய வருகையின் வெளிச்சத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டும்?

பதில்

இயேசு கிறிஸ்துவின் வருகை விரைவில் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம், அதாவது, எந்தவொரு சமயத்திலும் அவருடைய வருகை ஏற்படலாம். அப்போஸ்தலனாகிய பவுலுடன், “நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது” (தீத்து 2:13) என்பதை தேடுகிறோம். இன்று கர்த்தர் திரும்பி வரலாம் என்று அறிந்தால், சிலர் தாங்கள் செய்கிறவற்றை நிறுத்தவும், அவருக்காக “காத்திருக்கவும்” செய்ய ஆசைப்படுகிறார்கள்.

இருப்பினும், இயேசு இன்றும் திரும்பி வருவார் என்பதையும், அவர் இன்று திரும்பி வரலாம் என்பதை அறிந்திருப்பதையும் அறிந்துகொள்வதில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. இயேசு சொன்னார், “அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்” (மத்தேயு 24:36). அவருடைய வருகையைக் குறித்த நேரத்தை தேவன் யாருக்கும் வெளிப்படுத்தியிருக்கவில்லை, அவர் நம்மை அழைத்துக்கொள்ளும் வரையில், நாம் அவரைத் தொடர்ந்து சேவிக்க வேண்டும். இயேசு சொன்ன பத்து ராத்தல் உவமையில், புறப்படுகிற அரசன் தன் ஊழியர்களை நோக்கி, “நான் திரும்பிவருமளவும்” இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான் (லூக்கா 19:13) என்று வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் வருகை எப்பொழுதும் இன்னும் புத்திசாலியாக செயல்படுவதற்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்கிறதேயல்லாமல், செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்படுவதற்கு ஒரு காரணமாக அல்ல. 1 கொரிந்தியர் 15:58-ல் பவுல், “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” என்று சபைஎடுதுக்கொள்ளப்படுதலின் முடிவுரையை வழங்குகிறார். 1 தெசலோனிக்கேயர் 5:6-ல், “ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” பின்வாங்குவதற்கு, “கோட்டையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்பது இயேசுவின் எண்ணம் அல்ல. அதற்குப் பதிலாக, நாம் முடிந்தவரை வேலை செய்கிறோம். “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4).

அப்போஸ்தலர்கள் உயிரோடிருக்கையில் தானே இயேசு திரும்ப வருவார் என்ற யோசனையோடு அவர்கள் வாழ்ந்து, சேவை செய்தார்கள்; அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து விலகி, வெறுமனே “காத்திருந்தார்கள்” என்றால் என்ன? “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்கிற கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் இருந்திருக்க வேண்டும் (மாற்கு 16:15), சுவிசேஷமும் பரவியிருக்காது. இயேசுவின் எப்பொழுது வ்ண்டுமானாலும் நிகழலாம் என்கிற அவரது உடனடி வருகை, தேவனுடைய வேலையில் தங்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய வாழ்வின் கடைசி நாள் என கருதிக்கொண்டு அவர்கள் வாழ்நாள் முழுதும் வாழ்ந்தார்கள். நாமும் நமக்குள்ள ஒவ்வொரு நாளும் ஒரு பரிசாகக் கருதுவதோடு, அதை தேவனை மகிமைப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

[English]



[முகப்பு பக்கம்]

கிறிஸ்துவினுடைய வருகையின் வெளிச்சத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.