தார்மீக சார்பியல்வாதம் என்றால் என்ன?

கேள்வி தார்மீக சார்பியல்வாதம் என்றால் என்ன? பதில் தார்மீக முழுமைவாதத்துடன் ஒப்பிடுகையில் தார்மீக சார்பியல்வாதம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளப்படுகிறது. அறநெறி என்பது உலகளாவிய கொள்கைகளை (இயற்கை சட்டம், மனசாட்சி) சார்ந்துள்ளது என்று முழுமைவாதம் கூறுகிறது. கிறிஸ்தவ முழுமைவாதிகள் தேவன் நம்முடைய பொதுவான ஒழுக்கத்தின் இறுதி ஆதாரம் என்றும், ஆகவே, அது அவரைப் போலவே மாறாதது என்றும் நம்புகிறார்கள். அறநெறி எந்தவொரு முழுமையான தரத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று தார்மீக சார்பியல்வாதம் வலியுறுத்துகிறது. மாறாக, நெறிமுறை “சத்தியங்கள்”…

கேள்வி

தார்மீக சார்பியல்வாதம் என்றால் என்ன?

பதில்

தார்மீக முழுமைவாதத்துடன் ஒப்பிடுகையில் தார்மீக சார்பியல்வாதம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளப்படுகிறது. அறநெறி என்பது உலகளாவிய கொள்கைகளை (இயற்கை சட்டம், மனசாட்சி) சார்ந்துள்ளது என்று முழுமைவாதம் கூறுகிறது. கிறிஸ்தவ முழுமைவாதிகள் தேவன் நம்முடைய பொதுவான ஒழுக்கத்தின் இறுதி ஆதாரம் என்றும், ஆகவே, அது அவரைப் போலவே மாறாதது என்றும் நம்புகிறார்கள். அறநெறி எந்தவொரு முழுமையான தரத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று தார்மீக சார்பியல்வாதம் வலியுறுத்துகிறது. மாறாக, நெறிமுறை “சத்தியங்கள்” நிலைமை, கலாச்சாரம், ஒருவரின் உணர்வுகள் போன்ற மாறிகளைப் பொறுத்தது என்கிறார்கள்.

தார்மீக சார்பியல்வாதத்திற்கான வாதங்களைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லலாம், அவை அவற்றின் சந்தேகத்திற்குரிய தன்மையை நிரூபிக்கின்றன. முதலாவதாக, சார்பியல்வாதத்தை ஆதரிக்கும் முயற்சியில் பயன்படுத்தப்படும் பல வாதங்கள் முதலில் நன்றாகத் தெரிந்தாலும், அவை அனைத்திலும் உள்ளார்ந்த ஒரு தர்க்கரீதியான முரண்பாடு உள்ளது புலனாகும், ஏனெனில் அவை அனைத்தும் “சரியான” தார்மீக திட்டத்தை முன்மொழிகின்றன – நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றை எடுத்துரைக்கின்றன. ஆனால் இதுவே முழுமையானது ஆகும். இரண்டாவதாக, சார்பியல்வாதிகள் என்று அழைக்கப்படுபவர்களும் கூட சார்பியல்வாதத்தை நிராகரிக்கின்றனர். ஒரு கொலைகாரன் அல்லது கற்பழிப்பவன் தனது சொந்த தரங்களை மீறாதவரை குற்றத்திலிருந்து விடுபடுவான் என்று அவர்கள் ஒருபோதும் கூற மாட்டார்கள்.

வெவ்வேறு கலாச்சாரங்களிடையே வெவ்வேறு மதிப்புகள் ஒழுக்கநெறிகள் வெவ்வேறு நபர்களுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகின்றன என்று சார்பியல்வாதிகள் வாதிடலாம். ஆனால் இந்த வாதம் தனிநபர்களின் செயல்களை (அவர்கள் என்ன செய்கிறார்கள்) முழுமையான தரங்களுடன் (அவர்கள் அதைச் செய்ய வேண்டுமா) குழப்புகிறது. கலாச்சாரம் சரியானது மற்றும் தவறு என்பதை தீர்மானித்தால், நாசிக்களை நாம் எவ்வாறு தீர்ப்பளித்திருக்க முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் ஒழுக்கத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள். கொலை உலகளவில் தவறாக இருந்தால் மட்டுமே நாசிக்கள் தவறு செய்தார்கள் என்றாகும். உண்மையென்னவென்றால், அவர்களிடம் அவர்களுக்கே உரிய “அவர்களின் ஒழுக்கநெறி” இருந்தது என்பது அதை மாற்றாது. மேலும், பல்வேறு ஜனங்கள் தார்மீகத்தின் வெவ்வேறு நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் இன்னும் பொதுவான ஒழுக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உதாரணமாக, கருக்கலைப்பு செய்பவர்கள் மற்றும் கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கொலை தவறு என்று ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் கருக்கலைப்பு கொலை என்பது குறித்து அவர்கள் உடன்படவில்லை. எனவே, இங்கே கூட, முழுமையான உலகளாவிய அறநெறி உண்மை என்று காட்டப்படுகிறது.

மாறும் சூழ்நிலைகள் ஒழுக்கத்தை மாற்றுவதற்கு காரணமாகின்றன என்று சிலர் கூறுகின்றனர் – வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு செயல்கள் அது மற்ற சூழ்நிலைகளில் சரியாக இருக்காதது அழைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு செயலை நாம் நியாந்தீர்த்து தீர்மானிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன: நிலைமை, செயல் மற்றும் நோக்கம். உதாரணமாக, ஒருவர் தோல்வியுற்றாலும் (செயல்) கொலை முயற்சி (நோக்கம்) கொண்ட ஒருவரை நாம் தண்டிக்க முடியும். எனவே சூழ்நிலைகள் தார்மீக முடிவின் ஒரு பகுதியாகும், ஏனென்றால் அவை குறிப்பிட்ட தார்மீகச் செயலைத் தேர்ந்தெடுப்பதற்கான சூழலை அமைக்கின்றன (உலகளாவிய கொள்கைகளின் பயன்பாடு).

சார்பியல்வாதிகள் முறையிடும் முக்கிய வாதம் சகிப்புத்தன்மை. ஒருவரிடம் தார்மீகத்தை சொல்வது தவறானது என்று அவர்கள் கூறுகின்றனர், மேலும் சார்பியல்வாதம் எல்லா கருத்துக்களையும் பொறுத்துக்கொள்கிறது. ஆனால் இது தவறானது. முதலாவதாக, தீமையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட வேண்டிய மனநிறைவின் பொருள்கள் என்ற கற்பழிப்பாளரின் கருத்தை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? இரண்டாவதாக, இது சுய தோல்வியாகும், ஏனெனில் சார்பியல்வாதிகள் சகிப்பின்மை அல்லது முழுமையான தன்மையை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மூன்றாவதாக, யாராவது ஏன் முதலில் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை கேட்டால் சார்பியல்வாதத்தால் அதை விளக்க முடியாது. நாம் ஜனங்களை சகித்துக்கொள்ள வேண்டும் (நாம் உடன்படவில்லை என்றாலும் கூட) நாம் எப்போதும் ஜனங்களை நியாயமாக நடத்த வேண்டும் என்ற முழுமையான தார்மீக விதியை அடிப்படையாகக் கொண்டது – ஆனால் அது மீண்டும் முழுமையானவாதம்! உண்மையில், உலகளாவிய தார்மீகக் கொள்கைகள் இல்லாமல் எந்த நன்மையும் இருக்க முடியாது.

உண்மை என்னவென்றால், எல்லா ஜனங்களும் மனசாட்சியுடன் பிறந்தவர்கள், நாம் எப்போது அநீதி இழைக்கப்படுகிறோம் அல்லது மற்றவர்களுக்கு அநீதி இழைக்கிறோம் என்பதை நாம் அனைவரும் இயல்பாகவே மிக நன்றாக அறிவோம். மற்றவர்களும் இதை அங்கீகரிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். “நியாயமானது” மற்றும் “நியாயமற்றது” என்பதன் வித்தியாசத்தை குழந்தைகளாகிய நாம் அறிந்திருந்தோம். நாம் தவறு செய்கிறோம், தார்மீக சார்பியல்வாதம் உண்மைதான் என்பதை நாம் நம்புவதற்கு, நம்மை நம்பவைக்கும்படிக்கு ஒரு புதிய மோசமான தத்துவம் தேவையாயிருக்கிறது.

[English]



[முகப்பு பக்கம்]

தார்மீக சார்பியல்வாதம் என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.