பரலோகத்திற்கு செல்லுதல் — எனது நித்திய இலக்குக்கு எப்படி நான் உத்தரவாதம் அளிக்க முடியும்?

கேள்வி பரலோகத்திற்கு செல்லுதல் — எனது நித்திய இலக்குக்கு எப்படி நான் உத்தரவாதம் அளிக்க முடியும்? பதில் அதை எதிர்கொள்ளுங்கள். நித்தியத்திற்குள் நாம் நுழைகின்ற நாள் நாம் நினைப்பதைவிட விரைவாக வந்துவிடலாம். அந்த தருணத்திற்கு ஆயத்தப்படுவதற்கு, நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் – எல்லோரும் பரலோகத்திற்குப் போவதில்லை. நாம் பரலோகத்திற்குப் போகப்போகிறோம் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் யோவானும் எருசலேமிலுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்கு இயேசு…

கேள்வி

பரலோகத்திற்கு செல்லுதல் — எனது நித்திய இலக்குக்கு எப்படி நான் உத்தரவாதம் அளிக்க முடியும்?

பதில்

அதை எதிர்கொள்ளுங்கள். நித்தியத்திற்குள் நாம் நுழைகின்ற நாள் நாம் நினைப்பதைவிட விரைவாக வந்துவிடலாம். அந்த தருணத்திற்கு ஆயத்தப்படுவதற்கு, நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் – எல்லோரும் பரலோகத்திற்குப் போவதில்லை. நாம் பரலோகத்திற்குப் போகப்போகிறோம் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் யோவானும் எருசலேமிலுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். பேதுரு ஒரு ஆழமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அது இன்றைய பின் நவீனத்துவ உலகில் கூடப் பிரதிபலிக்கிறது: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12).

அப்போதிலிருந்து அப்போஸ்தலர் 4:12 அரசியல் ரீதியாக சரியானதல்ல. இன்று “எல்லாரும் பரலோகத்திற்குப் போகிறார்கள்” அல்லது “எல்லா வழிகளும் பரலோகத்திற்கு வழிநடத்துகின்றன” என்று சொல்வது மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இயேசுவையல்லாமல் பரலோகத்தைப் பெற முடியும் என்று அநேகர் நினைக்கிறார்கள். அவர்கள் மகிமையை விரும்புகிறார்கள், ஆனால் சிலுவையினால் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை, அதில் மரித்தவரை ஒரு குறைவான நிலையில் கூட எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. பரலோகத்திற்கு செல்வதற்கான ஒரே வழியாக இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலர், மற்றொரு பாதையை கண்டுபிடிக்க தீர்மானிக்கிறார்கள். ஆனால் இயேசு எந்த வழியிலும் இல்லை என்று எச்சரிக்கிறார், இந்த சத்தியத்தை நிராகரிப்பதற்கான விளைவு நித்திய நரகம் ஆகும். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்” (யோவான் 3:36). கிறிஸ்துவில் வைக்கிற விசுவாசம் தான் பரலோகத்திற்கு செல்வதற்கான திறவுகோலாக இருக்கிறது.

பரலோகத்திற்கு செல்ல ஒரே ஒரு வழியை மட்டும் கொடுக்க தேவன் மிகக் குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்று சிலர் வாதிடுவார்கள். ஆனால், தேவனுக்கு விரோதமாக மனிதகுலத்தின் கிளர்ச்சியின் வெளிப்பாட்டில், பரலோகத்திற்கு எந்த வழியையும் அவர் நமக்கு அளிப்பதற்கு அவருக்கு அது மிகவும் பரந்த மனப்பான்மையாக இருக்கிறது. நாம் நியாயத்தீர்ப்புக்கு தகுதியுடையவர்கள், ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படி ஒரே ஒரு குமாரனை அனுப்பி, தேவன் நம்மைத் தப்புவிக்கிறார். யாராவது இதை குறுகிய அல்லது பரந்ததாக பார்க்கிறார்களா, இது சத்தியமாக இருக்கிறது. நற்செய்தி என்னவென்றால் இயேசு மறித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார்; பரலோகத்துக்குப் போகிறவர்கள் விசுவாசத்தினாலே இந்த சுவிசேஷத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இன்று பலர் மனந்திரும்புதலுக்கான தேவையுடன் விட்டுக்கொடுக்கும் ஒரு நாகரீகமான நற்செய்தியைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பாவத்தை குறிப்பிடாத மற்றும் தங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று கருதுகிற ஒரு “அன்பான” (நியாயம் விதிக்காத) தேவன்மேல் நம்பிக்கை வைக்க விரும்புகிறார்கள். “என் தேவன் ஒருவரை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார்” என்று அவர்கள் கூறலாம். ஆனால் இயேசு பரலோகத்தைப் பற்றி பேசியதைவிட நரகத்தைப் பற்றித்தான் அதிகம் பேசினார், பரலோகத்திற்கு செல்வதற்கான ஒரே வழியைக் கொடுக்கிற இரட்சகராக தம்மை அளித்தார்: ” நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” யோவான் 14:6).

யார் உண்மையில் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்? நான் பரலோகத்திற்குப் போகிறேன் என்று எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும்? நித்திய ஜீவனை உடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை வேதாகமம் தெளிவாக குறிப்பிடுகிறது: “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1 யோவான் 5:12). இயேசுவின் மரணம் தங்களுடைய பாவங்களுக்கான விலைக்கிரயம் என்றும் அவருடைய உயிர்த்தெழுதலிலும் விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் பரலோகத்திற்குப் போவார்கள். கிறிஸ்துவை புறக்கணிக்கிறவர்கள் பரலோகத்திற்கு செல்ல மாட்டார்கள். “அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாய் இராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று” (யோவான் 3:18).

இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்கிறவர்களுக்காக பரலோகம் அற்புதமான ஆச்சரியமூட்டுகிற இடமாக இருக்கும், அவரை நிராகரிக்கிறவர்களுக்கு நரகம் மிகவும் பரிதாபகரமான துக்கம் நிறைந்த ஒரு இடமாக இருக்கும். இதை திரும்ப திரும்ப பார்க்காமல் ஒருவரால் வேதாகமத்தை சீரிய முறையில் வாசிக்கமுடியாது – அதன் கொடு வரைக்கப்பட்டு இருக்கிறது. பரலோகத்திற்கு செல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது – அந்த வழி இயேசு கிறிஸ்துவே என்று வேதாகமம் சொல்லுகிறது. இயேசுவின் கட்டளையைப் பின்பற்றுங்கள்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14).

இயேசுவில் வைக்கும் விசுவாசம் ஒன்று மட்டும்தான் பரலோகத்திற்கு செல்வதற்கான வழியாகும். விசுவாசமுள்ளவர்கள் அங்கு செல்லுவதற்கு உத்தரவாதத்தைப் பெறுகிறார்கள். நீங்கள் இயேசுவை நம்புகிறீர்களா?

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

[English]



[முகப்பு பக்கம்]

பரலோகத்திற்கு செல்லுதல் — எனது நித்திய இலக்குக்கு எப்படி நான் உத்தரவாதம் அளிக்க முடியும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.