1 பேதுருவின் புத்தகம்

1 பேதுருவின் புத்தகம் எழுத்தாளர்: 1 பேதுரு 1:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள “இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு” என்னும் சொற்றொடர், 1 பேதுரு புத்தகத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய பேதுரு என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது. எழுதப்பட்ட காலம்: 1 பேதுருவின் புத்தகம் கி.பி. 60 முதல் கி.பி. 65 வரையிலுள்ள காலங்களில் எழுதப்பட்டிருக்கலாம். எழுதப்பட்டதன் நோக்கம்: 1 பேதுரு புத்தகம் பண்டைய உலகம் முழுவதும் அதாவது திருச்சபையின் ஆரம்ப நாட்களில் சிதறி கலைந்துபோன மற்றும் கடுமையான உபத்திரவத்திற்கு ஆளான விசுவாசிகளுக்கு…

1 பேதுருவின் புத்தகம்

எழுத்தாளர்: 1 பேதுரு 1:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள “இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு” என்னும் சொற்றொடர், 1 பேதுரு புத்தகத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய பேதுரு என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

எழுதப்பட்ட காலம்: 1 பேதுருவின் புத்தகம் கி.பி. 60 முதல் கி.பி. 65 வரையிலுள்ள காலங்களில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: 1 பேதுரு புத்தகம் பண்டைய உலகம் முழுவதும் அதாவது திருச்சபையின் ஆரம்ப நாட்களில் சிதறி கலைந்துபோன மற்றும் கடுமையான உபத்திரவத்திற்கு ஆளான விசுவாசிகளுக்கு பேதுரு எழுதிய கடிதமாகும். உபத்திரவத்தை யாராவது புரிந்து கொண்டாரென்றால், அது பேதுருவேயாகும். தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்ததற்காக அவர் அடித்து, அச்சுறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கசப்பு இல்லாமல், தனது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இழக்காமல், மிகுந்த விசுவாசத்துடன் கீழ்ப்படிதலான, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருந்தார். இயேசுவில் வாழும் நம்பிக்கையைப் பற்றிய இந்த அறிவு செறிந்த செய்தி மற்றும் கிறிஸ்துவின் முன்மாதிரி மெய்யாகவே பின்பற்றப்பட வேண்டியதாகும்.

திறவுகோல் வசனங்கள்: 1 பேதுரு 1:3-4, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.”

1 பேதுரு 2:9, “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”

1 பேதுரு 2:24, “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.”

1 பேதுரு 5:8-9, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.”

சுருக்கமான திரட்டு: உபத்திரவத்தின் இந்த நேரம் மிகவும் அவநம்பிக்கையானது என்றாலும், அது உண்மையில் சந்தோஷப்பட வேண்டிய நேரம் என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்காக அனுபவித்ததைப் போல, கிறிஸ்துவின் நிமித்தம் உபத்திரவப்படுவது ஒரு பாக்கியமானதாக எண்ணவேண்டும் என்று அவர் கூறுகிறார். இந்த கடிதம் இயேசுவுடனான பேதுருவின் தனிப்பட்ட அனுபவங்களையும், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்திலிருந்து அவருடைய பிரசங்கங்களையும் குறிக்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் சாத்தானானவன் பெரும் எதிரியாக இருக்கிறான் என்று பேதுரு உறுதிப்படுத்துகிறார், ஆனால் கிறிஸ்துவின் மீண்டும் வருகிற இரண்டாம் வருகையானது நம்பிக்கையின் உறுதியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

இணைப்புகள்: பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகள் பற்றிய பேதுருவின் பரிச்சயம், மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வேலையின் வெளிச்சத்தில் பல்வேறு பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை விளக்க அவருக்கு உதவியது. 1 பேதுரு 1:16-ல், அவர் லேவியராகமம் 11:44-ஐ மேற்கோள் காட்டுகிறார்: “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” ஆனால் அவர் அதை நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பரிசுத்தத்தை அடைய முடியாது என்று முன்னுரைக்கிறார், ஆனால் கிறிஸ்துவில் விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவனுடைய கிருபையால் அது வழங்கப்படுகிறது (வசனம் 13). மேலும், ஏசாயா 28:16 மற்றும் சங்கீதம் 118:22-ல் உள்ள “மூலக்கல்லை” கிறிஸ்து என்று பேதுரு விளக்குகிறார், யூதர்களால் கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசம் ஆகியவற்றால் மேசியாவாகிய இயேசு நிராகரிக்கப்பட்டார். கூடுதல் பழைய ஏற்பாட்டு குறிப்புகளில் பாவமில்லாத கிறிஸ்து (1 பேதுரு 2:22 / ஏசாயா 53:9) மற்றும் ஆசீர்வாதங்களைத் தரும் தேவனுடைய வல்லமையால் பரிசுத்த வாழ்க்கைக்கான அறிவுரைகள் (1 பேதுரு 3:10:12; சங்கீதம் 34:12-16; 1 பேதுரு 5:5; நீதிமொழிகள் 3:34).

நடைமுறை பயன்பாடு: நித்திய ஜீவனின் உறுதி அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவுடன் அடையாளம் காண ஒரு வழி, அவருடைய பாடுகளில் பங்கு பெறுவது. நமக்கு அது “நல்ல இரண்டு காலணிகள்” அல்லது “உங்களைவிட விட பரிசுத்தர்” என்று அழைப்பவர்களிடமிருந்து அவமானங்களையும் அவதூறுகளையும் தாங்குவதாகும். சிலுவையில் கிறிஸ்து நமக்காக அனுபவித்ததை ஒப்பிடும்போது இது மிகவும் சிறியது மற்றும் ஒன்றுமேயில்லை. உங்களுக்குத் தெரிந்தவற்றிற்காக எழுந்து நின்று சரியானது என்று விசுவாசியுங்கள், உலகமும் சாத்தானும் உங்களைத் துன்புறுத்தும் போது மகிழ்ச்சியாயிருங்கள்.

[English]



[முகப்பு பக்கம்]

1 பேதுருவின் புத்தகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.