விலக்கீடு செய்தல் என்றால் என்ன மற்றும் அது வேதத்திற்கு உட்ப்பட்டதா?

கேள்வி விலக்கீடு செய்தல் என்றால் என்ன மற்றும் அது வேதத்திற்கு உட்ப்பட்டதா? பதில் விலக்கீடு செய்தல் என்பது ஒரு இறையியல் முறை. இதற்கு இரண்டு விதங்கள் இருக்கிறது: முறன்பாடில்லாமல் வேதத்தை, குறிப்பாக வேதத்தின் தீர்க்கதரிசனங்களை, எழுத்தின்படி விளக்குவது. தேவனின் திட்டத்தில் இஸ்ரவேல் மற்றும் சபையின் நடுவே இருக்கும் வித்தியாசம். விலக்கீடு செய்பவர்கள் வேதத்தை எழுத்தின்படி விலக்கம் செய்வதே அவர்களின் வேத விலக்க நியமம் என்கின்றனர், அதாவது ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் அதின் தினசரி உபயோகத்தின் அர்த்தம் கொடுப்பதாகும்….

கேள்வி

விலக்கீடு செய்தல் என்றால் என்ன மற்றும் அது வேதத்திற்கு உட்ப்பட்டதா?

பதில்

விலக்கீடு செய்தல் என்பது ஒரு இறையியல் முறை. இதற்கு இரண்டு விதங்கள் இருக்கிறது: முறன்பாடில்லாமல் வேதத்தை, குறிப்பாக வேதத்தின் தீர்க்கதரிசனங்களை, எழுத்தின்படி விளக்குவது. தேவனின் திட்டத்தில் இஸ்ரவேல் மற்றும் சபையின் நடுவே இருக்கும் வித்தியாசம்.

விலக்கீடு செய்பவர்கள் வேதத்தை எழுத்தின்படி விலக்கம் செய்வதே அவர்களின் வேத விலக்க நியமம் என்கின்றனர், அதாவது ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் அதின் தினசரி உபயோகத்தின் அர்த்தம் கொடுப்பதாகும். இந்த முறைமையில் சின்னங்கள் மற்றும் உவமைகளை எளிதாக விலக்கம் கொடுக்கப்படுகிறது. இது எழுத்தின்படி வியாக்கியானம் செய்யும் முறைமைக்கு ஒப்பானது. சின்னங்கள் மற்றும் உவமைகளுக்கும் எழுத்தின்படியான அர்த்தங்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

வேதத்தை இந்த விதத்தில் பார்பது மிகவும் சிறந்த வழி என்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது, தத்துவ ரீதியாக, ஒரு மொழியை எழுத்தின்படி விலக்குவதே மொழியின் நோக்கம். மொழி தேவனால் கொடுக்கப்பட்டது; அது மனிதர்களுக்கு தொடர்புகொள்ளும்படி தரப்பட்டது. இரண்டாவது காரணம் வேதத்தை சார்ந்தது. இயேசுவை பற்றிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் எழுத்தின்படி நிறைவேறின. இயேசுவின் பிறப்பு, அவர் மரணம், அவர் உயிர்த்தெழுதல் இவை பழைய ஏற்பாட்டில் முன்குறித்தப்படி அப்படியே எழுத்தின்படி நடந்தன. இயேசுவை பற்றி சொல்லப்பட்ட இந்த தீர்க்கதரிசனங்களில், புதிய ஏற்பாட்டில் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் ஒன்றும் இல்லை. எழுத்தின்படி விலக்குவதே சிறந்த வழி என்று இவைகள் காண்பிக்கிறது. வேதத்தை வாசிக்கும்போது நாம் அதை எழுத்தின்படி விவரிக்க வேண்டும், இல்லை என்றால் அதை புரிந்துகொள்ள புறநிலை நியமம் இல்லாமல் போய்விடும். ஒவ்வொரு மனிதனும் தனக்கேற்றபடி வேத விலக்கத்தை தர கூடும். இப்படி “வேதம் என்ன சொல்லுகிறது” என்பதற்கு பதிலாக, “இந்த பகுதி எனக்கு என்ன சொல்லுகிறது” என்ற அடிப்படையில் வேதத்தை மக்கள் வியாக்கியானம் செய்ய தொடங்குவார்கள். வேதனையான விஷயம் என்னவென்றால், வேத விலக்கம் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது.

தேவ ஜனங்களில் இரண்டு குழுவினர் இருக்கிறார்கள் என்று விலக்கீடு இறையியல் போதிக்கிறது: அவர்கள் இஸ்ரவேலர் மற்றும் சபை. இரட்சிப்பு விசுவாசத்தின் மூலமாக – அதாவது பழைய ஏற்பாட்டில் தேவன் மேல் உள்ள விசுவாசம், புதிய ஏற்பாட்டில் தேவ குமாரன் மேல் உள்ள விசுவாசம் – வருகிறது என்று விலக்கீடு செய்பவர்கள் நம்புகின்றனர். தேவ திட்டத்தில், சபை இஸ்ரவேலின் இடம் பெறவில்லை என்றும், பழைய ஏற்ப்பாட்டில் இஸ்ரவேலருக்கு அருளப்பட்ட வாக்குதத்தங்கள் சபைக்கு மாற்றப்படவில்லை என்றும் விசுவாசிக்கின்றனர். பழைய ஏற்ப்பாட்டில் இஸ்ரவேலருக்கு அருளப்பட்ட வாக்குதத்தங்கள் (நிலம், சந்ததியார், மற்றும் ஆசீர்வாதங்களை) ஆயிர வருட அரசாட்சியின் காலத்தில் (வெளிப்படுத்தல்-20) இறுதியாக நிறைவேறும் என்று நம்புகின்றனர். தேவன் இந்த காலத்தில் சபையின் மேல் நோக்கம் செலுத்துகிறது போல, வருங்காலத்தில் அவர் திரும்பவும் இஸ்ரவேலின் மேல் நோக்கம் கொள்வார் என்று நம்புகின்றனர் (ரோமர்-9-11).

இதை அடிப்படையாக கொண்டு, விலக்கீடு முறைமையாளர்கள் வேதத்தை ஏழு முறையாட்சிகளாக அமைக்கிறார்கள்: கபடமற்ற (ஆதியாகமம்-1:1-3:7), மனசாட்சி (ஆதியாகமம்-3:8-8:22), மனித அரசாங்கம் (ஆதியாகமம்-9:1-11:32), வாக்குதத்தம் (ஆதியாகமம்-12:1-யாத்திரையாகமம்-19:25), நியாயப்பிரமானம் (யாத்திரையாகமம்-20:1-அப்போஸ்தலர்-2:4), கிருபை (அப்போஸ்தலர்-2:4-வெளிப்படுத்தல்-20:3), மற்றும் ஆயிர வருட ராஜ்யம் (வெளிப்படுத்தல்-20:4-6). இந்த விலக்கீடுகள் இரட்சிப்புக்கான வழிகள் அல்ல, மாறாக தேவன் மனிதனிடம் தொடர்புகொள்ளும் விதங்கள். விலக்கீடு அமைப்பு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றிய பிறிமிலேனியலிசத்தாரின் கருத்தாக இருக்கிறது, மற்றும் உபத்திரவ காலத்திற்கு முன் இரகசிய வருகை இருக்கும் என்று கருதுகிறது. சுருக்கமாக, விலக்கீடுதல் என்ற இறையியல் முறை வேத தீர்க்கதரிசனங்களை எழுத்தின்படி விளக்க வலியுறுத்துகிறது, இஸ்ரவேல் மற்றும் சபை வெவ்வேறானது என்று சொல்லுகிறது, வேதத்தில் உள்ள வெவ்வேறு முறையாட்சிகளின் பட்டியல் தருகிறது.

[English]



[முகப்பு பக்கம்]

விலக்கீடு செய்தல் என்றால் என்ன மற்றும் அது வேதத்திற்கு உட்ப்பட்டதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.