144,000 பேர் யார்?

கேள்வி 144,000 பேர் யார்? பதில் வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் எப்போதும் வியாக்கியானம் செய்கிறவர்களுக்கு அநேக சவால்ககளை வழங்கியிருக்கிறது. இந்த புத்தகம் பிரமாதமான நிலையில் அநேக கற்பனைகள் மற்றும் குறியீடுகளில் மூழ்கியுள்ளது. இந்த புத்தகம் முழுவதுமாக அவரவர்களின் முன்னறிவைப் பொறுத்து வெவ்வேறு விதமாக விளக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்துதல் புத்தகம் நான்கு முக்கியமான வியாக்கியான அணுகுமுறைகள் கொண்டுள்ளன: 1) முன்னமே நடந்து முடிந்த நிகழ்வு (இது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திலுள்ள அனைத்தும் அல்லது பெரும்பாலானவைகள் ஏற்கனவே முதலாம் ஆம் நூற்றாண்டின்…

கேள்வி

144,000 பேர் யார்?

பதில்

வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் எப்போதும் வியாக்கியானம் செய்கிறவர்களுக்கு அநேக சவால்ககளை வழங்கியிருக்கிறது. இந்த புத்தகம் பிரமாதமான நிலையில் அநேக கற்பனைகள் மற்றும் குறியீடுகளில் மூழ்கியுள்ளது. இந்த புத்தகம் முழுவதுமாக அவரவர்களின் முன்னறிவைப் பொறுத்து வெவ்வேறு விதமாக விளக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்துதல் புத்தகம் நான்கு முக்கியமான வியாக்கியான அணுகுமுறைகள் கொண்டுள்ளன: 1) முன்னமே நடந்து முடிந்த நிகழ்வு (இது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திலுள்ள அனைத்தும் அல்லது பெரும்பாலானவைகள் ஏற்கனவே முதலாம் ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தேறிவிட்டதாக பார்க்கிறது; 2) வரலாற்று நிகழ்வுகள் (இது அப்போஸ்தலர்களுடைய காலத்திலிருந்து தற்போதுள்ள காலம்வரையிலுள்ள சபையின் வரலாற்றாக காண்கிறது); 3) கருத்தளவு கொள்கை (நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தின் ஒரு வெளிப்பாடாக வெளிப்படுத்துதல் புத்தகத்தைக் காண்கிறது); 4) எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிறவைகள் (இனி வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்துதல் புத்தகத்தை காணுதல்). இந்த நான்கு வியாக்கியான அணுகுமுறையில் எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிறவைகளாக காண்கின்ற நான்காவது அணுகுமுறை மட்டுமே வேதாகமத்தின் மீதமுள்ள அதே இலக்கண-வரலாற்று முறையில் வெளிப்படுத்துதலை விளக்குகிறது. இது வெளிப்படுத்துதலின் சொந்தக் கூற்று தீர்க்கதரிசனமாக இருப்பதுடன் சிறப்பாக இருக்கிறது (வெளிப்படுத்துதல் 1: 3; 22: 7, 10, 18, 19).

எனவே, “யார் இந்த 1,44,000 பேர்?” என்ற கேள்வியின் பதில், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ளதை விளக்கும்படியான நான்கு அணுகுமுறையில் நீங்கள் எதை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. எதிர்கால அணுகுமுறை தவிர மற்ற அணுகுமுறைகள் 144,000 சபையை குறிக்கும் குறியீடாக பிரதிநிதியாகவும், 1,44,000 எண்ணிக்கையிலும், அதாவது சபை முழுமையின் குறியீடாகவும் உள்ளதாக விளக்குகின்றன. இன்னும் முகம் மதிப்பு எடுக்கும்போது: “முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்” (வெளிப்படுத்துதல் 7: 4). இந்த வசனம் 1,44,000 யூதர்களைக் கொண்ட “இஸ்ரவேல் புத்திரர்” ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 என்கிற இலக்காக எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்வதை அல்லாமல் புதிய ஏற்பாட்டிலுள்ள சபையைக் குறிக்கிறது என்பதை எடுத்துக்கொள்வதற்கு இங்கே எந்த தெளிவும் இல்லை.

இந்த யூதர்கள் “முத்திரைப்போடப்பட்டிருக்கிறார்கள்”, அதாவது தெய்வீக நியாயத் தீர்ப்புகளிலிருந்தும் எதிர்க்கிறிஸ்துவினிடமிருந்தும் சேதமடையாமல் தப்பித்து உபத்திரவ காலத்தில் தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு தேவனால் இவர்களுக்கு விசேஷித்த பாதுகாப்பு இருப்பதை அர்த்தப்படுத்துகிறது (வெளி. 6:17-ஐ பாருங்கள். வரவிருக்கும் கோபதிற்கு யார் நிலைநிற்கக்கூடும்). இந்த உபத்திரவம் காலம் இனி வருகிற ஏழு வருட உபத்திரவமாகும், இதில் தேவன் தம்மை மறுதலிக்கிறவர்களுக்கு எதிராக தெய்வீக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார், பிறகு இறுதியில் இஸ்ரவேல் தேசத்துக்காக அவருடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவார். இவை யாவும் தானியேல் தீர்க்கதரிசிக்கு தேவன் அளித்த வெளிப்பாட்டின் படியே இருக்கும் (தானியேல் 9:24-27). 144,000 யூதர்கள் மீட்பு முன்னமே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது (மீகா 12:10; ரோமர் 11:25-27) ஆம், ஒரு மீட்கப்பட்ட இஸ்ரவேலின் ஒரு வகையான “முதற்ப்பலன்கள்” (வெளி. 14:4), மற்றும் அவர்களின் பணி என்னவென்றால், உபத்திரவ காலத்தில் உலகத்தில் சுவிசேஷம் அறிவித்து, நற்செய்தியைப் பிரசங்கித்து உபதேசம் செய்வதாகும். அவர்களுடைய ஊழியத்தின் விளைவாக லட்சக்கணக்கானோர் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து ஏற்றுக்கொள்ளுவார்கள், “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்” (வெளி. 7:9).

யெகோவாவின் சாட்சிகளுடைய தவறான போதனையின் விளைவாக 1,44,000 பேர் யார் என்பதைக் குறித்து அதிகமான குழப்பம் நிலவுகிறது. 1,44,000 பேர் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளுவார்கள், தேவனோடு நித்தியமாய் செலவழிக்கிற ஜனங்களின் எண்ணிக்கை என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். இதனை பரலோக நம்பிக்கை யெகோவாவின் சாட்சிகள் அழைக்கிறார்கள். 1,44,000 பேரில் இல்லாதவர்கள் பூமிக்குரிய நம்பிக்கையை அனுபவிப்பார்கள் – அதாவது கிறிஸ்து மற்றும் 1,44,000 பேரும் பூமியில் இருக்கும் பரதீசை அழைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் கற்பிகிற இந்த காரியம், ஆளும் வர்க்கம் (1,44,000) மற்றும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டவர்கள் ஆகியோருடன் ஒரு சாதி சமுதாயத்தை உருவாக்குகிறது என்பதை நாம் தெளிவாகக் காணலாம். அத்தகைய “இரட்டை வகுப்பு” கோட்பாட்டை வேதாகமம் போதிக்கவில்லை. கிறிஸ்துவுடன் ஆயிரம் ஆண்டுகள் ஆளும் மக்கள் இருப்பார்கள் என்பது உண்மைதான். இந்த மக்கள் திருச்ச்சபையிலுள்ளவர்கலாகும் (கிறிஸ்தவ விசுவாசிகள், 1 கொரிந்தியர் 6:2), பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் (கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன் இறந்த விசுவாசிகள், தானியேல் 7:27), உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் (உபத்திரவத்தின்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள், வெளி. 20:4). ஆனாலும் வேதாகமம் இந்த ஜனங்களுக்கு எவ்விதமான எண்ணிக்கையையும் கொடுக்கவில்லை. மேலும் நித்தியத்திற்கும் ஆயிரமாண்டு அரசாட்சியின் காலத்திற்கும் வித்தியாசம் உண்டு, ஆயிரமாண்டு முடிவடைந்தபிறகு நித்தியம் தொடங்குகிறதாக இருக்கும். அந்த நேரத்தில், புதிய எருசலேமில் நம்மோடு வாசம்பண்ணுவார். அவர் நம்முடைய தேவனாக இருப்பார், நாம் அவருடைய சொந்த ஜனங்களாக இருப்போம் (வெளி. 21:3). பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுக்குள் நமக்கு வாக்குறுதி அளித்து, பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்ட (எபேசியர் 1:13-14) நம்முடையது, மற்றும் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் இணைந்தவர்களாக இருப்போம் (ரோமர் 8:17).

[English]



[முகப்பு பக்கம்]

144,000 பேர் யார்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.