திருமணத்திற்கு முன்பாக ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுதல் தவறா?

கேள்வி திருமணத்திற்கு முன்பாக ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுதல் தவறா? பதில் இந்த கேள்விக்கு பதில் தருவது “சேர்ந்து வாழ்வது” என்றால் என்ன என்பதில் தான் இருக்கிறது. இதன் அர்த்தம் பாலியல் உறவுகள் வைத்துக்கொள்வது என்று எண்ணினால், சேர்ந்து வாழ்வது என்பது நிச்சயமாக தவறாகும். எல்லாவிதமான விபசார பாவங்களை கண்டிப்பதுபோலவே திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளும் பாலியல் உறவையும் வேதம் கண்டிக்கிறது (அப்போஸ்தலர் 15:20; ரோமர் 1:29; 1 கொரிந்தியர் 5:1; 6:13, 18; 7:2; 10:8;…

கேள்வி

திருமணத்திற்கு முன்பாக ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுதல் தவறா?

பதில்

இந்த கேள்விக்கு பதில் தருவது “சேர்ந்து வாழ்வது” என்றால் என்ன என்பதில் தான் இருக்கிறது. இதன் அர்த்தம் பாலியல் உறவுகள் வைத்துக்கொள்வது என்று எண்ணினால், சேர்ந்து வாழ்வது என்பது நிச்சயமாக தவறாகும். எல்லாவிதமான விபசார பாவங்களை கண்டிப்பதுபோலவே திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளும் பாலியல் உறவையும் வேதம் கண்டிக்கிறது (அப்போஸ்தலர் 15:20; ரோமர் 1:29; 1 கொரிந்தியர் 5:1; 6:13, 18; 7:2; 10:8; 2 கொரிந்தியர் 12:21; கலாத்தியர் 5:19; எபேசியர் 5:3; கொலோசெயர்3:5; 1 தெசலோனிக்கேயர்4:3; யூதா1: 7). திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு வெளிய இப்படிப்பட்ட உறவு சுத்தமாக இருக்கக்கூடாது என்று வேதம் சொல்லுகிறது. வேசித்தனம் மற்றும் மற்ற அசுத்தங்களைப் போலவே திருமணத்திற்கு முன் உண்டாகும் பாலியல் தொடர்பும் தவறானது; அந்த தொடர்பு நீங்கள் திருமணம் செய்யாத ஒரு நபரோடு உண்டாகிறபடியால் அது பாவமாகும்.

“சேர்ந்து வாழ்வது” என்பது ஒரே வீட்டில் வசிப்பது என்றால், அது வேறு. ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்குள் எந்தவிதமான தவறான உறவுகள் அல்லது பாலியல் உறவுகள் இல்லாமல் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்றால் அது தவறு அல்ல. எனினும், இதில் எழுகிற பிரச்சனை என்னவெனில், அது ஒரு ஒழுங்கற்ற தீமையான வாழ்க்கையின் தோற்றமாக தான் இருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:22; எபேசியர் 5:3), மற்றும் பாவம் செய்ய சோதிக்கும் ஒரு சூழ்நிளையாக இருக்கும் என்பதாகும். வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள் என்று வேதம் கூறுகிறது. எப்பொழுதும் சோதனைக்குள்ளாக்கப்படுகிற சூழ்நிலைகளில் நாம் இருக்க வேண்டும் என்று வேதம் சொல்வதில்லை (1 கொரிந்தியர் 6:18). அப்படியிருந்தால் பாவத்தில் வீழ்ந்துவிட அதிக வாய்ப்புண்டு.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால், அவர்கள் ஒன்றாக படுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் எல்லோரும் எண்ணுவார்கள். சேர்ந்து வாழ்வது பாவமல்ல, ஆனால் அது பாவத்தின் தோற்றம் உடையதாக தான் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தீய தோற்றம் அளிக்கும் காரியங்களை தவிர்ககவும் (1 தெசலோனிக்கேயர் 5:22; எபேசியர் 5:3), பாவத்திற்கு விலகி ஓடவும், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்காமல் இருக்கவும் வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது. ஆகவே, ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது என்பது தேவனைக் கனப்படுத்துகிற செயலல்ல.

[English]



[முகப்பு பக்கம்]

திருமணத்திற்கு முன்பாக ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுதல் தவறா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.