சபையின் நோக்கம் என்ன?

கேள்வி சபையின் நோக்கம் என்ன? பதில் அப்போஸ்தலர் நடபடிகள் 2:42 சபையின் நோக்கத்தை கூறும்போது வசனமாக உள்ளது. ‘‘ அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் அந்நியோந்தியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்’’ இந்த வசனத்தின்படி, சபையின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் இப்படியாயிருக்க வேண்டும். 1. வேதாகமத்திலுள்ள உபதேசங்களை போதிக்க வேண்டும் 2. விசுவாசிகள் ஐக்கியங்கொள்ளுகிற இடமாக இருக்க வேண்டும் 3. கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்க வேண்டும. 4. ஜெபிக்க வேண்டும் நாம் விசுவாசத்தில் வேரூன்றும்படி சபையானது…

கேள்வி

சபையின் நோக்கம் என்ன?

பதில்

அப்போஸ்தலர் நடபடிகள் 2:42 சபையின் நோக்கத்தை கூறும்போது வசனமாக உள்ளது. ‘‘ அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் அந்நியோந்தியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்’’ இந்த வசனத்தின்படி, சபையின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் இப்படியாயிருக்க வேண்டும்.

1. வேதாகமத்திலுள்ள உபதேசங்களை போதிக்க வேண்டும்

2. விசுவாசிகள் ஐக்கியங்கொள்ளுகிற இடமாக இருக்க வேண்டும்

3. கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்க வேண்டும.

4. ஜெபிக்க வேண்டும்

நாம் விசுவாசத்தில் வேரூன்றும்படி சபையானது வேதாகமத்திலுள்ள உபதேங்களை போதிக்க வேண்டும். எபேசியா 4:14 இப்படிக் கூறுகின்றது. ‘‘ நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும், வஞ்சிக்கிறதற் கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிப்பட்டு அலைகிறவர்களாயிராமல்’’, சபை என்பது ஒரு ஐக்கியத்தின் இடமாக, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்போடு கனம் பண்ணி (ரோமர் 12:10), போதித்து (ரோமர் 15:14) அன்போடும் மனதுருக்கத்தோடும் (எபேசியர் 4:32) உற்சாகப்படுத்துவதோடு(Iதெசலோனேக்கியர்5:1)அதிமுக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் (1 யோவான் 3:11)

சபையென்பது கர்த்தருடைய மரணத்தையும், நமக்காக சிந்தப்பட்ட இரத்தத்தையும் (1 கொரிந்தியர் 11:23-26) நினைவுகூர்ந்து விசுவாசிகள் கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்கிற இடமாக இருக்க வேண்டும். ‘அப்பம் பிட்குதல்’ (அப்போஸ்தலர் நடபடிகள் 2:42) என்பது ஒன்றாக உணவு உட்கொள்வது என்பதையும் குறிக்கின்றது. இது சபை ஐக்கியத்தை வளர்க்கும் மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது.

அப்போஸ்தலர் நடபடிகள் 2:42 –இன்படி சபையின் கடைசி நோக்கம் ஜெபிப்பது. சபை என்பது ஜெபத்தையும், ஜெபத்தை போதிப்பதையும், ஜெபத்தில் பழகுவதையும் வளர்க்கிறதுமாய் இருக்க வேண்டும். பிலிப்பியா 4:6-7 நம்மை இப்படி உற்றசாகப்படுத்துகின்றது ‘‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான வேத சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’’.

சபைக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பொறுப்பு, இயேசு கிறிஸ்துவின் மூலம் வருகிற இரட்சிப்பைக் குறித்தே சுவிசேஷத்தை அறிவிப்பது. (மத்தேயு 28:18-20 அப்போஸ்தலர் நடபடிகள் 1:8) சபை வார்த்தையினாலும் செயலினாலும் சுவிசேஷத்தை உண்மையாய் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்றது. சபை சமுதாயத்திற்கு ‘கலங்கரை விளக்கம்’ போல் ஜனங்களுக்கு கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை காட்ட வேண்டும். சபை சுவிசேஷத்தை அறிவிக்க தயார் படுத்த வேண்டும் (1 பேதுரு 3:15).

சபையின் கடைசி நோக்கத்தைக் குறித்து யாக்கோபு 1:27-இல் கூறப்பட்டுள்ளது. ‘‘திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்கைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது’’ தேவையோடு இருக்கிற ஜனங்களுக்கு ஊழியம் செய்வதில் சபை கவனமாக இருக்க வேண்டும். சுவிசேஷத்தை அறிவிப்பது மாத்திரமல்ல, சரீரப்பிரகாரமான தேவைகளையும் (உணவு, உடை, உறைவிடம்) சந்திக்க வேண்டும். சபை விசுவாசிகளை பாவத்தை மேற்கொள்ளதிருக்கவும் உலகத்தினால் கறைபடாதிருக்கிற வண்ணமாக தகுதிப்படுத்த வேண்டும். இது வேதாகமத்தை போதிப்பதின் மூலமும், ஐக்கியத்தின் மூலமும்தான் முடியும். ஆகவே சபையின் நோக்கம் என்ன? பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு ஒரு அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார். சபை என்பது உலகத்தில் தேவனுடைய கரங்கள், வாய் மற்றும் பாதங்கள் கிறிஸ்துவின் சரீரம் (1 கொரிந்தியர் 12:12-27) இயேசு கிறிஸ்து உலகத்தில் சரீரத்தில் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பாரோ அதையே நாமும் செய்ய வேண்டும். சபை ‘‘ கிறிஸ்துவை உடையவர்களாக’’ ‘‘கிறிஸ்துவைப் போலவே ’’ கிறிஸ்துவை பின்பற்றுவதாகவே இருக்க வேண்டும்.

[English]



[முகப்பு பக்கம்]

சபையின் நோக்கம் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *