நமக்கு இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உள்ளதா?

கேள்வி நமக்கு இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உள்ளதா? பதில் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சில காரியங்கள் மற்ற படைப்புகளை விட மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகிறது (ஆதியாகமம் 1:26,27). மனிதர்கள் தேவனோடு உறவு கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடே படைக்கப்பட்டவர்கள். ஆகையால், தேவன் நம்மை கண்களால் பார்க்கமுடிகின்ற (சரீரம்) மற்றும் பார்க்கமுடியாத (ஆவி, ஆத்துமா) பகுதிகல் உள்ளவர்களாக உண்டாக்கினார். சரீரம் வெளிப்படையாக பார்க்க மற்றும் தொடக்கூடியதாய் இருக்கிறது. சரீரம், எலும்பு, மற்ற உறுப்புகள் எல்லாம் அந்த மனிதன் உயிர் வாழும்…

கேள்வி

நமக்கு இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உள்ளதா?

பதில்

ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சில காரியங்கள் மற்ற படைப்புகளை விட மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகிறது (ஆதியாகமம் 1:26,27). மனிதர்கள் தேவனோடு உறவு கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடே படைக்கப்பட்டவர்கள். ஆகையால், தேவன் நம்மை கண்களால் பார்க்கமுடிகின்ற (சரீரம்) மற்றும் பார்க்கமுடியாத (ஆவி, ஆத்துமா) பகுதிகல் உள்ளவர்களாக உண்டாக்கினார். சரீரம் வெளிப்படையாக பார்க்க மற்றும் தொடக்கூடியதாய் இருக்கிறது. சரீரம், எலும்பு, மற்ற உறுப்புகள் எல்லாம் அந்த மனிதன் உயிர் வாழும் வரை இருக்கின்றன. தொட்டு உணரமுடியாத பகுதி ஆவி, ஆத்தூமா, அறிவாற்றல், சித்தம், மனசாட்சி ஆகியவை. இது மனிதன் வாழும் வாழ் நாளுக்கு பிறகும் உள்ளது. எல்லா மனிதர்களும் கண்களால் பார்க்கமுடிகின்ற மற்றும் பார்க்கமுடியாத பகுதிகல் உடையவர்களாய் இருக்கிறார்கள். அணைத்து மனிதர்களும், மாம்சம், இரத்தம், எலும்புகள், உறுப்புகள், மற்றும் செல்கள் கொண்ட சரீரம் உடையவர்கள் என்பது தெளிவாக உள்ளது. ஆனால் மனிதர்களுக்கு உள்ள தொடவோ அல்லது உணரவோ முடியாத பகுதிகள் இருப்பதை அவ்வப்போது விவாதிக்க படுகின்றது.

வேத வசனம் இதை குறித்து என்ன சொல்லுகிறது? ஆதியாகமம் 2:7 குறிப்பிடிகிறது, வாழும் ஆத்துமாவாய் மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்று. எண்ணாகமம் 16:22 தேவனுடைய பெயர் “ஆவிகளின் தேவன்”, மனிதர்களுக்குள் வாழ்கின்றவர் என்று கூறுகின்றது. நீதிமொழிகள் 4:23 நமக்கு சொல்லுகிறது, “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என்று. இதின் அர்த்தம் இதுவே: மனித இருதயம், சித்தம் மற்றும் உணர்வுகளின் மைய்யமாகவும் அதை உள் அடக்கியதாயும் இருக்கிறது. அப்போஸ்தலர் 23:1-ல் பவுல் ஆலோசனை சங்கத்தாரை உற்றுப்பார்த்து: “சகோதரரே இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன்” என்று சொன்னான். இங்கே பவுல் குறித்தள்ளது மனசாட்சியை; இது மனதின் ஒரு பகுதி; இது நம்மை நன்மை மற்றும் தீமையை கண்டித்து உணர்த்துகிறது. ரோமர் 12:2 சொல்லுகிறது, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” இந்த வார்த்தை மற்றும் பல வசனங்கள் மனிதர்களின் கண்களால் பார்கமுடியாத (ஆவி மற்றும் ஆத்தும) பகுதியை பல்வேறு விதத்தில் குறிப்பிடுகின்றது.

ஆகையால், வசனம், ஆவி மற்றும் ஆத்துமாவை பற்றி மிக அதிகமாக கோடிட்டு காட்டி உள்ளது. ஆத்துமா, ஆவி, இருதயம், மனசாட்சி, மற்றும் மனம் ஒன்றோடு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ஆவி மற்றும் ஆத்துமா நிச்சயமாக மனிதனின் அடிப்படையாக உள்ளடங்கிய அம்சங்களாய் இருக்கிறது. அவர்கள் ஒருவேளை மற்ற காரியங்களை காட்டி உள்ளனர். இதை மனதில் கொண்டு மனிதன் இரண்டு பகுதிகளை உடையவனா (இரண்டாக பிரித்து, ஆவிஆத்துமா/சரீரம்) அல்லது மூன்று பகுதிகளை உடையவனா (மூன்றாக பிரித்து, ஆவி, ஆத்துமா, சரீரம்) என்று வாதிக்கப்படுகின்றது. இது உறுதியாக மற்றும் அதிகாரபூர்வமாக தீர்மாணிக்க முடியாது. இவை இரு கருத்துகளுக்கும் போதுமான தர்க்கங்கள் உண்டு. முக்கிய வார்த்தை இதுவே: எபிரெயர் 4:12 “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”. இந்த வாதத்தில் குறைந்தது இரண்டு காரியத்தை இவ்வசனம் நமக்கு சொல்லுகிறது. ஆவி மற்றும் ஆத்துமா பிரிந்திருக்க கூடியது; ஆவி மற்றும் ஆத்துமாவின் வித்தியாசத்தை தேவன் தெளிவாக அறிவார். மாறாக, நாம் நிச்சயமாக தெரியாத ஏதோ ஒன்றின் மீது கவனம் காட்டுவதை விட, நம்மை பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தவராகிய, சிருஷ்டிகர் மேல் கவனம் காட்டுவது நன்மையாக உள்ளது (சங்கீதம் 139:14).

[English]



[முகப்பு பக்கம்]

நமக்கு இரண்டு அல்லது மூன்று பகுதிகள் உள்ளதா? நாம் ஆவி, ஆத்துமா, சரீரமாக இருக்கிறோமா? அல்லது சரீரம், ஆத்துமாவாய் இருக்கிறோமா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.