நாம் பாவம் செய்யும்போது தேவன் நம்மை தண்டிகிறாரா?

கேள்வி நாம் பாவம் செய்யும்போது தேவன் நம்மை தண்டிகிறாரா? பதில் இயேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு, நம்முடைய எல்லா பாவங்களும் அதாவது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலப் பாவங்கள் அனைத்தும் ஏற்கனவே சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டது. கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய பாவத்திற்காக ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டோம். அது ஒருமுறை ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது: “கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1). கிறிஸ்துவின் தியாகப்பலியின் காரணமாக, தேவன் நம்மைப் பார்க்கும்போது கிறிஸ்துவின் நீதியை மட்டுமே பார்க்கிறார்….

கேள்வி

நாம் பாவம் செய்யும்போது தேவன் நம்மை தண்டிகிறாரா?

பதில்

இயேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு, நம்முடைய எல்லா பாவங்களும் அதாவது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலப் பாவங்கள் அனைத்தும் ஏற்கனவே சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டது. கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய பாவத்திற்காக ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டோம். அது ஒருமுறை ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது: “கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1). கிறிஸ்துவின் தியாகப்பலியின் காரணமாக, தேவன் நம்மைப் பார்க்கும்போது கிறிஸ்துவின் நீதியை மட்டுமே பார்க்கிறார். நம்முடைய பாவம் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டது, அதற்காக நாம் ஒருபோதும் “தண்டிக்கப்பட மாட்டோம்”. அதே நேரத்தில், தேவன் தமது பிள்ளைகளை எந்த நல்ல தகப்பனும் செய்வது போல், அவர்கள் தவறு செய்யும் போது அவர்களை ஒழுங்குபடுத்துகிறார். எனவே, கிறிஸ்தவர்கள் பாவத்திற்காக “தண்டிக்கப்படுகிறார்கள்” என்று கூறலாம், ஆனால் அது அன்புடன் ஒழுங்குபடுத்தப்படுகிற உணர்வில் மட்டுமே ஆகும். இந்த கட்டுரையின் மீதமுள்ளவை கிறிஸ்தவர்கள் தங்கள் பாவத்திற்காக தேவனிடமிருந்து “தண்டனை” (கண்டனம்) பெறும் ஆலோசனையை தவிர்க்க “ஒழுக்கத்தை” குறிக்கிறதாய் இருக்கும்.

நாம் பாவமான வழிகளில் தொடர்ந்து செயல்பட்டால், நாம் மனந்திரும்பாமல், அந்த பாவத்திலிருந்து விலகிச் செல்லாவிட்டால், தேவன் தமது தெய்வீக ஒழுக்கத்தை நம்மீது கொண்டுவருகிறார். அப்படி அவர் இல்லையென்றால், அவர் ஒரு அன்பான மற்றும் அக்கறையுள்ள தகப்பனாக இருக்க முடியாது. நம் சொந்தக் பிள்ளைகளை அவர்களின் நலனுக்காக நாம் எப்படி ஒழுங்குபடுத்துகிறோமோ, அதேபோல, நம்முடைய பரலோகத் தகப்பன் தன் பிள்ளைகளின் நலனுக்காக அன்புடன் அவர்களைத் திருத்துகிறார். எபிரெயர் 12:7-11 கூறுகிறது, “நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”

அப்படியானால், தேவன் தமது பிள்ளைகளை ஒழுங்குபடுத்தலின் மூலமாக கலகத்திலிருந்து கீழ்ப்படிதலுக்கு அன்பாக மாற்றுகிறார். ஒழுக்கத்தின் மூலம் நம் கண்கள் நம் வாழ்க்கையின் தேவனுடைய கண்ணோட்டத்திற்கு இன்னும் தெளிவாகத் திறக்கப்படுகின்றன. சங்கீதம் 32 இல் தாவீது ராஜா கூறியது போல், ஒழுக்கம் நாம் இதுவரை கையாளாத பாவத்தை ஒப்புக்கொள்ளவும் மனந்திரும்பவும் செய்கிறது. இந்த வழியில் ஒழுக்கம் சுத்திகரிப்பு ஆகும். இது ஒரு வளர்ச்சி ஊக்கியாகும். தேவனைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறோமோ, அவ்வளவுக்கு நம்முடைய வாழ்க்கையின் விருப்பங்களைப் பற்றி நாம் அறிவோம். ஒழுக்கம் கற்றுக்கொள்ள மற்றும் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கிறது (ரோமர் 12:1-2). ஒழுக்கம் ஒரு நல்ல விஷயம்!

நாம் இந்த பூமியில் இருக்கும்போது பாவம் நம் வாழ்வில் நிலையானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் (ரோமர் 3:10, 23). எனவே, நாம் நம்முடைய கீழ்ப்படியாமைக்காக தேவனுடைய ஒழுக்கத்தை கையாள்வது மட்டுமல்லாமல், பாவத்தின் விளைவாக ஏற்படும் இயற்கை விளைவுகளையும் நாம் சமாளிக்க வேண்டும். ஒரு விசுவாசி எதையாவது திருடினால், தேவன் அவரை மன்னித்து, திருட்டு பாவத்திலிருந்து அவரை தூய்மைப்படுத்துவார், தனக்கும் மனந்திரும்பும் திருடனுக்கும் இடையிலான ஐக்கியத்தை மீட்டெடுப்பார். இருப்பினும், திருட்டின் சமூக விளைவுகள் கடுமையாக இருக்கலாம், இதன் விளைவாக அபராதம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம். இவை பாவத்தின் இயற்கையான விளைவுகள் மற்றும் சகித்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் தேவன் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கவும் தம்மை மகிமைப்படுத்தவும் அந்த விளைவுகளின் மூலம் கூட கிரியைச் செய்கிறார்.

[English]



[முகப்பு பக்கம்]

நாம் பாவம் செய்யும்போது தேவன் நம்மை தண்டிகிறாரா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.