தேவன் ஆணா அல்லது பெண்ணா?

கேள்வி தேவன் ஆணா அல்லது பெண்ணா? பதில் வேதவாக்கியங்களை கவனமாக ஆராய்ந்து பார்ப்போமானால், இரண்டு உண்மைகள் தெளிவாக விளங்கும். முதலாவதாக, தேவன் ஒரு ஆவியாக இருக்கிறார், அவருக்கு மனித குணாதிசயங்கள் அல்லது வரம்புகள் எதுவும் இல்லை. இரண்டாவதாக, தேவனைக்குறித்து வேதாகமத்தில் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் அவரை ஆண் உருவிலேயே தம்மை வெளிப்படுத்தியதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. துவக்கமாக, தேவனுடைய உண்மையான இயல்பு என்ன என்பதை சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. தேவன் ஆள்தன்மையுள்ள ஒரு நபர், ஆகவே…

கேள்வி

தேவன் ஆணா அல்லது பெண்ணா?

பதில்

வேதவாக்கியங்களை கவனமாக ஆராய்ந்து பார்ப்போமானால், இரண்டு உண்மைகள் தெளிவாக விளங்கும். முதலாவதாக, தேவன் ஒரு ஆவியாக இருக்கிறார், அவருக்கு மனித குணாதிசயங்கள் அல்லது வரம்புகள் எதுவும் இல்லை. இரண்டாவதாக, தேவனைக்குறித்து வேதாகமத்தில் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் அவரை ஆண் உருவிலேயே தம்மை வெளிப்படுத்தியதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. துவக்கமாக, தேவனுடைய உண்மையான இயல்பு என்ன என்பதை சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. தேவன் ஆள்தன்மையுள்ள ஒரு நபர், ஆகவே ஒரு நபருக்கு இருக்கவேண்டிய அனைத்து பண்புகளையும் அவர் வெளிப்படுத்துகிறார்: தேவனுக்கு ஒரு மனது, சித்தம், அறிவு, மற்றும் உணர்வுகள் இருக்கின்றன. தேவன் தொடர்பு கொள்கிறார் மற்றும் அவருக்கு எல்லா உறவுகளும் இருக்கின்றன. மேலும் தேவனுடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் வேதவாக்கியங்களில் சாட்சிகளாக இருக்கின்றன.

யோவான் 4:24 கூறுகிறது போல, “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” தேவன் ஒரு ஆவியாக இருக்கிறபடியினால், அவர் மனித உடலின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், வேதாகமத்தில் சில சமயங்களில் தேவனை மனிதன் புரிந்துகொள்வதற்கு மனித குணாதிசயங்கள் தேவனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவனை விவரிக்க இப்படி மனித குணாதிசயங்களைப் பயன்படுத்துவதை “மனிதஉருவியல்” (anthropomorphism) என்று அழைக்கப்படுகிறது. இந்த மனிதஉருவியல் ஆவியாயிருக்கிற தேவன் தம்மைக்குறித்த தன்மையின் உண்மைகளை மனிதோடு தொடர்புகொள்வதற்காக மனிதனின் குணங்களைப் பயன்படுத்தும் ஒரு வழிமுறையாகும். மனித இனம் உடல் ரீதியான இயல்பைக் கொண்டிருப்பதால், உடல்நிலைக்கு அப்பால் உள்ள விஷயங்களைப் புரிந்துகொள்வதில் நாம் குறைவுள்ளவர்களாக இருக்கிறோம்; எனவே, வேதாகமத்தில் காணப்படுகின்ற மனிதஉருவியல் தேவன் யார் என்பதை புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவுகிறது.

தேவனுடைய சாயலில் மனித இனம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வதில் சில சிரமங்கள் வருகிறது. ஆதியாகமம் 1:26-27 வரையுள்ள வசனங்கள் இவ்வாறு கூறுகிறது, “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”

தேவனுடைய சாயலில் மனிதனும் ஸ்திரீயும் இருவரும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தேவனைப்போல இருக்கிற படியினால், மற்ற எல்லா படைப்புகளையும் விட அவர்கள் மேலானவர்களாக மனது, சித்தம், அறிவாற்றல், உணர்ச்சிகள், மற்றும் தார்மீக திறன் ஆகியவைகளைக் கொண்டிருக்கிறார்கள். விலங்குகள் தார்மீகத் திறனைக் கொண்டிருக்கவில்லை, மேலும் மனிதகுலத்தைப் போன்று காணக்கூடாத பகுதிகளைக் அவைகள் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய சாயல் என்பது மனிதகுலத்திற்கு மட்டுமே சொந்தமான ஆவிக்குரிய அங்கமாகும். தேவன் மனிதனோடு ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ளவே அவனைப் படைத்தார். அந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரே படைப்பு மனிதஇனம் மட்டுமேயாகும்.

தேவனுடைய சாயலின்படி மனிதன் மற்றும் ஸ்திரீயானவள் வடிவமைக்கப்பட்டுள்ளனர் – மற்றபடி அவர்கள் தேவனுடைய சிறிய “பிரதிகள்” அல்ல. ஆண்களும் பெண்களும் என படைக்கப்பட்ட மனித இனம் தேவனையும் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கிற பண்புகளோடு அவரைத் தேடவேண்டிய அவசியம் இல்லை. தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டது என்பது உடல் ரீதியாக உள்ள பண்புகளோடு எந்தஒரு சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

தேவன் ஒரு ஆவிக்குரிய நிலையில் இருக்கிறபடியினால் அவர் உடல் ரீதியான பண்புகள் இல்லாதவர் என்பது நமக்கு நன்குத்தெரியும். இருப்பினும், தேவன் மனிதகுலத்திற்கு தன்னை வெளிப்படுத்துவதற்கு எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பதை இது வரையறுக்காது. தேவன் தம்மைப்பற்றி மனிதகுலத்திற்கு அளித்த அனைத்து வெளிப்பாடுகளையும் வேதாகமம் தன்னில் கொண்டுள்ளது, இது தேவனைப்பற்றிய ஒரு புறநிலையான ஆதாரமாகும். வேதாகமம் நமக்கு எதைக் கூறுகிறது என்பதை கவனிப்போமானால், தேவன் மனிதகுலத்திற்கு தன்னை வெளிப்படுத்திய வடிவத்தில் பல சான்றுகள் உள்ளன.

வேதாகமம் “பிதா” என்று சுமார் 170 குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. அவசியப்படுகிற நிலையில், ஒரு ஆணைத் தவிர வேறே எவரும் ஒரு பிதாவாக இருக்க முடியாது. ஒருவேளை தேவன் ஒரு பெண் வடிவத்தில் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்தியிருந்தால், “பிதா” என்றில்லாமல் “பிதா” என்று வருகிற இடங்களிலெல்லாம் “அம்மா” என்றே சொல்லப்பட்டிருந்திருக்கும். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில், ஆண்பால் பெயர்ச்சொற்களே தேவனுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து தேவனை பிதாவாக பல முறை குறிப்பிட்டுள்ளார், மற்ற சமயங்களில் தேவனைக் குறிப்பிடும்போதெல்லாம் ஆண்பால் பெயர்ச்சொற்களையே பயன்படுத்தியிருக்கிறார். சுவிசேஷங்களில் மட்டும், “பிதா” என்ற வார்த்தையை கிறிஸ்து நேரடியாக 160 முறை தேவனுக்காக பயன்படுத்துகிறார். யோவான் 10:30-ல் விசேஷித்த நிலையில் கிறிஸ்து தம்மைக்குறித்து குறிப்பிட்டது என்னவென்றால்: “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.” உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்கு ஒரு மனிதனின் மனித உருவில் இயேசு கிறிஸ்து தோன்றினார் என்பது தெளிவாகிறது. பிதாவாகிய தேவனைப்போலவே, இயேசுவும் மனிதகுலத்திற்கு ஒரு ஆண் வடிவத்தில் வெளிப்படுத்தினார். வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள அநேக சம்பவங்களில், கிறிஸ்து ஆண் பெயர்ச்சொற்களை தேவனைக் குறித்து பேசும்போதெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்.

புதிய ஏற்பாட்டு நிருபங்கள் (அப்போஸ்தலரிலிருந்து வெளிப்படுத்துதல் வரை) 900-க்கும் அதிகமான வசனங்களில் “தெயோஸ்” என்ற கிரேக்க வார்த்தையானது கிரேக்கத்தில் ஒரு ஆண்பால் பெயர்ச்சொல்லுக்கான பெயர்ச்சொல்லில் வருகிறது – இந்த வார்த்தை தேவனுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதவாக்கியங்களில் தேவனைக் குறிப்பிடுகிற எண்ணற்ற குறிப்புகளில், அவருடைய தலைப்புகள், பெயர்ச்சொற்கள், மற்றும் பிரதிப்பெயர்ச்சொற்கள் யாவும் ஆண்பாலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு உறுதியான வகையில் தெளிவாக உள்ளது. தேவன் ஒரு மனிதன் இல்லை என்றாலும், அவர் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்தும் பொருட்டு ஒரு ஆண்பால் வடிவத்தை தேர்வு செய்தார். அவ்வாறே, இயேசு கிறிஸ்துவும், பூமியில் வாழ்ந்திருந்த நாட்களில் ஆண்பாலின் தலைப்புகள், பெயர்ச்சொற்கள் மற்றும் பிரதிப்பெயர்ச்சொற்கள் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகிறார். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களும் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் குறிப்பிடும்போது ஆண்பால் பெயர்களையும் தலைப்புகளையுமே குறிப்பிடுகிறார்கள். தேவன் யார் என்பதை எளிதாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தேவன் தம்மை இந்த வடிவத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்வு செய்தார். தேவனைப் புரிந்துகொள்ள உதவும்படி தேவன் நமக்கு சலுகைகளைக் கொடுத்திருக்கிறார், அதேவேளையில் நாம் ஒருபோதும் அதற்கு மிஞ்சி எண்ணுவதற்கும் “தேவனை ஒரு பெட்டியிலேயே அடைத்து” அவருடைய தன்மைக்கு ஏற்றநிலையில் இல்லாமல் அவரை ஒரு எல்லைக்குள் குறுகிய நிலைக்குள் வரையறுக்காதபடிக்கு இருக்கவேண்டியது மிகவும் முக்கியமான காரியமாகும்.

[English]



[முகப்பு பக்கம்]

தேவன் ஆணா அல்லது பெண்ணா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.