வேதாகமத்தின் போதனைகள் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம் இருக்கிறது?

கேள்வி வேதாகமத்தின் போதனைகள் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம் இருக்கிறது? பதில் தேவன் அவரைப் பற்றியும் அவருடைய வழிகளைப் பற்றியும் நமக்குக் கற்பிப்பதற்காக வேதாகமத்தைக் கொடுத்தார், மேலும் தேவன் கலகத்தின் தேவன் அல்ல (1 கொரிந்தியர் 14:33), எந்த கலகமும் அழிவின் சக்திகளான உலகம், மாம்சம் மற்றும் பிசாசினிடத்திலிருந்து வர வேண்டும். “உலகம்” என்பது தேவபக்தியற்ற உலக அமைப்பு மற்றும் தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளாத அல்லது அக்கறை கொள்ளாத அதன் மக்களைக் குறிக்கிறது; “மாம்சம்” என்பது…

கேள்வி

வேதாகமத்தின் போதனைகள் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம் இருக்கிறது?

பதில்

தேவன் அவரைப் பற்றியும் அவருடைய வழிகளைப் பற்றியும் நமக்குக் கற்பிப்பதற்காக வேதாகமத்தைக் கொடுத்தார், மேலும் தேவன் கலகத்தின் தேவன் அல்ல (1 கொரிந்தியர் 14:33), எந்த கலகமும் அழிவின் சக்திகளான உலகம், மாம்சம் மற்றும் பிசாசினிடத்திலிருந்து வர வேண்டும். “உலகம்” என்பது தேவபக்தியற்ற உலக அமைப்பு மற்றும் தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளாத அல்லது அக்கறை கொள்ளாத அதன் மக்களைக் குறிக்கிறது; “மாம்சம்” என்பது கிறிஸ்தவர்கள் தங்கள் தெய்வீக நடையை சிதைக்கும் நீடித்த பாவ சுபாவத்தைக் குறிக்கிறது; மேலும் “பிசாசு” என்பது சாத்தானையும் அவனுடைய பிசாசுகளையும் தேவனுடைய வார்த்தையைப் புரட்டுவதையும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வதையுங் குறிக்கிறது (2 கொரிந்தியர் 11:14-15).

இந்த சக்திகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அல்லது ஒற்றுமையாக செயல்பட்டு தேவனின் வார்த்தையைப் பற்றி மக்களை குழப்பலாம் அல்லது கலகத்தை ஏற்படுத்தலாம். துரதிர்ஷ்டவசமாக, வேதாகமத்தைப் பற்றிய குழப்பம் இரட்சிப்பின் தவறான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். இயேசு சோதிக்கப்பட்ட சாத்தானின் சோதனைகள் தேவனின் வார்த்தையின் தவறான விளக்கங்களைப் பயன்படுத்தின (மத்தேயு 4:1-11). சாத்தான் இன்று அதே தந்திரத்தைப் பயன்படுத்துகிறான், வேதத்தின் சத்தியத்தை எடுத்து அதை தவறாகப் பயன்படுத்துகிறான். பேரழிவான விளைவுகளை ஏற்படுத்த போதுமான அளவு தேவனின் வார்த்தையை புரட்டுவதில் சாத்தான் திறமையானவன்.

சில நேரங்களில், வேதாகமம் என்ன கற்பிக்கிறது என்பதில் ஏற்படும் குழப்பம் ஒரு மோசமான வேதாகம மொழிபெயர்ப்பிலிருந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலும், குழப்பம் என்பது விசுவாசிகளிடையே அவர்களின் கவனக்குறைவான வேதாகம வாசிப்பு முறைகள் மற்றும் கள்ளப்பிரசங்கிகள், கள்ளப்போதகர்கள் மற்றும் கள்ள எழுத்தாளர்களினுடைய கோட்பாடுகளின் விளைவாகும் (2 கொரிந்தியர் 11:12-13). இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் சரியான மொழிபெயர்ப்புகளை கூட எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அறியாமை அல்லது சொந்த வடிவமைப்பின் மூலம், தேவனின் வார்த்தையை தங்கள் சொந்த நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்காக அல்லது உலகத்தின் சிந்தனையை ஈர்ப்பதற்காக திரிக்கிறார்கள். தேவனின் வார்த்தையை நமக்கு கற்பிக்க மற்றவர்களை மட்டுமே நம்புவதற்கு பதிலாக, நாம் தேவனின் வார்த்தையை நாமே படித்து பரிசுத்த ஆவியானவரின் மீது சார்ந்திருக்க வேண்டும்.

சுவிசேஷத்தின் சத்தியத்தைக் குறித்ததான குழப்பமே மிகவும் கொடியது. வேதம் இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே வழி, ஒரே சத்தியம் மற்றும் ஒரே ஜீவன் (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12) என்று போதிக்கும் அதே வேளையில், தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் பரலோகத்தை மற்ற வழிகளிலும் மற்ற மதங்களிலும் பெற முடியும் என்று நம்புகிறார்கள். குழப்பம் இருந்தபோதிலும், மெய்யான ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்கும், அவரை மட்டுமே பின்பற்றும் (யோவான் 10:27). மேய்ப்பனுக்குச் சொந்தமில்லாதவர்கள் “ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துகொள்வார்கள்” (2 தீமோத்தேயு 4:3). தேவன் தனது ஆவியானவரையும், வேதாகம சத்தியத்தை மனத்தாழ்மையுடனும் பொறுமையுடனும், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் (2 தீமோத்தேயு 4:2) பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டார், மேலும் சத்திய வார்த்தையை சரியாகக் கையாளும் ஊழியக்காரர்கள் நம்மை அங்கீகரிப்பதைக் காண்பிக்க படிக்க வேண்டும் (2 தீமோத்தேயு 2:15). கர்த்தராகிய இயேசு திரும்பி வந்து அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வரை இதை நாம் செய்வோம்.

[English]



[முகப்பு பக்கம்]

வேதாகமத்தின் போதனைகள் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம் இருக்கிறது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.