மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

கேள்வி மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா? பதில் யோவான் 3:13 கூறுகிறது, “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” இந்த வசனத்தை விளக்குவது சற்று கடினமாக உள்ளது மற்றும் பெரும்பாலும் இந்த வசனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. வேதாகமத்தில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிய விரும்புபவர்களால் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வசனத்தின் பின்னணியில், வசனங்கள் 10-12 ஐப் பார்க்கும்போது, இயேசு தனது போதனையின் அதிகாரம் மற்றும் உத்திரவாதத்தின் தலைப்பில் பேசுவதைக் காண்கிறோம். வசனம் 13 இல், இயேசு…

கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்

யோவான் 3:13 கூறுகிறது, “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” இந்த வசனத்தை விளக்குவது சற்று கடினமாக உள்ளது மற்றும் பெரும்பாலும் இந்த வசனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. வேதாகமத்தில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிய விரும்புபவர்களால் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வசனத்தின் பின்னணியில், வசனங்கள் 10-12 ஐப் பார்க்கும்போது, இயேசு தனது போதனையின் அதிகாரம் மற்றும் உத்திரவாதத்தின் தலைப்பில் பேசுவதைக் காண்கிறோம். வசனம் 13 இல், இயேசு நிக்கோதேமுவுக்கு ஏன் இவற்றைப் பற்றி பேசத் தகுதியானவர் அவர் ஒருவர் மட்டுமே என்பதை விளக்குகிறார், அதாவது, பரலோகத்திற்கு ஏறிச் சென்றவர் அவர் ஒருவரே, பின்னர் ஜனங்களுக்குப் போதிக்கத்தக்கதாக பரலோகத்திலிருந்து இறங்கி அறிவைக் கொண்டு வந்தவரும் அவரே.

ஆகவே, பரலோகக் காரியங்களைப் பற்றி இயேசுவைப் போல அதிகாரபூர்வமாக எந்த மனிதனும் பேச முடியாது. அப்படி அந்த காரியங்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு இயேசுவைப்போல பார்த்தது மற்றும் அனுபவித்தது போன்றதான காரியங்கள் தேவையாய் இருக்கின்றன. யாரும் பரலோகத்திற்கு ஏறி திரும்பி வராதது போல், பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவரைத் தவிர வேறு யாரும் இவற்றைப் பேசத் தகுதியற்றவர்கள். பிதாவைக் கண்டவர் அவர் ஒருவரே என்றும், தேவனை அறிவிக்கவும், அவரைத் தெரிவிக்கவும் அவர் ஒருவரே தகுதியானவர் என்றும் இயேசு சொன்னார் (யோவான் 1:18).

யாரும் பரலோகத்திற்கு ஏறிச் செல்லவில்லை அல்லது இரட்சிக்கப்படவில்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் ஏனோக்கும் எலியாவும் அங்கே இருந்தனர் (ஆதியாகமம் 5:24; எபிரெயர் 11:5; 2 இராஜாக்கள் 2:11) மற்றும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் மற்றவர்கள் அங்கு இருந்தனர். மாறாக, அங்குள்ள காரியங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதியுடையவர்களாக யாரும் ஏறிப் பிறகு “திரும்பி” வரவில்லை என்று அர்த்தமாகும். “பரமேறுதல்” என்பது அதிகாரத்துடன் சில இடத்திற்குச் செல்லும் எண்ணத்தைக் கொண்டுள்ளது. தேவனுடைய ஒரே பேறான குமாரன் (யோவான் 1:14) என்பதால், அதிகாரத்துடன் பரலோகத்திற்கு ஏறிய ஒரே ஒருவர் இயேசு மட்டுமே.

[English]



[முகப்பு பக்கம்]

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.