வேதாகமத்தில் பிழைகள், முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் உள்ளதா?

கேள்வி வேதாகமத்தில் பிழைகள், முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் உள்ளதா? பதில் வேதாகமத்தை குற்றம் கண்டுபிடிக்கிற முன்கூட்டிய ஒருதலைச் சார்பில்லாமல், முகமதிப்போடு படிக்கும்போது, அது இசைந்திணைகிற, முரண்பாடற்ற, எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடிய புத்தகமாக இருப்பதைப் புரிந்துக்கொள்ள முடியும். ஆம்! சில கடினமானதும், முரண்பாடுள்ளதுப் போல காணப்படுகின்ற வேதவாக்கியங்கள் உண்டு. வேதாகமம் 40 வித்தியாசமான நபர்களாலும் 1500 வருடங்களாக எழுதப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு எழுத்தாளரும் வித்தியாசமான நடையிலும், வித்தியாசமான கோணத்திலும், வித்தியாசமான ஜனங்களுக்கு வித்தியாசமான நோக்கத்துடனும்…

கேள்வி

வேதாகமத்தில் பிழைகள், முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் உள்ளதா?

பதில்

வேதாகமத்தை குற்றம் கண்டுபிடிக்கிற முன்கூட்டிய ஒருதலைச் சார்பில்லாமல், முகமதிப்போடு படிக்கும்போது, அது இசைந்திணைகிற, முரண்பாடற்ற, எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடிய புத்தகமாக இருப்பதைப் புரிந்துக்கொள்ள முடியும். ஆம்! சில கடினமானதும், முரண்பாடுள்ளதுப் போல காணப்படுகின்ற வேதவாக்கியங்கள் உண்டு. வேதாகமம் 40 வித்தியாசமான நபர்களாலும் 1500 வருடங்களாக எழுதப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு எழுத்தாளரும் வித்தியாசமான நடையிலும், வித்தியாசமான கோணத்திலும், வித்தியாசமான ஜனங்களுக்கு வித்தியாசமான நோக்கத்துடனும் எழுதியுள்ளனர். இதில் சில சிறிய வித்தியாசங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இது முரண்பாடு கிடையாது. பொருந்திக்கொள்ள முற்றிலும் வழியே இல்லாத பட்சத்தில்தான் பிழை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது பதில் இல்லை என்பதற்காக எப்போதுமே பதில் இல்லை என்று அர்த்தம் ஆகாது. பலர் வரலாறு மற்றும் புவியியல் சார்பான வேதாகத்தவறு என்றுக் கருதிக் கொண்டவைகளையும், அகழ்வராய்ச்சி சான்றுகள் வேதாகமம்தான் சரி என்று கண்டறிகின்றன.

நமக்கு பல வேளைகளில் இப்படிப்பட்ட கேள்விகள் வருகின்றன. ”இந்த வசனங்கள் எப்படி முரண்படவில்லை என்று விளக்குங்கள்” மற்றும் “பாருங்கள் வேதாகமத்தில் இங்கு பிழையுள்ளது” என்று ஜனங்கள் கொண்டுவருகிற சில கேள்விகள் உண்மையாகவே பதிலளிக்க கடினமாகத்தான் உள்ளது. ஆனால் நம்முடைய நிலைநிறுத்தப்பட்ட செய்தி என்னவெனில் ஒவ்வொரு வேத முரண்பாடுகளுக்கும் பிழைகளுக்கும் நிலைத்திருக்கக்கூடிய, அறிவுத்திறம் வாய்ந்த, எளிதில் நம்பத்தக்க பதில்கள் உண்டு. ”வேதாகமத்திலுள்ள எல்லாப் பிழைகளையும்” பட்டியலிடுகின்ற புத்தகங்களும் இணையதளங்களும் உள்ளன. அநேக ஜனங்கள் தாங்கள் சொந்தமாக இந்தக் கருதப்படுகின்ற தவறான எண்ணங்களைப் பெறுவதில்லை. மேற்கூறியவற்றிலிருந்தே இந்த தாக்குகின்ற ஆயுதங்களைப் பெறுகிறார்கள். இந்த விதமான தவறு என்று கருதப்படுகின்ற காரியங்களை ஆட்சேபிக்கிற புத்தகங்களும் இணைதளங்களும் கூட உள்ளன. வேதாகமத்தை தாக்க நினைக்கிறவர்களைப் பற்றிய கவலைக்கிடமான காரியம் என்னவென்றால் அவரகள் உண்மையாகவே பதில் பெற்றுக்கொள்வதில் ஆர்வம்கொள்வதில்லை என்பதுதான். பல ”வேதாகத்தை தாக்குகிறவர்களுக்கு பதில்களும் தெரியும். ஆனாலும் அதே பழைய மேலோட்டமான தாக்குதல்களை மறுபடியும் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, யாராவது வேதமாகமத்தில் முரண்பாடு உள்ளது என்று நம்மிடத்தில் கூறும்போது நாம் என்ன செய்வது?

1. ஜெபத்தோடு அந்த வேதவாக்கியங்களைப் படித்து அதில் எளிதான தீர்வு இருக்கின்றதா என்று பாருங்கள்.

2. நல்ல வேதாகம விளக்கவுரைகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்யுங்கள். வேதாகமம் ஆராய்ச்சி இணையதளங்களையும், புத்தகங்களையும் படியுங்கள்.

3. மேய்ப்பர்களையும் சபைத்தலைவர்களையும் பார்த்து ஒரு தீர்வை பெற முடிகின்றதா என்று முயற்சி செய்யுங்கள்.

4. இந்த மூன்று படிகளுமே தீர்வு தராவிட்டால், அவருடைய வார்த்தையே சத்தியம் என்று விசுவாசித்து பதில் உண்டு ஆனால் இன்னும் தென்படவில்லை என்று காத்திருங்கள் ( 2 திமோத்தேயு 2:15, 3:16-17).

[English]



[முகப்பு பக்கம்]

வேதாகமத்தில் பிழைகள், முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் உள்ளதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.