நான் எப்படி நரகத்திற்கு போகமுடியாது?

கேள்வி நான் எப்படி நரகத்திற்கு போகமுடியாது? பதில் நரகத்திற்குப் போகாமல் இருப்பதென்பது நீங்கள் நினைப்பதை விட மிகவும் எளிதானது ஆகும். சிலர் தாங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பத்து கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அப்படிக் கைக்கொண்டால் மட்டுமே நரகத்திற்கு செல்லாமாட்டார்கள் என நம்புகிறார்கள். சிலர் நரகத்திற்கு செல்லாதபடிக்கு சில சடங்குகள் மற்றும் ஆச்சாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். சிலர் நாம் நரகத்திற்கு போகிறோமா இல்லையா என்பதை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது என்று…

கேள்வி

நான் எப்படி நரகத்திற்கு போகமுடியாது?

பதில்

நரகத்திற்குப் போகாமல் இருப்பதென்பது நீங்கள் நினைப்பதை விட மிகவும் எளிதானது ஆகும். சிலர் தாங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பத்து கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அப்படிக் கைக்கொண்டால் மட்டுமே நரகத்திற்கு செல்லாமாட்டார்கள் என நம்புகிறார்கள். சிலர் நரகத்திற்கு செல்லாதபடிக்கு சில சடங்குகள் மற்றும் ஆச்சாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். சிலர் நாம் நரகத்திற்கு போகிறோமா இல்லையா என்பதை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது என்று நம்புகிறார்கள். இந்த கருத்துக்களில் எதுவும் சரியானதாக இல்லை. மரணத்திற்குப் பின் ஒரு நபர் எப்படி நரகத்திற்குப் போவதை தடைபண்ணுவது என்பதைப் பற்றி வேதாகமம் தெளிவாக உள்ளது.

நரகம் ஒரு திகிலூட்டும் பயங்கரமான இடமாக வேதாகமம் விவரிக்கிறது. மரித்துபோன துன்மார்க்கர்கள் நரகத்தில் அனுபவிக்கும் தண்டனை “நித்திய அக்கினி” (மத்தேயு 25:41), “அவியாத அக்கினி” (மத்தேயு 3:12), “நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும்” (தானியேல் 12:2), அங்கே “அக்கினி அவியாமலுமிருக்கும்” (மாற்கு 9:44-49), “அக்கினிஜுவாலை” மற்றும் “வேதனையுள்ள” இடம் (லூக்கா 16:23-24), “நித்திய அழிவாகிய தண்டனை” (2 தெசலோனிக்கேயர் 1:9), அந்த இடம் “வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” (வெளிப்படு்தல் 14:10-11), மற்றும் “அக்கினியும் கந்தகமுமான கடலிலே” தள்ளப்பட்டு அவர்கள் “இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” (வெளிப்படு்தல் 20:10) என்று வேதாகமம் விவரிக்கிறது. எவ்விதமான சந்தேகமுமின்றி வெளிப்படையாக, நரகம் என்கிற ஒரு இடத்தை நாம் தவிர்த்தே ஆக வேண்டும்.

ஏன் நரகம் என்கிற ஒன்று இருக்கிறது, ஏன் அங்கே சிலரை தேவன் அனுப்புகிறார்? பிசாசுக்காகவும், விழுந்த தேவதூதர்களுக்காகவும் தேவன் நரகத்தை “ஆயத்தமாக்கினார்” என்று வேதாகமம் சொல்லுகிறது (மத்தேயு 25:41). தேவன் அருளும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் சாத்தான் மற்றும் விழுந்த தேவதூதர்கள் அடையப்போகிற அதே நித்திய விதியை அனுபவிப்பார்கள். ஏன் நரகம் அவசியமாக இருக்கிறது? எல்லா பாவங்களும் முடிவாக தேவனுக்கு எதிராகவே உள்ளன (சங்கீதம் 51:4). தேவன் எல்லையற்றவர் மற்றும் நித்தியமாக சாவாமையுள்ளவராக இருப்பதால், பாவத்திற்கு எல்லையற்ற மற்றும் நித்திய தண்டனை மட்டுமே போதுமானதாக இருக்கிறது. நரகம் என்பது தேவனின் பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்ற இடமாக இருக்கிறது. தேவன் பாவம் மற்றும் அவரை நிராகரிக்க யாவரையும் ஆக்கினைத்தீர்ப்பளித்து நரகத்தில் போடுகிறார். நாம் எல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் (பிரசங்கி 7:20; ரோமர் 3: 10-23) என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது, ஆகவே, நாம் எல்லோரும் நரகத்திற்கு செல்வதற்கு தகுதியுடையவர்கள்.

எனவே, நாம் எப்படி நரகத்திற்கு போகாமல் இருக்கமுடியும்? நமது பாவத்திற்கு எல்லையற்ற மற்றும் நித்திய தண்டனை மட்டுமே போதுமானதாக இருப்பதால், எல்லையற்ற மற்றும் நித்தியமான விலையானது கொடுக்கப்பட வேண்டும். தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நபரில் ஒரு மனிதன் ஆனார். இயேசு கிறிஸ்துவில், தேவன் நம் மத்தியில் வாழ்ந்தார், நமக்குப் போதித்தார், நம்மைக் குணமாக்கினார் – ஆனால் இவையெல்லாம் அவருடைய இறுதியான நோக்கம் அல்ல. தேவன் மனிதனானார் (யோவான் 1:1, 14), அதனிமித்தமாக இயேசு மனித உருவத்தில் சிலுவையில் மரிக்க முடிந்தது. தேவன் என்கிற நிலையில் பாவத்தின் முழு விலையையும் செலுத்துவதற்காக அவரது மரணம் முடிவற்ற மற்றும் நித்திய மதிப்புடையதாக இருந்தது (1 யோவான் 2:2). நம்முடைய பாவங்களுக்குரிய விலைக்கிரயத்தை முழுமையாக செலுத்தின அவருடைய மரணத்தை முழுமையாய் ஏற்றுக்கொண்டு, இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படிக்கு தேவன் நம்மை அழைக்கிறார். இயேசுவை விசுவாசிக்கிற எவரும் (யோவான் 3:16), அவரை மட்டுமே இரட்சகராக நம்பி (யோவான் 14:6) விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் மற்றும் அவர்கள் நரகத்திற்கு போவதில்லை என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.

ஒருவரும் நரகத்திற்கு செல்லுவதை தேவன் விரும்பவில்லை (2 பேதுரு 3:9). அதனால்தான், நம்முடைய சார்பாக தேவன் இறுதியான பரிபூரணமான, மற்றும் சரியான பலியை உருவாக்கினார். நீங்கள் நரகத்திற்குப் போகக்கூடாது என்று விரும்பினால், இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். இது அவ்வளவு எளிமையானது ஆகும். நீங்கள் ஒரு பாவி என்றும் நீங்கள் நரகத்திற்கு செல்வதற்கு தகுதியுடையவராக இருக்கிறீர்கள் என்பதையும் தேவனிடத்தில் சொல்ளுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நம்புகிறீர்கள் என்பாதை தேவனிடம் பிரகடனம் செய்யுங்கள். நரகத்தில் இருந்து உங்களுக்கு விடுதலையும் மற்றும் இரட்சிப்பு வழங்கியதற்கு தேவனுக்கு நன்றி கூறுங்கள். இரட்சகராக இயேசு கிறிஸ்துவை நம்புகிற இந்த எளிய நம்பிக்கைத்தான் நீங்கள் நரகத்திற்குப் போகாதப்படிக்கு செய்கிறது!

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

[English]



[முகப்பு பக்கம்]

நான் எப்படி நரகத்திற்கு போகமுடியாது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.