மனிதர்கள், வரல

கேள்வி மனிதர்கள், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் மற்றும் ஆதிகாலத்து மனிதர்கள் குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது? பதில் வேதாகமம் “குகை மனிதன்” அல்லது “ஆதிகாலத்து மனிதன்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, வேதாகமத்தின்படி “வரலாற்றுக்கு முந்தைய” மனிதன் என்று எதுவும் இல்லை. “வரலாற்றுக்கு முந்தையது” என்ற சொல்லின் அர்த்தம் “பதிவுசெய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது ஆகும். வேதாகம கணக்கு வெறுமனே ஒரு புனைக்கதை என்று அது முன்வைக்கிறது, ஏனென்றால் ஆதியாகமம் புத்தகம் மனிதனின் படைப்புக்கு முந்தைய நிகழ்வுகளை…

கேள்வி

மனிதர்கள், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் மற்றும் ஆதிகாலத்து மனிதர்கள் குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது?

பதில்

வேதாகமம் “குகை மனிதன்” அல்லது “ஆதிகாலத்து மனிதன்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, வேதாகமத்தின்படி “வரலாற்றுக்கு முந்தைய” மனிதன் என்று எதுவும் இல்லை. “வரலாற்றுக்கு முந்தையது” என்ற சொல்லின் அர்த்தம் “பதிவுசெய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது ஆகும். வேதாகம கணக்கு வெறுமனே ஒரு புனைக்கதை என்று அது முன்வைக்கிறது, ஏனென்றால் ஆதியாகமம் புத்தகம் மனிதனின் படைப்புக்கு முந்தைய நிகழ்வுகளை பதிவு செய்கிறது (அதாவது, படைப்பின் முதல் ஐந்து நாட்கள் மற்றும் மனிதன் ஆறாவது நாளில் படைக்கப்பட்டான் என்பதைக் குறிப்பிடுகிறது). ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே பரிபூரண மனிதர்களாக இருந்தார்கள், குறைந்த வாழ்க்கை வடிவங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியைப்பெற்று உருவாகவில்லை என்பதுதான் வேதாகமம் தெளிவாகப் போதிக்கும் காரியமாகும்.

பூமியுடன் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான எழுச்சியின் ஒரு காலத்தை வேதாகமம் விவரிக்கிறது – அதாவது ஜலப்பிரளயம் (ஆதியாகமம் 6-9), அந்த நேரத்தில் எட்டு பேரைத் தவிர நாகரிகம் முற்றிலும் அழிக்கப்பட்டது. மனிதஇனம் மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வரலாற்றுச் சூழலில்தான் சில அறிஞர்கள் ஆண்கள் குகைகளில் வாழ்ந்து கல் கருவிகளைப் பயன்படுத்தினர் என்று நம்புகிறார்கள். இந்த மனிதர்கள் பழமையானவர்கள் அல்ல; அவர்கள் வெறுமனே ஆதரவற்றவர்கள் என்பது மட்டுமேயாகும். அவர்கள் நிச்சயமாக அரை மனிதகுரங்கு இல்லை. ஆனால் மறுபுறம் புதைபடிவ சான்றுகள் மிகவும் தெளிவாக உள்ளன: குகை மனிதர்கள் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் என்று கூறுகின்றன.

சில புதைபடிவ மனிதகுரங்குகளின் எச்சங்கள் உள்ளன, அவை டார்வினிய பேலியோ-மானுடவியலாளர்கள் குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒருவித மாற்றம் உள்ளது என்று விளக்குகின்றன. குகை மனிதர்களை கற்பனை செய்யும் போதுதான் பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட இந்த விளக்கங்களைப் பற்றி யோசிப்பதாகத் தெரிகிறது. அவர்கள் உரோமம் நிறைந்த அரை மனிதர்கள், அரைகுரங்கு உயிரினங்கள் நெருப்புக்கு அடுத்த ஒரு குகையில் வளைந்துகொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட கல் கருவிகளால் சுவர்களில் வரைந்துள்ளனர் என்பதாகும். இது பொதுவான ஒரு தவறான கருத்தாகும். டார்வினிய பேலியோ-மானுடவியல் செல்லும் வரையில், இந்த விளக்கங்கள் ஒரு விசித்திரமான உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன என்பதையும் அவை ஆதாரங்களின் விளைவாக இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில், கல்வி சமூகத்திற்குள் இந்த விளக்கங்களுக்கு பெரும் எதிர்ப்பு இருப்பது மட்டுமல்லாமல், டார்வினிஸ்டுகளே இந்த விவரங்களில் ஒருவருக்கொருவர் முழுமையாக உடன்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

துரதிர்ஷ்டவசமாக, பிரபலமான பிரதான பார்வையானது மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து உருவானவர்கள் என்ற இந்த கருத்தை ஊக்குவிக்கிறது, ஆனால் இது நிச்சயமாக கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் ஒரே நம்பத்தகுந்த விளக்கம் அல்ல. உண்மையில், இந்த குறிப்பிட்ட விளக்கத்திற்கு ஆதரவான சான்றுகளே இல்லை.

தேவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, அவர்கள் முழுமையாக வளர்ந்த மனிதர்கள், தொடர்பு, சமூகம் மற்றும் வளர்ச்சி திறன் கொண்டவர்களாக இருந்தார்கள் (ஆதியாகமம் 2:19-25; 3:1-20; 4:1-12). வரலாற்றுக்கு முந்தைய குகை மனிதர்களின் இருப்பை நிரூபிக்க பரிணாம விஞ்ஞானிகள் செல்லும் தொலைதூரத்தைக் கருத்தில் கொள்வது கிட்டத்தட்ட ஒரு பொழுதுபோக்குத்தான். அவர்கள் ஒரு குகையில் ஒரு உருவமற்ற பல்லைக் கண்டுபிடித்து, அதிலிருந்து அந்த குகையில் வாழ்ந்திருந்ததாக ஒரு குரங்கு போல பதுங்கியிருந்த ஒரு உருவமற்ற மனிதனை உருவாக்குகிறார்கள். குகை மனிதர்களின் இருப்பை ஒரு புதைபடிவத்தால் விஞ்ஞானம் நிரூபிக்க வழியே இல்லை. பரிணாம விஞ்ஞானிகள் வெறுமனே ஒரு கோட்பாட்டைக் கொண்டுள்ளனர், பின்னர் அவர்கள் கோட்பாட்டிற்கு பொருந்துமாறு ஆதாரங்களை ஜோடித்து கட்டாயப்படுத்துகிறார்கள். ஆதாமும் ஏவாளும் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்ட முதல் மனிதர்கள் மற்றும் அவர்கள் முழுமையாக உருவானவர்கள், புத்திசாலிகள் மற்றும் நேர்மையானவர்கள் ஆகும்.

[English]



[முகப்பு பக்கம்]

மனிதர்கள், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் மற்றும் ஆதிகாலத்து மனிதர்கள் குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.