திருச்சபையின் வளர்ச்சியைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

கேள்வி திருச்சபையின் வளர்ச்சியைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? பதில் வேதாகமம் திருச்சபை வளர்ச்சி குறித்து குறிப்பிட்டு எந்த காரியத்தையும் கூறவில்லையென்றாலும், திருச்சபை வளர்ச்சிக்கான பிரமாணங்கள் இயேசு கூறியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது, “இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18). இயேசு கிறிஸ்துவில் திருச்சபையானது அதன் அஸ்திவாரத்தைக் இயேசுவில் கொண்டுள்ளது என்பதை பவுல் உறுதிப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 3:11). இயேசு கிறிஸ்து திருச்சபையின் தலைவராகவும் இருக்கிறார் (எபேசியர் 1:18-23) மற்றும் திருச்சபையின்…

கேள்வி

திருச்சபையின் வளர்ச்சியைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்

வேதாகமம் திருச்சபை வளர்ச்சி குறித்து குறிப்பிட்டு எந்த காரியத்தையும் கூறவில்லையென்றாலும், திருச்சபை வளர்ச்சிக்கான பிரமாணங்கள் இயேசு கூறியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது, “இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18). இயேசு கிறிஸ்துவில் திருச்சபையானது அதன் அஸ்திவாரத்தைக் இயேசுவில் கொண்டுள்ளது என்பதை பவுல் உறுதிப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 3:11). இயேசு கிறிஸ்து திருச்சபையின் தலைவராகவும் இருக்கிறார் (எபேசியர் 1:18-23) மற்றும் திருச்சபையின் ஜீவனும் அவராக இருக்கிறார் (யோவான் 10:10). கூறிய இந்த காரியங்களின் அடிப்படையில் “வளர்ச்சி” என்பது ஒரு தழுவியற்சொல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு விதமான வளர்ச்சிகள் உள்ளன, அவற்றுள் சில எண்களுடன் ஒரு தொடர்பும் இல்லாதவைகளாகும்.

உறுப்பினர்கள் / பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருந்தாலும் ஒரு திருச்சபை உயிருடனும் வளர்ச்சி பெற்று இருக்க முடியும். திருச்சபையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்வை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அவருக்கு கீழ்படிந்து, தனித்தனியாகவும் குழுவாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளர்ந்து வருகிறார்கள் என்றால் அதுதான் மெய்யான சபையின் வளர்ச்சி. அதே சமயத்தில், ஒரு திருச்சபையின் அதனுடைய வாராந்தர பங்குகளை சேர்த்துக்கொள்ளலாம், பெரிய எண்ணிக்கையிலானவை, இன்னும் ஆவிக்குரிய ரீதியில் நிலையில் இருக்க இயலும்.

எந்த வகையான வளர்ச்சியானாலும் அது ஒரு பொதுவான முறையை பின்பற்றுகிறதாக இருக்கிறது. வளர்ந்து வரும் உயிரினத்தைப் போலவே, உள்ளூர் திருச்சபையானது விதைகளை விதைக்கிறவர்களையும் (சுவிசேஷகர்கள்), விதைகளுக்கு நீர்ப்பாய்ச்சுகிறவர்களையும் (மேய்ப்பர்கள் / போதகர்கள்), மற்றும் உள்ளூர் சபையினரின் வளர்ச்சிக்காக தங்கள் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மற்றவர்களையும் கொண்டுள்ளது. ஆனால் தேவனே அதற்கு ஜீவனையும் விளைவையும் கொடுக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும் (1 கொரிந்தியர் 3:7). விதைத்தவர்களும் நீர்பாய்ச்சினவர்களும் தங்கள் உழைப்புக்கேற்ப தங்கள் பலனைப் பெறுவார்கள் (1 கொரிந்தியர் 3:8).

ஒரு உள்ளூர் சபையின் வளர்ச்சிக்கு விதை விதைத்தல் மற்றும் நீர்ப்பாய்ச்சுதல் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும், அதாவது ஒரு ஆரோக்கியமான திருச்சபையில் ஒவ்வொரு நபரும் அவனுடைய / அவளுடைய ஆவிக்குரிய வரம் என்ன என்பதை அறிந்து அதை கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் செயல்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். விதை விதைத்தல் மற்றும் நீர்ப்பாய்ச்சுதல் இடையில் சமநிலை இல்லாமற்போனால், தேவனுடைய நோக்கத்தின்படியான வளர்ச்சியை திருச்சபை அடையாமற்போகும். மெய்யாகவே, பரிசுத்த ஆவியானவருக்கு தினந்தோறும் சார்ந்திருந்து அவருக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும், தேவனின் விளைச்சல் உண்டாகத்தக்கதாக விதை விதைத்தல் மற்றும் நீர்ப்பாய்ச்சுதலுக்கு ஆவியானவரின் வல்லமை வெளியிடப்படும்.

இறுதியாக, உயிரோட்டமான நிலையில் மற்றும் வளர்ந்துவரும் திருச்சபையின் விவரணம் அப்போஸ்தலர் 2:42-47-ல் காணப்படுகிறது. அங்கே விசுவாசிகள் “அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்”. அவர்கள் ஒருவரையொருவர் சேவித்து, கர்த்தரை அறியாமலிருக்கிறவர்களுக்கெல்லாம் சேவை செய்கிறவர்களாய் இருக்கிறார்கள், ஏனென்றால் “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.” இந்த காரியங்கள் இருக்கும்போது, எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கிறதோ இல்லையோ திருச்சபை ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெறும்.

[English]



[முகப்பு பக்கம்]

திருச்சபையின் வளர்ச்சியைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.