மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

கேள்வி மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா? பதில் “ஆத்தும நித்திரை” என்பது ஒரு நபர் இறந்த பிறகு, அவரது உயிர்த்தெழுதல் மற்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவரது / அவள் ஆத்துமா நித்திரைச் செய்கிறது என்ற நம்பிக்கையாகும். “ஆத்தும நித்திரை” என்ற கருத்து வேதாகமத்தின்படியானதல்ல. ஒரு நபர் மரணத்துடன் “நித்திரைச் செய்கிறார்” என்று வேதாகமம் விவரிக்கும்போது (லூக்கா 8:52; 1 கொரிந்தியர் 15:6), இதன் பொருள் வெறுமனே நித்திரை என்று அர்த்தமல்ல. நித்திரை என்பது மரணத்தை…

கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்

“ஆத்தும நித்திரை” என்பது ஒரு நபர் இறந்த பிறகு, அவரது உயிர்த்தெழுதல் மற்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவரது / அவள் ஆத்துமா நித்திரைச் செய்கிறது என்ற நம்பிக்கையாகும். “ஆத்தும நித்திரை” என்ற கருத்து வேதாகமத்தின்படியானதல்ல. ஒரு நபர் மரணத்துடன் “நித்திரைச் செய்கிறார்” என்று வேதாகமம் விவரிக்கும்போது (லூக்கா 8:52; 1 கொரிந்தியர் 15:6), இதன் பொருள் வெறுமனே நித்திரை என்று அர்த்தமல்ல. நித்திரை என்பது மரணத்தை விவரிக்க ஒரு வழியாகும், ஏனெனில் ஒரு இறந்த சரீரம் நித்திரைச் செய்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நாம் இறக்கும் தருணத்தில், தேவனுடைய தீர்ப்பை எதிர்கொள்கிறோம் (எபிரெயர் 9:27). விசுவாசிகளைப் பொறுத்தவரை, சரீரத்திலிருந்து விலகி கர்த்தரிடத்தில் இருப்பதாகும் (2 கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:23). அவிசுவாசிகளுக்கு, மரணம் என்பது நரகத்தில் நித்திய தண்டனை என்று பொருள் (லூக்கா 16:22-23).

இறுதி உயிர்த்தெழுதல் வரை, ஒரு தற்காலிக பரலோகம் – பரதீசு (லூக்கா 23:43; 2 கொரிந்தியர் 12:4) மற்றும் ஒரு தற்காலிக நரகம் – ஹேடேஸ் (வெளிப்படுத்துதல் 1:18; 20:13-14) இருக்கிறது. லூக்கா 16:19-31-ல் தெளிவாகக் காணப்படுவது போல, பரலோகத்திலோ அல்லது ஹேடேஸிலோ ஜனங்கள் நித்திரைச் செய்வதில்லை. இருப்பினும், ஒரு நபரின் ஆத்துமா பரதீசுவில் அல்லது ஹேடேஸில் இருக்கும்போது, அவருடைய சரீரம் “நித்திரைச் செய்கிறது” என்று சொல்லலாம். உயிர்த்தெழுதலில், இந்த சரீரம் “விழித்தெழுந்து” பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ இருந்தாலும் ஒரு நபர் நித்தியத்திற்காக வைத்திருக்கும் நித்திய சரீரமாக மாற்றப்படுகிறது. பரலோகத்தில் இருப்பவர்கள் புதிய வானங்களுக்கும் புதிய பூமிக்கும் அனுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 21:1). ஹேடேஸில் இருப்பவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 20:11-15). தனது நித்திய இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவை ஒருவர் நம்புகிறாரா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மக்களின் இறுதி மற்றும் நித்திய இடங்கள் நிர்ணயிக்கப்படும்.

[English]



[முகப்பு பக்கம்]

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.