மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

கேள்வி மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா? பதில் பரலோகத்தின் பொன் வீதிகள் பெரும்பாலும் பாடல் மற்றும் கவிதைகளில் குறிப்பிடப்படுகின்றன, ஆனால் வேதாகமத்தில் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. உண்மையில், பொன் வீதிகளைக் குறிப்பிடும் ஒரே ஒரு வேதப் பகுதி மட்டுமே உள்ளது, அது பரிசுத்த நகரமான புதிய எருசலேமில் உள்ளது: “…நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது” (வெளிப்படுத்துதல் 21: 1, 21). அப்படியானால், பரலோகத்தில் பொன் வீதிக்கள் இருக்கும் என்று இந்த வசனம் சொல்கிறதா? அப்படியானால், பொன்…

கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்

பரலோகத்தின் பொன் வீதிகள் பெரும்பாலும் பாடல் மற்றும் கவிதைகளில் குறிப்பிடப்படுகின்றன, ஆனால் வேதாகமத்தில் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. உண்மையில், பொன் வீதிகளைக் குறிப்பிடும் ஒரே ஒரு வேதப் பகுதி மட்டுமே உள்ளது, அது பரிசுத்த நகரமான புதிய எருசலேமில் உள்ளது: “…நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது” (வெளிப்படுத்துதல் 21: 1, 21). அப்படியானால், பரலோகத்தில் பொன் வீதிக்கள் இருக்கும் என்று இந்த வசனம் சொல்கிறதா? அப்படியானால், பொன் வீதிக்களின் முக்கியத்துவம் அல்லது சிறப்பு என்ன?

“பொன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது க்ரூசியோன் (chrusion) ஆகும், இது “பொன், பொண்ணாபரங்கள் அல்லது மேலடுக்கு” என்று பொருள்படும். எனவே அதை “பொன்” என்று மொழிபெயர்ப்பது சரியானது. உண்மையில், வேதாகமத்தின் எந்தப் பகுதிகளை உண்மையில் எடுத்துக்கொள்ள வேண்டும், எந்தப் பகுதிகளை அடையாளப்பூர்வமாக எடுக்க வேண்டும் என்பதை ஜனங்கள் தீர்மானிக்க முயலும்போது, விளக்கப் போராட்டங்கள் அடிக்கடி எழுகின்றன. வேதாகமத்தைப் படிக்கும் போது ஒரு சிறந்த விதி என்னவென்றால், அவ்வாறு செய்வதில் அர்த்தமில்லையென்றால், எல்லாவற்றையும் எழுத்தியல் பிரகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படுத்துதலின் இந்த அதிகாரத்தில், யோவான் சீரற்ற விளக்கச் சொற்களை மட்டும் குறிப்பிடவில்லை. வெளிப்படுத்தல் 21-ன் ஆரம்பப் பகுதிகளில், நகரத்தை அளக்க அவருக்கு ஒரு தடி கொடுக்கப்பட்டுள்ளது (வசனம் 15), மேலும் அவர் குறிப்பாக பரலோகத்தின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது மற்றும் நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது என்று விவரிக்கிறார் (வசனம் 18). நகரச் சுவர்களின் அஸ்திபாரங்கள் பல குறிப்பிட்ட விலையேறப்பெற்ற கற்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டதாகவும் அவர் விவரிக்கிறார் (வசனங்கள் 19-20). எனவே, இந்த பிரத்தியேகங்களை மனதில் கொண்டு, பொன் வீதிகளின் விளக்கம் பொருந்துகிறது.

பரலோகத்தின் வீதிகள் பொன்னால் ஆனது என்பதற்கான பயன் என்ன? முதலில், பொன்னின் நிலையை கவனியுங்கள். பூமியில் தங்கம் வெளிப்படும் போது, அது நகைக்கடைக்காரர்கள் தேடுவது போன்ற விரும்பத்தக்க நிலையில் இல்லை. சுத்தமான தங்கத்தை மட்டும் விட்டுவிட்டு, அசுத்தங்களை அகற்ற தங்கத்தை உருக்க வேண்டும். ஆனால் பரலோகத்தில் யோவான் பார்த்த பொன், தேவனுடைய மகிமையின் தூய பிரகாசத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. சுத்திகரிக்கும் தேவனுடைய திறன் தங்கத்தில் மட்டும் நின்றுவிடவில்லை; தேவன் தம் பரலோகத்தில் பிரவேசிக்கும் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தூய்மைப்படுத்தினார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). தேவனுடைய பரிசுத்த நகரம் அவருடைய வடிவமைப்பால் தூய்மையான ஒன்றாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த நகரத்தின் குடிமக்களும் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள்.

பரலோகத்தின் பொன் வீதிகள் என்பது உண்மையானது என்ற கருத்தை ஏற்காத சில வேத அறிஞர்கள் உள்ளனர். இருப்பினும், யோவானுடைய வெளிப்பாட்டின் பின்னணியில் தேவன் நமக்கு வழங்கிய வசனங்களை எளிமையாகப் பார்ப்பதன் மூலம், அதை சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை. இருப்பினும், நித்தியத்தில் நமது கவனம் பூமிக்குரிய பொக்கிஷங்களில் கவனம் செலுத்துவதில்லை. பூமியில் பொன் போன்ற பொக்கிஷங்களை மனிதன் பின்தொடர்ந்தாலும், ஒரு நாள் அது பரலோகத்தில் உள்ள விசுவாசிகளுக்கு நடைபாதையின் ஆதாரமாக இருப்பதை அல்லாமல் வேறில்லை. எத்தனை விலைமதிப்பற்ற நகைகள் அல்லது பொருட்கள் பரலோகத்தின் பௌதிக கட்டுமானத்தை உருவாக்கினாலும், நம்மை நேசித்து நம்மை இரட்சிப்பதற்காக மரித்த தேவனை விட வேறெதுவும் பெரிய மதிப்புடையதாக இருக்காது.

[English]



[முகப்பு பக்கம்]

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.