வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம்

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் எழுத்தாளர்: வெளிப்படுத்துதல் 1:1, 4, 9 மற்றும் 22:8 ஆகிய வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய யோவான் என்று குறிப்பாக அடையாளம் காட்டுகின்றன. எழுதப்பட்ட காலம்: வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் கி.பி. 90 மற்றும் கி.பி. 95 க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம். எழுதப்பட்டதன் நோக்கம்: இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு யோவானுக்கு “விரைவில் சம்பவிக்க வேண்டியதை அவருடைய ஊழியர்களுக்குக் காண்பிப்பதற்காக” வழங்கப்பட்டது. இந்த புத்தகம் இனி வரவிருக்கும் விஷயங்களைப் பற்றிய மர்மங்களால்…

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம்

எழுத்தாளர்: வெளிப்படுத்துதல் 1:1, 4, 9 மற்றும் 22:8 ஆகிய வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய யோவான் என்று குறிப்பாக அடையாளம் காட்டுகின்றன.

எழுதப்பட்ட காலம்: வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் கி.பி. 90 மற்றும் கி.பி. 95 க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு யோவானுக்கு “விரைவில் சம்பவிக்க வேண்டியதை அவருடைய ஊழியர்களுக்குக் காண்பிப்பதற்காக” வழங்கப்பட்டது. இந்த புத்தகம் இனி வரவிருக்கும் விஷயங்களைப் பற்றிய மர்மங்களால் / இரகசியங்களால் நிரப்பப்பட்டுள்ளது. உலகம் நிச்சயமாக முடிவடையும், நியாயத்தீர்ப்பு நிச்சயம் இருக்கும் என்பது இறுதி எச்சரிக்கையாகும். இது நமக்கு பரலோகத்தின் ஒரு சிறிய காட்சியைத் தருகிறது, மேலும் அவர்களின் ஆடைகளை வெண்மையாக வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் எல்லா மகிமைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. வெளிப்படுத்துதல் அதன் எல்லா உபத்திரவங்களுடனும், அவிசுவாசிகள் அனைவரும் நித்தியத்திற்காக எதிர்கொள்ளும் இறுதி அக்கினியினாலும் பெரும் உபத்திரவத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. புத்தகம் சாத்தானின் வீழ்ச்சியையும், அவனும் அவனுடைய தேவதூதர்களும் பிணைக்கப்பட்டுள்ள அழிவை மீண்டும் வலியுறுத்துகிறது. பரலோகத்தின் அனைத்து ஜீவராசிகள் மற்றும் தேவதூதர்களின் கடமைகளும், புதிய எருசலேமில் இயேசுவோடு என்றென்றும் வாழும் பரிசுத்தவான்களின் வாக்குறுதிகளும் நமக்குக் காட்டப்பட்டுள்ளன. யோவானைப் போலவே, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நாம் படித்ததை விவரிக்க வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினம்.

திறவுகோல் வசனங்கள்: வெளிப்படுத்துதல் 1:19, “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது.”

வெளிப்படுத்துதல் 13:16-17, “அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.”

வெளிப்படுத்துதல் 19:11, “பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.”

வெளிப்படுத்துதல் 20:11, “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.”

வெளிப்படுத்துதல் 21:1, “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.”

சுருக்கமான திரட்டு: கிறிஸ்துவின் வருகைக்கு முந்தைய நாட்களிலும், புதிய வானத்தையும் புதிய பூமியையும் கொண்டுவருவதற்கு கடைசி நாட்களில் நமக்கு அறிவிக்கும் தரிசனங்களின் வண்ணமயமான விளக்கங்களில் வெளிப்பாடு பகட்டானது. ஆசியா மைனரின் ஏழு திருச்சபைகளுக்கான கடிதங்களுடன் வெளிப்பாடு தொடங்குகிறது, பின்னர் பூமியில் கொட்டப்பட்ட பேரழிவுகளின் தொடர்ச்சியை வெளிப்படுத்துகிறது; மிருகத்தின் குறியீடு “666”; அர்மகெதோனின் உச்சகட்ட போர்; சாத்தானின் கட்டப்படுதல்; கர்த்தருடைய ஆயிரவருட ஆட்சி; பெரிய வெள்ளை சிங்காசன தீர்ப்பு; தேவனுடைய நித்திய நகரத்தின் தன்மை. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன, அவருடைய கர்த்தத்துவத்திற்கு ஒரு இறுதி அழைப்பு அவர் விரைவில் திரும்புவார் என்று நமக்கு உறுதியளிக்கிறது.

இணைப்புகள்: வெளிப்படுத்துதல் புத்தகம் பழைய ஏற்பாட்டில் தொடங்கிய அனைத்து இறுதி காலங்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலின் உச்சமாகும். தானியேல் 9:27-ல் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்க்கிறிஸ்துவின் விளக்கம் வெளிப்படுத்துதல் 13-ஆம் அதிகாரத்தில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்துதலுக்கு வெளியே, வேதாகமத்தில் வெளிப்படுத்தல் இலக்கியத்தின் எடுத்துக்காட்டுகள் தானியேல் 7-12 வரையிலுள்ள அதிகாரங்கள், ஏசாயா 24-27 வரையிலுள்ள அதிகாரங்கள், எசேக்கியேல் 37-41 வரையிலுள்ள அதிகாரங்கள் மற்றும் சகரியா 9-14 வரையிலுள்ள அதிகாரங்கள். இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஒன்றாக வந்துள்ளன.

நடைமுறை பயன்பாடு: கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்களா? அப்படியானால், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி உலகத்தைப் பற்றிய தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை. பிரதான நீதிபதி நம் பக்கத்தில் இருக்கிறார். இறுதித் தீர்ப்பு தொடங்குவதற்கு முன், கிறிஸ்துவில் நித்திய ஜீவனை தேவன் அளிப்பதைப் பற்றி நண்பர்களுக்கும் அயலகத்தார்களுக்கும் நாம் சாட்சி கொடுக்க வேண்டும். இந்த புத்தகத்தில் உள்ள நிகழ்வுகள் யாவும் உண்மையாகவே சம்பவிக்கப்போகிறவைகள் ஆகும். நாம் விசுவாசிப்பதைப் போலவே நாம் நம் வாழ்க்கையையும் வாழ வேண்டும், இதனால் மற்றவர்கள் நம் எதிர்காலத்தைப் பற்றிய மகிழ்ச்சியைக் கவனிப்பார்கள், மேலும் புதிய மற்றும் புகழ்பெற்ற நகரத்தில் நம்முடன் சேர விரும்புவார்கள்.

[English]



[முகப்பு பக்கம்]

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.