மனித ஆவி என்றால் என்ன?

கேள்வி மனித ஆவி என்றால் என்ன? பதில் மனித ஆவியானது மனிதனின் உடலற்ற பகுதியாகும். மனித ஆவி என்பது சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவசுவாசம் என்று வேதாகமம் கூறுகிறது மற்றும் தேவனுடைய சிருஷ்டிப்பின் தொடக்கத்தில் மனிதனுக்குள் ஊதப்பட்டது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதியாகமம் 2:7). மனித ஆவியே நமக்கு சுய உணர்வு மற்றும் பிற குறிப்பிடத்தக்க, வரையறுக்கப்பட்ட, “தேவனைப் போன்ற” குணங்களை அளிக்கிறது. மனித ஆவியில்…

கேள்வி

மனித ஆவி என்றால் என்ன?

பதில்

மனித ஆவியானது மனிதனின் உடலற்ற பகுதியாகும். மனித ஆவி என்பது சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவசுவாசம் என்று வேதாகமம் கூறுகிறது மற்றும் தேவனுடைய சிருஷ்டிப்பின் தொடக்கத்தில் மனிதனுக்குள் ஊதப்பட்டது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதியாகமம் 2:7). மனித ஆவியே நமக்கு சுய உணர்வு மற்றும் பிற குறிப்பிடத்தக்க, வரையறுக்கப்பட்ட, “தேவனைப் போன்ற” குணங்களை அளிக்கிறது. மனித ஆவியில் நமது அறிவுத்திறன், உணர்ச்சிகள், அச்சங்கள், உணர்வுகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அடங்கும். இந்த ஆவிதான் அறிந்துகொள்ளவும் மற்றும் புரிந்துகொள்ளவும் தனித்துவமான திறனை நமக்கு வழங்குகிறது (யோபு 32:8, 18).

ஆவி மற்றும் சுவாசம் என்ற வார்த்தைகள் எபிரேய வார்த்தையான நெஷாமா மற்றும் கிரேக்க வார்த்தையான நியுமாவின் மொழிபெயர்ப்பு ஆகும். இந்த வார்த்தைகளுக்கு “பலமான காற்று, வெடிப்பு அல்லது ஏவுதல்” என்று பொருள். மனிதகுலத்தை உயிர்ப்பிக்கும் ஜீவனின் ஆதாரம் தான் நெஷாமா (யோபு 33:4). கண்ணுக்குப் புலப்படாத, கண்ணுக்குத் தெரியாத மனித ஆவிதான் மனிதனின் மனம் மற்றும் உணர்ச்சி இருப்பை நிர்வகிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், “மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?” என்று கூறினார். (1 கொரிந்தியர் 2:11). மரணத்திற்குப் பின்னர் “ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் திரும்புகிறது” (பிரசங்கி 12:7; யோபு 34:14-15; சங்கீதம் 104:29-30).

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆவி உள்ளது, அது விலங்குகளின் “ஆவி” அல்லது உயிரிலிருந்து வேறுபட்டது. தேவன் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசமாகப் படைத்தார், ஏனெனில் அவர் நம்மை “தேவனுடைய சாயலில்” படைத்தார் (ஆதியாகமம் 1:26-27). எனவே, மனிதன் சிந்திக்கவும், உணரவும், நேசிக்கவும், வடிவமைக்கவும், உருவாக்கவும், இசை, நகைச்சுவை மற்றும் கலை ஆகியவற்றை அனுபவிக்கவும் முடிகிறது. பூமியில் உள்ள வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு “சுதந்திரம்” நமக்கு இருப்பது மனித ஆவியின் காரணமாகும்.

பாவத்தின் வீழ்ச்சியில் மனித ஆவி சேதமடைந்தது. ஆதாம் பாவம் செய்தபோது, தேவனுடனான ஐக்கியங்கொள்ளும் திறன் உடைந்தது; அவன் அன்று உடல் ரீதியாக இறக்கவில்லை, ஆனால் அவன் ஆவிக்குரிய ரீதியில் மரித்தான். அப்போதிருந்து, மனித ஆவி வீழ்ச்சியின் விளைவுகளைச் சுமந்தது. இரட்சிப்புக்கு முன், ஒரு நபர் ஆன்மீக ரீதியில் “மரித்தவர்” என்று வகைப்படுத்தப்படுகிறார் (எபேசியர் 2:1-5; கொலோசெயர் 2:13). கிறிஸ்துவுடனான உறவு நம் ஆவிகளை உயிர்ப்பித்து, நாளுக்கு நாள் நம்மை புதுப்பிக்கிறது (2 கொரிந்தியர் 4:16).

சுவாரஸ்யமாக, மனித ஆவி தெய்வீகமாக முதல் மனிதனுக்குள் ஊதப்பட்டது போலவே, பரிசுத்த ஆவியானவர் முதல் சீடர்களுக்குள் யோவான் 20:22 இல் ஊதப்பட்டார்: “அவர் [இயேசு] அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்” (யோவான் 20:22; அப்போஸ்தலர் 2:38ஐயும் பார்க்கவும்). ஆதாம் தேவனுடைய சுவாசத்தால் உயிர்ப்பிக்கப்பட்டான், கிறிஸ்துவில் “புதிய சிருஷ்டிகளாக” நாம் ஆவிக்குரிய விதத்தில் “தேவனுடைய சுவாசம்”, பரிசுத்த ஆவியானவர் (2 கொரிந்தியர் 5:17; யோவான் 3:3; ரோமர் 6:4). இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டவுடன், தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மால் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் நம் சொந்த ஆவியுடன் இணைகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் கூறினார், “அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 4:13).

நாம் தேவனுடைய ஆவியானவரை நம் வாழ்க்கையை நடத்த அனுமதிக்கும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்” (ரோமர் 8:16). தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் இனி நம் சொந்த ஆவியால் வழிநடத்தப்படுவதில்லை, மாறாக நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறோம்.

[English]



[முகப்பு பக்கம்]

மனித ஆவி என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.