தேவனுடைய மகிமை என்றால் என்ன?

கேள்வி தேவனுடைய மகிமை என்றால் என்ன? பதில் தேவனுடைய மகிமை அவருடைய ஆவியின் அழகு. இது ஒரு அழகியல் அழகு அல்லது ஒரு சரீரப்பிரகாரமான அழகு அல்ல, ஆனால் அது அவருடைய குணாதிசயத்திலிருந்து, அவர் இருக்கும் எல்லாவற்றிலிருந்தும் வெளிப்படும் அழகாகும். யாக்கோபு 1:10-ல் ஒரு ஐசுவரியவானை “தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்ட” அழைக்கிறார், இது செல்வம் அல்லது வலிமை அல்லது சரீர அழகு என்று அர்த்தமல்ல. இந்த மகிமை மனிதனுக்கு முடிசூட்டலாம் அல்லது பூமியை நிரப்பலாம். இது மனிதனுக்குள்ளும்…

கேள்வி

தேவனுடைய மகிமை என்றால் என்ன?

பதில்

தேவனுடைய மகிமை அவருடைய ஆவியின் அழகு. இது ஒரு அழகியல் அழகு அல்லது ஒரு சரீரப்பிரகாரமான அழகு அல்ல, ஆனால் அது அவருடைய குணாதிசயத்திலிருந்து, அவர் இருக்கும் எல்லாவற்றிலிருந்தும் வெளிப்படும் அழகாகும். யாக்கோபு 1:10-ல் ஒரு ஐசுவரியவானை “தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்ட” அழைக்கிறார், இது செல்வம் அல்லது வலிமை அல்லது சரீர அழகு என்று அர்த்தமல்ல. இந்த மகிமை மனிதனுக்கு முடிசூட்டலாம் அல்லது பூமியை நிரப்பலாம். இது மனிதனுக்குள்ளும் பூமியிலும் காணப்படுகிறது, ஆனால் அது அவர்களுடையது அல்ல; அது தேவனுடையது. மனிதனின் மகிமை என்பது மனிதனின் ஆவியின் அழகாகும், இது தவறிழைத்து இறுதியில் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும், அதனால் தான் அது தாழ்த்தப்பட்டதாக இருக்கிறது என்று வசனம் நமக்குச் சொல்லுகிறது. ஆனால் தேவனின் மகிமை, அவருடைய அனைத்து பண்புகளிலும் ஒன்றாக வெளிப்படுகிறது, அது ஒருபோதும் மறைந்துவிடாது. அது நித்தியமானது.

ஏசாயா 43:7 வது வசனம் தேவன் நம்மை அவருடைய மகிமைக்காக சிருஷ்டித்தார் என்று கூறுகிறது. மற்ற வசனங்களின் பின்னணியில், மனிதன் தேவனை “மகிமைப்படுத்துகிறான்” என்று கூறலாம், ஏனென்றால் மனிதனின் மூலமாக, தேவனுடைய மகிமையானது அன்பு, இசை, வீரம் போன்றவற்றில் காணப்படுகிறது அதாவது தேவனுக்குச் சொந்தமான காரியங்களை நாம் “மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:7). நாம் அவருடைய மகிமையைக் கொண்டிருக்கும் பாத்திரங்கள். நாம் செய்யக்கூடிய மற்றும் அவரின் மூலத்தைக் காணக்கூடிய அனைத்து விஷயங்களும். தேவன் இயற்கையுடன் அதே வழியில் தொடர்பு கொள்கிறார். இயற்கை அவரது மகிமையை வெளிப்படுத்துகிறது. அவரது மகிமை மனிதனின் மனதிற்கு உலகத்தின் மூலம் பல வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் பல்வேறு வழிகளில் வெவ்வேறு நிலைகளில். மலைகளைப் பார்த்து ஒருவர் பரவசமடையலாம், இன்னொருவர் கடலின் அழகை ரசித்து விரும்பலாம். ஆனால் அவை இரண்டுக்கும் பின்னால் இருப்பது (தேவனின் மகிமை) இருவகை மக்களிடமும் பேசி அவர்களை தேவனுடன் இணைக்கிறது. இவ்வகையில், மனிதர்களின் இனம், பாரம்பரியம் அல்லது அவர்களது இருப்பிடம் எதுவாக இருந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் தேவன் தம்மை வெளிப்படுத்த முடிகிறது. சங்கீதம் 19:1-4 சொல்வது போல், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.”

சங்கீதம் 73:24-வது வசனம் பரலோகத்தை “மகிமை” என்று அழைக்கிறது. இந்த சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சொற்றொடரான “மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” என்று பேசுவது கிறிஸ்தவர்கள் மரணத்தை குறிப்பிடுவதற்கு கூறும் வழக்கமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது, அவர்கள் தேவனுடைய சமூகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அவருடைய சமூகத்தில் இயற்கையாகவே தேவனின் மகிமையால் சூழப்பட்டிருக்கும். தேவனின் அழகு உண்மையில் வசிக்கும் இடத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம் – அவருடைய ஆவியின் அழகு அங்கே இருக்கும், ஏனென்றால் அவர் அங்கு இருப்பார். மீண்டும், அவருடைய ஆவியின் அழகு (அல்லது அவர் யார் என்பதன் சாராம்சம்) அவருடைய “மகிமை” ஆகும். அந்த இடத்தில், அவருடைய மகிமை மனிதர் மூலமாக அல்லது இயற்கையின் மூலம் வரத் தேவையில்லை, மாறாக அது தெளிவாகக் காணப்படும், 1 கொரிந்தியர் 13:12 சொல்வது போல், “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.”

மனித/பூமிக்குரிய அர்த்தத்தில், மகிமை என்பது பூமியிலுள்ள பொருளின் மீது தங்கியிருக்கும் ஒரு அழகு அல்லது துடிப்பானது ஆகும் (சங்கீதம் 37:20, சங்கீதம் 49:17), அந்த வகையில் அது மங்கிவிடும். ஆனால் அது மங்குவதற்கான காரணம், உலகப்பொருள் நீடிக்காது. அவை இறந்து வாடிப்போய்விடுகின்றன, ஆனால் அவைகளில் இருக்கும் மகிமை தேவனுக்குச் சொந்தமானது, ஆகவே அவை மறித்து சிதைவுரும்பொது மகிமையானது அவரிடம் திரும்பிச் செல்லும். யாக்கோபு புத்தகத்தில் முன்பு குறிப்பிட்ட ஐசுவரியவானை நினைத்துப் பாருங்கள். அந்த வசனம் கூறுகிறது, “ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.” இதற்கு என்ன அர்த்தம்? இந்த வசனம் ஐசுவரியவானுக்கு தனது செல்வமும் வலிமையையும் அழகும் தேவனிடமிருந்து வந்தது என்பதை உணரும்படி அறிவுறுத்துகிறது, மேலும் தேவன் அவனை என்னவாக ஆக்குகிறார் என்பதை உணர்ந்து தாழ்மையுடன் இருக்கவும், அவனிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறது. மேலும் அவன் புல்லைப் போன்று கடந்து செல்வான் என்ற அறிவே அவனைப் மகிமைப் பெறச் செய்யும் தேவன். தேவனின் மகிமைதான் ஆதாரம், அதுவே எல்லா சிறிய மகிமைகளும் ஓடும் ஊற்று.

தேவன் ஒருவரிடம் இருந்தே மகிமை வருகிறது என்பதால், மகிமை மனிதனிடமிருந்தோ அல்லது மனித உருவங்களிலிருந்தோ அல்லது இயற்கையிலிருந்தோ வருகிறது என்ற கூற்றை அவர் ஒருபோதும் நிலைநிறுத்த மாட்டார். ஏசாயா 42:8 இல், தேவன் தம் மகிமை மீது வைராக்கியம் கொண்ட ஒரு உதாரணத்தை நாம் காண்கிறோம். அவரது சொந்த மகிமைக்கான இந்த வைராக்கியம், ரோமர் 1:21-25-ல் பவுல், சிருஷ்டிகரை விட மக்கள் சிருஷ்டியை வழிபடும் முறைகளைப் பற்றி பேசுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தேவனின் மகிமை வரும் பொருள்களைப் பார்த்தார்கள், தேவனுக்குரிய மகிமையை அவருக்கு கொடுப்பதற்குப் பதிலாக, விலங்குகள், ஊறும் பிராணிகள் அல்லது மரம் அல்லது மனிதனை அவை கொண்டிருக்கும் அழகை கண்டு அவை தன்னிச்சையாக அவற்றினுள் இருந்து தோன்றியது போல் எண்ணிக்கொண்டு அவற்றை வணங்கினார்கள். இது உருவ வழிபாட்டின் மிகவும் பொதுவான செயலும் மற்றும் இது மிகவும் பொதுவான நிகழ்வுமாய் இருந்தது. இதுவரை வாழ்ந்த ஒவ்வொருவரும் இந்த தவறை ஒரு முறையாவது நிச்சயம் செய்திருக்கிறார்கள். நாம் அனைவரும் “மனிதனின் மகிமைக்கு” ஆதரவாக தேவனின் மகிமையை “மாற்றினோம்”.

பலரும் செய்யும் தவறு இதுதான்: பூமிக்குரிய காரியங்கள், பூமிக்குரிய உறவுகள், தங்கள் சொந்த வலிமைகள் அல்லது திறமைகள் அல்லது அழகு அல்லது மற்றவர்களிடம் அவர்கள் காணும் நற்குணங்களை நம்புதல் ஆகும். ஆனால் இந்த விஷயங்கள் மங்கும்போது மற்றும் தோல்வியடையும் போது தவிர்க்க முடியாமல் (பெரிய மகிமை தங்கள் சரீரங்களில் சுமக்கும் தற்காலிக சுமப்பாளர்கள் மட்டுமே), இந்த மக்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்வார்கள் மற்றும் விரக்தியடைகிறார்கள். நாம் அனைவரும் உணர வேண்டியது என்னவென்றால், தேவனின் மகிமை நிலையானது, நாம் வாழ்க்கையில் பயணிக்கும்போது, அது அங்கும் இங்கும், இந்த நபர் அல்லது அந்த காட்டில் அல்லது அன்பு அல்லது வீரம், புனைவு அல்லது புனைகதை அல்லாத கதையில் வெளிப்படுவதைக் காண்போம். அல்லது நம் சொந்த வாழ்க்கையில் காண்போம். ஆனால் இறுதியில் எல்லாமே தேவனிடம் செல்கிறது. தேவனிடத்திற்கு செல்லும் ஒரே வழி அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து. நாம் கிறிஸ்துவில் இருந்தால், அவரிடம், பரலோகத்தில், எல்லா அழகின் மூலத்தையும் நாம் காண்போம். நமக்கு எதுவும் இழக்கப்படாது. வாழ்க்கையில் மங்கிப்போன மற்றும் இழந்துபோன எல்லாவற்றையும் நாம் அவரில் மீண்டும் காண்போம்.

[English]



[முகப்பு பக்கம்]

தேவனுடைய மகிமை என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.