பின்-நவீனத்துவ கிறிஸ்தவம் என்றால் என்ன?

கேள்வி பின்-நவீனத்துவ கிறிஸ்தவம் என்றால் என்ன? பதில் பின்-நவீனத்துவ கிறிஸ்தவம் என்பது பின்-நவீனத்துவத்தைப் போலவே சுருக்கமாக வரையறுப்பது என்பது கடினம். நவீனத்துவ சிந்தனை மற்றும் பாணிக்கு எதிர்வினையாக 1950-களில் கட்டிடக்கலையில் தொடங்கியது 1970-கள் மற்றும் 1980-களில் கலை மற்றும் இலக்கிய உலகத்தால் விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1990-கள் வரை திருச்சபை உண்மையில் இந்த விளைவை உணரவில்லை. இந்த எதிர்வினையானது “சூடான, தெளிவற்ற அகநிலைக்கு” ஆதரவாக “குளிர், கடினமான உண்மைக்குள்” கலைக்கப்பட்டது. பின்நவீனத்துவம் என்று கருதப்படும் எதையும் சிந்தித்துப் பாருங்கள்,…

கேள்வி

பின்-நவீனத்துவ கிறிஸ்தவம் என்றால் என்ன?

பதில்

பின்-நவீனத்துவ கிறிஸ்தவம் என்பது பின்-நவீனத்துவத்தைப் போலவே சுருக்கமாக வரையறுப்பது என்பது கடினம். நவீனத்துவ சிந்தனை மற்றும் பாணிக்கு எதிர்வினையாக 1950-களில் கட்டிடக்கலையில் தொடங்கியது 1970-கள் மற்றும் 1980-களில் கலை மற்றும் இலக்கிய உலகத்தால் விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1990-கள் வரை திருச்சபை உண்மையில் இந்த விளைவை உணரவில்லை. இந்த எதிர்வினையானது “சூடான, தெளிவற்ற அகநிலைக்கு” ஆதரவாக “குளிர், கடினமான உண்மைக்குள்” கலைக்கப்பட்டது. பின்நவீனத்துவம் என்று கருதப்படும் எதையும் சிந்தித்துப் பாருங்கள், பின்னர் கிறிஸ்தவத்தை அந்தச் சூழலில் வைத்து, பின்நவீனத்துவ கிறிஸ்தவம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியவரும்.

பின்நவீனத்துவ கிறிஸ்தவம் அடிப்படையில் பின்நவீனத்துவ சிந்தனையுடன் ஒத்துப்போகிறது. இது பகுத்தறிவுக்கு மேல் அனுபவம், புறநிலைக்கு மேல் அகநிலை, மதத்தின் மீது ஆவிக்குரிய நிலை, வார்த்தைகளுக்கு மேல் உருவங்கள், வெளிப்புறத்திற்கு மேல் உள்ளானவை. எது நல்லது? கெட்டது எது? நவீனத்துவத்திற்கு எதிரான ஒவ்வொரு எதிர்வினையும் ஒருவரின் நம்பிக்கையை வேதாகம சத்தியத்திலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்தது. இது, நிச்சயமாக, ஒவ்வொரு விசுவாசியையும் சார்ந்தது. இருப்பினும், அத்தகைய சிந்தனையின் கீழ் குழுக்கள் உருவாகும் போது, இறையியல் மற்றும் கோட்பாடு தாராளமயத்தை நோக்கி அதிகம் சாய்கின்றன.

உதாரணமாக, அனுபவத்தை பகுத்தறிவை விட உயர்வாக மதிப்பிடுவதால், சத்தியம் தனிப்பட்டதாகிறது. இது எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது, ஏனெனில் இது வேதாகமம் முழுமையான சத்தியம் என்கிற தரத்தைக் குறைக்கிறது, மேலும் பல சந்தர்ப்பங்களில் வேதாகமச் சத்தியத்தை முழுமையானதாக தகுதியற்றதாக்குகிறது. முழுமையான சத்தியத்துக்கான ஆதாரமாக வேதாகமம் இல்லாவிட்டால், சத்தியம் என்ன என்பதை வரையறுத்து விளக்குவதற்கு தனிப்பட்ட அனுபவத்திற்கு அனுமதி இருந்தால், இயேசு கிறிஸ்துவில் வைக்கும் இரட்சிக்கும் விசுவாசம் அர்த்தமற்றதாகிவிடும்.

மனிதகுலம் தற்போதைய பூமியில் வசிக்கும் வரை சிந்தனையில் எப்போதும் “முன்மாதிரி மாற்றங்கள்” இருக்கும், ஏனென்றால் மனிதகுலம் தொடர்ந்து அறிவிலும் அந்தஸ்திலும் தன்னை மேம்படுத்த முயல்கிறது. நம் சிந்தனை முறைக்கு சவால்கள் நல்லது, அவை நம்மை வளரவும், கற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் காரணமாகின்றன. இதுவே ரோமர் 12:2-ன் கொள்கை, நம் மனம் மாற்றமடைகிறது. ஆயினும்கூட, நாம் எப்போதும் அப்போஸ்தலர் 17:11-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் பெரோயா பட்டணத்தாரைப் போல இருக்க வேண்டும், ஒவ்வொரு புதிய போதனையையும், ஒவ்வொரு புதிய சிந்தனையையும், வேதத்திற்கு எதிராக எடைபோட வேண்டும். நம்முடைய அனுபவங்கள் வேதத்தை நமக்காக விளக்குவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம், ஆனால் நாம் கிறிஸ்துவுடன் நம்மை மாற்றிக் கொள்ளும்போது, நம் அனுபவங்களை வேதத்தின்படி விளக்குகிறோம். துரதிர்ஷ்டவசமாக, பின்நவீனத்துவ கிறிஸ்தவத்தை ஆதரிக்கும் வட்டாரங்களில் இது நடப்பதில்லை.

[English]



[முகப்பு பக்கம்]

பின்-நவீனத்துவ கிறிஸ்தவம் என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.