1 சாமுவேலின் புத்தகம்

1 சாமுவேலின் புத்தகம் எழுத்தாளர்: இந்த புத்தகத்தின் எழுத்தாளர் யார் என்று அறியப்படவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி ஒரு புத்தகத்தை எழுதினார் என்பதை நாம் அறிவோம் (1 சாமுவேல் 10:25), இந்த புத்தகத்தின் ஒரு பகுதியையும் அவர் எழுதியது மிகவும் சாத்தியம். 1 சாமுவேல் புத்தகத்தை எழுதினதாக பரிந்துரைக்கப்படும் மற்றவர்கள் தீர்க்கதரிசிகள் / வரலாற்றாசிரியர்கள் நாத்தன் மற்றும் காத் (1 நாளாகமம் 29:29). எழுதப்பட்ட காலம்: முதலில், 1 மற்றும் 2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரேஒரு புத்தகமாக இருந்தன….

1 சாமுவேலின் புத்தகம்

எழுத்தாளர்: இந்த புத்தகத்தின் எழுத்தாளர் யார் என்று அறியப்படவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி ஒரு புத்தகத்தை எழுதினார் என்பதை நாம் அறிவோம் (1 சாமுவேல் 10:25), இந்த புத்தகத்தின் ஒரு பகுதியையும் அவர் எழுதியது மிகவும் சாத்தியம். 1 சாமுவேல் புத்தகத்தை எழுதினதாக பரிந்துரைக்கப்படும் மற்றவர்கள் தீர்க்கதரிசிகள் / வரலாற்றாசிரியர்கள் நாத்தன் மற்றும் காத் (1 நாளாகமம் 29:29).

எழுதப்பட்ட காலம்: முதலில், 1 மற்றும் 2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரேஒரு புத்தகமாக இருந்தன. செப்டுவஜின்ட்டின் (கிரேக்க மொழி பழைய ஏற்பாடு) மொழிபெயர்ப்பாளர்கள் இந்த புத்தகங்களை இரண்டாகப் பிரித்தனர், அன்றிலிருந்து அந்த பிரிகளை நாம் தக்க வைத்துக் கொண்டோம். கி.மு. 1100 முதல் கி.மு. 1000 வரையிலுள்ள சுமார் 100 ஆண்டுகள் நிகழ்வுகளை 1 சாமுவேலின் புத்தகம் கொண்டுள்ளது. 2 சாமுவேலின் நிகழ்வுகள் மேலும் 40 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளது. ஆகவே இந்த புத்தகம் எழுதப்பட்ட காலம் கி.மு. 960.

எழுதப்பட்டதன் நோக்கம்: 1 சாமுவேல் புத்தகம் கானான் தேசத்தில் இஸ்ரவேலின் வரலாற்றை பதிவு செய்கிறது, அதாவது அவர்கள் நியாயாதிபதிகளின் ஆட்சியில் இருந்து ராஜாக்களின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த தேசமாக மாறுகிறார்கள். சாமுவேல் கடைசி நியாயாதிபதியாக தோன்றுகிறார், அவர் முதல் இரண்டு ராஜாக்களான சவுல் மற்றும் தாவீதை அபிஷேகம் செய்கிறார்.

திறவுகோல் வசனங்கள்: “எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். (1 சாமுவேல் 8:6-7).

“சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்’’ (1 சாமுவேல் 13:13-14).

“அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்” (1 சாமுவேல் 15:22-23).

சுருக்கமான திரட்டு: 1 சாமுவேலின் புத்தகத்தை நேர்த்தியாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: சாமுவேலின் வாழ்க்கை (1-12 வரையிலுள்ள அதிகாரங்கள்) மற்றும் சவுலின் வாழ்க்கை (13-31 வரையிலுள்ள அதிகாரங்கள்).

சாமுவேல் தாயாரின் அற்புதமான பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த புத்தகம் தொடங்குகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோது, சாமுவேல் ஆலயத்தில் வாழ்ந்து சேவை செய்தார். தேவன் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று தனித்துவப்படுத்தினார் (3:19-21), பிள்ளையின் முதல் தீர்க்கதரிசனம் ஊழல் நிறைந்த ஆசாரியர்கள் மீதான தீர்ப்பில் ஒன்றாகும்.

இஸ்ரவேலர் தங்கள் வற்றாத எதிரிகளான பெலிஸ்தர்களுடன் போருக்குச் செல்கிறார்கள். பெலிஸ்தர்கள் உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றி அதை தற்காலிகமாக வைத்திருக்கிறார்கள், ஆனால் கர்த்தர் நியாயத்தீர்ப்பை அனுப்பும்போது, பெலிஸ்தர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் திருப்பித் தருகிறார்கள். சாமுவேல் இஸ்ரவேலை மனந்திரும்புதலுக்கும் (7 3-6) பின்னர் பெலிஸ்தர்களுக்கு எதிரான வெற்றிக்கும் அழைக்கிறார்.

இஸ்ரவேல் ஜனம், மற்ற தேசங்களைப் போல இருக்க விரும்புகிறார்கள், தங்களுக்கு ஒரு ராஜாவை வேண்டும் என்று விரும்புகிறார்கள். சாமுவேல் அவர்களின் கோரிக்கைகளால் அதிருப்தி அடைகிறார், ஆனால் அவர்கள் நிராகரிப்பது சாமுவேலின் தலைமையை அல்ல, ஆனால் அவர்களுடைய தேவனை என்று கர்த்தர் அவரிடம் கூறுகிறார். ஒரு ராஜாவைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன என்று மக்களுக்கு எச்சரித்தபின், சாமுவேல் மிஸ்பாவில் முடிசூட்டப்பட்ட சவுல் என்ற பென்யமீன் கோத்திரத்தில் பட்டவனை அபிஷேகம் செய்கிறான் (10:7-25).

சவுல் ஆரம்ப வெற்றியைப் பெற்று பூரிக்கிறார், அம்மோனியர்களை போரில் தோற்கடித்தார் (அதிகாரம் 11). ஆனால் பின்னர் அவர் தொடர்ச்சியான தவறான அடிகளை எடுத்து வைக்கிறார்: அவர் ஒரு பலியை செலுத்துகிறார் (அதிகாரம் 13), அவர் தனது குமாரன் யோனாத்தானை இழக்க இழப்பில் ஒரு முட்டாள்தனமான சபதம் செய்கிறார் (அதிகாரம் 14), மேலும் அவர் கர்த்தருடைய நேரடி கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை (அதிகாரம் 15). சவுலின் கிளர்ச்சியின் விளைவாக, சவுலின் இடத்தைப் நிரப்ப தேவன் வேறொருவரைத் தேர்ந்தெடுக்கிறார். இதற்கிடையில், தேவன் தம்முடைய ஆசீர்வாதத்தை சவுலிடமிருந்து நீக்குகிறார், ஒரு தீய ஆவி சவுலை பைத்தியக்காரத்தனமாக செயல்பட அவனை நோக்கித் தொடங்குகிறது (16:14).

தாவீது என்ற வாலிபனை அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்ய சாமுவேல் பெத்லகேமுக்குச் செல்கிறார் (அதிகாரம் 16). பின்னர், தாவீது பெலிஸ்தியரான கோலியாத்துடன் தனது புகழ்பெற்ற மோதலை சந்திக்கிறார், மேலும் அவர் ஒரு தேசிய வீரனாக மாறுகிறார் (அதிகாரம் 17). தாவீது சவுலின் மன்றத்தில் பணியாற்றுகிறார், சவுலின் மகளை மணக்கிறார், சவுலின் மகனுடன் நட்பு கொள்கிறார். தாவீதின் வெற்றி மற்றும் புகழ் குறித்து சவுல் பொறாமை கொள்கிறான், அவன் தாவீதைக் கொல்ல முயற்சிக்கிறான். தாவீது அவனிடமிருந்து அவன் கைக்குத் தப்பி ஓடுகிறார், எனவே சாகசப்பயணம், சூழ்ச்சி மற்றும் காதல் ஆகியவற்றின் அசாதாரண காலத்தைத் தாவீது தொடங்குகிறார். இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக உதவியுடன், தாவீது இரத்தவெறி கொண்ட சவுலை குறுகியதாக ஆனால் தொடர்ந்து தவிர்க்கிறார் (அதிகாரங்கள் 19-26). இதன் மூலம், தாவீது தனது நேர்மையையும், யோனாத்தானுடனான நட்பையும் பராமரிக்கிறார்.

புத்தகத்தின் முடிவில், சாமுவேல் இறந்துவிடுகிறார், சவுல் ஒரு இழந்த மனிதர் போலாகிறார். பெலிஸ்தியாவுடனான ஒரு போருக்கு முன்பு, சவுல் பதில்களைத் தேடுகிறான். தேவனை நிராகரித்த அவர், பரலோகத்திலிருந்து எந்த உதவியையும் காணவில்லை, அதற்கு பதிலாக ஒரு குறிச்சொல்லுபவளிடம் இருந்து ஆலோசனையை நாடுகிறார். அப்பொழுது போது, சாமுவேலின் ஆவி மரித்தோரிலிருந்து ஒரு கடைசி தீர்க்கதரிசனத்தை உரைக்கிறது: சவுல் மறுநாள் போரில் இறந்துவிடுவான். தீர்க்கதரிசனம் நிறைவேறியது; சவுலின் மூன்று மகன்கள், யோனாத்தான் உட்பட யாவரும் போரில் மடிகிறார்கள், சவுல் தற்கொலை செய்து கொள்கிறான்.

முன்னிழல்கள்: 1 சாமுவேல் 2:1-10-ல் அன்னாளின் ஜெபம் கிறிஸ்துவைப் பற்றிய பல தீர்க்கதரிசன குறிப்புகளைக் கொண்டுள்ளது. அவள் தேவனை தன் பாறை என்று புகழ்கிறாள் (வச. 2), நம்முடைய ஆவிக்குரிய வீடுகளை நாம் கட்டியெழுப்ப வேண்டிய பாறை இயேசு என்று சுவிசேஷக் கணக்குகளிலிருந்து நாம் அறிவோம். பவுல் இயேசுவை யூதர்களுக்கு “இடறுதற்கான பாறை” என்று குறிப்பிடுகிறார் (ரோமர் 9:33). கிறிஸ்து “ஆவிக்குரிய பாறை” என்று அழைக்கப்படுகிறார், அவர் இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் ஆவிக்குரிய பானத்தை வழங்கினார், அவர் நம்முடைய ஆத்துமாக்களுக்கு “ஜீவ தண்ணீரை” வழங்குகிறார் (1 கொரிந்தியர் 10:4; யோவான் 4:10). அன்னாளின் ஜெபம் பூமியின் முனைகளை நியாயந்தீர்க்கும் கர்த்தரைக் குறிப்பிடுகிறது (வச. 2:10), மத்தேயு 25:31-32ல் இயேசுவை மனுஷகுமாரன் என்று குறிப்பிடுகிறது, அவர் அனைவரையும் நியாயந்தீர்க்க மகிமையுடன் வருவார்.

நடைமுறை பயன்பாடு: சவுலின் சோகமான கதை வீணான வாய்ப்பைப் பற்றிய ஒரு ஆய்வாகும். மரியாதை, அதிகாரம், செல்வம், நல்ல தோற்றம் மற்றும் பலவற்றைக் கொண்டிருந்த ஒரு மனிதனாக சவுல் இருந்தான். ஆனாலும் அவன் விரக்தியில் இறந்தான், எதிரிகளைப் பார்த்து பயந்து, அவர் தனது தேசத்தையும், குடும்பத்தையும், கடவுளையும் தோல்வியுற்றதை அறிந்திருந்தான்.

கீழ்ப்படியாமை மூலம் தேவனைப் பிரியப்படுத்த முடியும் என்று நினைப்பதில் சவுல் தவறு செய்தார். இன்றைய பலரைப் போலவே, ஒரு விவேகமான நோக்கம் மோசமான நடத்தைக்கு ஈடுசெய்யும் என்று அவர் நம்பினார். ஒருவேளை அவரது வல்லமை அவரது தலைக்குச் சென்றிருக்கலாம், அவர் விதிகளுக்கு மேலே இருப்பதாக அவர் நினைக்கத் தொடங்கினார். எப்படியாவது அவர் தேவனுடைய கட்டளைகளைப் பற்றிய குறைந்த கருத்தையும், தன்னைப் பற்றிய உயர்ந்த கருத்தையும் வளர்த்துக் கொண்டார். அவர் செய்த தவறுகளை எதிர்கொள்ளும்போது கூட, அவர் தன்னை நிரூபிக்க முயன்றார், அப்பொழுதுதான் தேவன் அவரை நிராகரித்தார் (15:16-28).

சவுலின் பிரச்சினை நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒன்றாகும் – இது ஒரு இதயத்தின் பிரச்சினை. தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல் வெற்றிக்கு அவசியம், நாம் பெருமையுடன் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், இழப்புக்கு நம்மை அமைத்துக் கொள்கிறோம்.

மறுபுறம், தாவீது முதலில் பெரிதாகத் தெரியவில்லை. சாமுவேல் கூட அவரைப் புறக்கணிக்க ஆசைப்பட்டார் (16:6-7). ஆனால் தேவன் இருதயத்தைக் காண்கிறார், தாவீதை தனது இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனாக பார்த்தார் (13:14). தாவீதின் மனத்தாழ்மையும், நேர்மையும், கர்த்தருக்கு அவர் காட்டிய பக்தி வைராக்கியமும் தைரியமும், ஜெபத்தில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும், நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது.

[English]



[முகப்பு பக்கம்]

1 சாமுவேலின் புத்தகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.