சபையை ஸ்தாபித்தல் என்றால் என்ன?

கேள்வி சபையை ஸ்தாபித்தல் என்றால் என்ன? பதில் சபையை ஸ்தாபித்தல் என்பது ஒரு புதிய இடத்தில் ஒரு விசுவாசிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட கூடிவரும் அமைப்பை நிறுவுவதாகும். ஒரு சபையை ஸ்தாபித்தல் செயல்முறையானது சுவிசேஷம் அறிவித்தல், புதிய விசுவாசிகளின் சீடத்துவம், சபைத் தலைவர்களின் பயிற்சி மற்றும் புதிய ஏற்பாடு மாதிரியின் படியான சபையின் அமைப்பை உள்ளடக்கியது ஆகும். வழக்கமாக, இந்த செயல்முறையில் ஒரு சபையின் சாசனம் மற்றும்/அல்லது கோட்பாட்டு அறிக்கையை எழுதுவது மற்றும் கூடிவர ஒரு இடத்தை கண்டுபிடிப்பது அல்லது…

கேள்வி

சபையை ஸ்தாபித்தல் என்றால் என்ன?

பதில்

சபையை ஸ்தாபித்தல் என்பது ஒரு புதிய இடத்தில் ஒரு விசுவாசிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட கூடிவரும் அமைப்பை நிறுவுவதாகும். ஒரு சபையை ஸ்தாபித்தல் செயல்முறையானது சுவிசேஷம் அறிவித்தல், புதிய விசுவாசிகளின் சீடத்துவம், சபைத் தலைவர்களின் பயிற்சி மற்றும் புதிய ஏற்பாடு மாதிரியின் படியான சபையின் அமைப்பை உள்ளடக்கியது ஆகும். வழக்கமாக, இந்த செயல்முறையில் ஒரு சபையின் சாசனம் மற்றும்/அல்லது கோட்பாட்டு அறிக்கையை எழுதுவது மற்றும் கூடிவர ஒரு இடத்தை கண்டுபிடிப்பது அல்லது சொத்து வாங்குவது மற்றும் ஒரு புதிய கட்டிடத்தை நிறுவுவது ஆகியவை அடங்கும்.

சபையை ஸ்தாபித்தல் என்பது “ஊழியங்களின்” பெரிய வேலைக்குள் ஒரு குறிப்பிட்ட கவனத்தை உடையதாகும். சபையை ஸ்தாபிப்பவர்கள் மிஷனரிகளாக இருக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் தங்களுடைய முயற்சிகளைச் செய்கிறார்கள். சில திறன்களில் நிபுணத்துவம் பெற்ற மற்ற மிஷனரிகள் அதிகாரப்பூர்வமாக “சபையை ஸ்தாபிப்பவர்கள்” என்று கருதப்பட மாட்டார்கள், ஆனால் அவர்கள் மதிப்புமிக்க சேவையை வழங்குகிறவர்களாக இருக்கிறார்கள். வானொலி ஒளிபரப்பாளர்கள், வானோடிகள், அச்சுப்பொறி இயந்திரங்கள், வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போன்ற துணை மிஷனரிகள் அடங்குவர்.

பெரும்பாலான சபையை ஸ்தாபிப்பவர்களின் இறுதி குறிக்கோள், ஒரு தன்னாட்சி, சுய-பரப்பும் விசுவாசிகளின் அமைப்பை நிறுவுவதன் மூலம் ஒரு சமூகத்தில் கர்த்தரை மகிமைப்படுத்துவதாகும். இந்த இலக்கை அடைந்தவுடன், சபை தன்னிச்சையாக நிற்க முடிந்தால், சபையை ஸ்தாபிப்பவர்கள் வழக்கமாக வேறு சமூகத்திற்குச் சென்று மீண்டும் தங்கள் ஊழியத்தைத் தொடங்குவார்கள்.

சபையை ஸ்தாபிக்கும் கவனம் வேதாகமத்தின்படியானதாகும். அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு பகுதி வழியாக பயணம் செய்தபோது, அவர் ஒவ்வொரு நகரத்திலும் விசுவாசிகளின் உள்ளூர் சபை அமைப்பை நிறுவுவதற்கும் தலைமைத்துவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும் போதுமான நேரத்தை செலவிட எப்போதும் முயன்றார் (அப். 14:21-23). பின்னர், அவர் அந்த சபைகளை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் மறுசீரமைக்கவும் முயன்றார் (அப். 15:41; 1 தெசலோனிக்கேயர் 3:2). அவர் நிறுவிய சபைகள் பின்னர் மிஷனரிகளை அனுப்பும், எனவே சபைகளை ஸ்தாபிக்கும் பணி தொடர்ந்தது (1 தெசலோனிக்கேயர் 1:8).

[English]



[முகப்பு பக்கம்]

சபையை ஸ்தாபித்தல் என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *