வேதாகமத்தில் கறுப்பின மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள யாராவது இருக்கிறார்களா?

கேள்வி வேதாகமத்தில் கறுப்பின மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள யாராவது இருக்கிறார்களா? பதில் வேதாகமம் எந்த ஒரு நபரையும் கறுப்பு நிறத்தோல் உள்ளவர் என்று வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்கிறபோதிலும், ஆம், வேதாகமம் கறுப்பின மக்களைப் பற்றி குறிப்பிடுகிறது என்பதை நாம் ஓரளவு உறுதியாகக் கூறலாம். இருப்பினும், அதுபோலவே எந்த ஒரு நபரையும் வெள்ளை நிறமுள்ளவர் என்று வேதாகமம் குறிப்பிடவில்லை. ஒரு நபரின் தோல் நிறம் வேதாகமத்தில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது; வேதாகமத்தின் அடிப்படை செய்திக்கு ஒருவருடைய தோலின் நிறம் அர்த்தமற்றது….

கேள்வி

வேதாகமத்தில் கறுப்பின மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள யாராவது இருக்கிறார்களா?

பதில்

வேதாகமம் எந்த ஒரு நபரையும் கறுப்பு நிறத்தோல் உள்ளவர் என்று வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்கிறபோதிலும், ஆம், வேதாகமம் கறுப்பின மக்களைப் பற்றி குறிப்பிடுகிறது என்பதை நாம் ஓரளவு உறுதியாகக் கூறலாம். இருப்பினும், அதுபோலவே எந்த ஒரு நபரையும் வெள்ளை நிறமுள்ளவர் என்று வேதாகமம் குறிப்பிடவில்லை. ஒரு நபரின் தோல் நிறம் வேதாகமத்தில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது; வேதாகமத்தின் அடிப்படை செய்திக்கு ஒருவருடைய தோலின் நிறம் அர்த்தமற்றது.

வேதாகமத்தின் கதைகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு தேசங்களில், குறிப்பாக இஸ்ரேலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறுகிறது. “கருப்பு” அல்லது “வெள்ளை” இனமக்கள் இந்த பிராந்தியங்களில் பொதுவானவர்கள் அல்ல. வேதாகமத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப்பேரினஞ் சார்ந்தவர்கள் மற்றும் வெளிர் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் இருப்பார்கள். இறுதியில், வேதாகமத்தில் உள்ளவர்களுக்கு என்ன தோல் நிறம் இருந்தது என்பது முக்கியமில்லை.

சில அறிஞர்கள் மோசேயின் மனைவியான சிப்போராள் ஒரு எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயாக இருந்ததால் கறுப்பாக இருந்ததாக யூகிக்கிறார்கள் (எண்ணாகமம் 12:1). கூஷ் அல்லது எத்தியோப்பியா என்பது ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியின் பண்டைய பெயர். சூலமித்தியாள் கறுப்பாக இருந்திருக்கலாம் (உன்னதபாட்டு 1:5), சூரிய வெய்யிலில் வேலை செய்ததால் அவளுடைய தோல் கருமையாக இருந்ததாக இப்பகுதியின் சூழல் குறிப்பிடுகிறது. பத்சேபாள் (2 சாமுவேல் 11:3) கறுப்பாக இருந்ததாக சிலர் முன்மொழிகின்றனர். சாலமோனைச் சந்தித்த சேபா ராஜஸ்திரீ (1 இராஜாக்கள் 10:1) கருப்பு என்று சிலர் நம்புகிறார்கள். சிரேனே ஊரானாகிய சீமோன் (மத்தேயு 27:32) கறுப்பாக இருந்திருக்கலாம், மேலும் அப்போஸ்தலர் 13:1ல் “நீகர் என்னப்பட்ட சிமியோன்”. அப்போஸ்தலர் 8:37 இல் உள்ள எத்தியோப்பியன் மந்திரி கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில் இருந்தார். எத்தியோப்பியர்கள் சுமார் 40 முறை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர், மேலும் எத்தியோப்பியர்கள் கறுப்பர்கள் என்பதால் இவை கறுப்பின மக்களைப் பற்றிய குறிப்புகள் என்று நாம் கருதலாம். தீர்க்கதரிசி எரேமியா இப்படியா கேள்வியை எழுப்புகிறார், “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ?” (எரேமியா 13:23)—இயற்கையான அனுமானம் என்னவென்றால், எரேமியா கருப்பு தோலைக் குறிபிடுகிறார் என்பதாகும்.

கறுப்பின மக்கள் நோவாவின் மகன் காமின் சந்ததிகள் என்று பெரும்பாலான வேதாகம ஆசிரியர்கள் நம்புகிறார்கள் (ஆதியாகமம் 10:6-20), ஆனால் வேதாகமம் குறிப்பாகச் சொல்லாததால் நாம் உறுதியாக இருக்க முடியாது. தோல் நிறத்தைப் பொறுத்தவரை, வேதாகமம் தொடர்ந்து அமைதியாக இருக்கிறது. இருதயத்தின் நிலையைப் போல தோலின் நிறம் தேவனுக்கு முக்கியமல்ல. சுவிசேஷமானது உலகளாவிய நற்செய்தியாகும். கறுப்பின மக்கள், வெள்ளையர்கள் மற்றும் இடையில் உள்ள ஒவ்வொரு நிழலிலும் இரட்சிப்புக்காக கிறிஸ்துவிடம் வர அழைக்கப்படுகிறார்கள். தேவனுடைய கிருபையால் நம் கண்களை தோலில் இருந்து விலக்கி ஆத்துமாவில் கவனம் செலுத்த முடியும்.

[English]



[முகப்பு பக்கம்]

வேதாகமத்தில் கறுப்பின மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள யாராவது இருக்கிறார்களா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.