2 தீமோத்தேயு புத்தகம்

2 தீமோத்தேயு புத்தகம் எழுத்தாளர்: 2 தீமோத்தேயு புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தின் முதலாம் வசனம், 2 தீமோத்தேயு புத்தகத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய பவுல் என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது. எழுதப்பட்ட காலம்: 2 தீமோத்தேயு புத்தகம் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியில் சிரச்சேதம் பண்ணப்பட்டு கொல்லப்படுவதற்கு சற்று முன்பதாக ஏறக்குறைய கி.பி. 67-ல் இந்த நிருபத்தை எழுதினார். எழுதப்பட்டதன் நோக்கம்: ரோமாபுரியில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் தனிமையாகவும் எல்லோராலும் கைவிடப்பட்டதையும் உணர்ந்தார். தனது பூமிக்குரிய வாழ்க்கை…

2 தீமோத்தேயு புத்தகம்

எழுத்தாளர்: 2 தீமோத்தேயு புத்தகத்தின் முதலாம் அதிகாரத்தின் முதலாம் வசனம், 2 தீமோத்தேயு புத்தகத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய பவுல் என்று தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

எழுதப்பட்ட காலம்: 2 தீமோத்தேயு புத்தகம் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியில் சிரச்சேதம் பண்ணப்பட்டு கொல்லப்படுவதற்கு சற்று முன்பதாக ஏறக்குறைய கி.பி. 67-ல் இந்த நிருபத்தை எழுதினார்.

எழுதப்பட்டதன் நோக்கம்: ரோமாபுரியில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் தனிமையாகவும் எல்லோராலும் கைவிடப்பட்டதையும் உணர்ந்தார். தனது பூமிக்குரிய வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 தீமோத்தேயுவின் புத்தகம் அடிப்படையில் பவுலின் “கடைசி வார்த்தைகள்” ஆகும். திருச்சபைகள் மீது குறிப்பாக தீமோத்தேயு மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்த பவுல் தனது சொந்த சூழ்நிலைகளை கடந்தார். பவுல் தனது கடைசி வார்த்தைகளைப் பயன்படுத்தி தீமோத்தேயுவையும் மற்ற எல்லா விசுவாசிகளையும் விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் இருக்கும்படிக்கு ஊக்குவிக்க விரும்பினார் (2 தீமோத்தேயு 3:14) மற்றும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க திடப்படும்படியாகவும் விரும்பினார் (2 தீமோத்தேயு 4:2).

திறவுகோல் வசனங்கள்: 2 தீமோத்தேயு 1:7, “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.”

2 தீமோத்தேயு 3:16-17, “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”

2 தீமோத்தேயு 4:2, “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.”

2 தீமோத்தேயு 4:7-8, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.”

சுருக்கமான திரட்டு: பவுல் தீமோத்தேயுவை கிறிஸ்துவின் மீது ஆர்வமாக இருக்கும்படி ஊக்குவிக்கிறார், மேலும் நல்ல ஆரோக்கியமான உபதேசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் (2 தீமோத்தேயு 1:1-2, 13-14). தேவபக்தியற்ற நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தவிர்க்கவும் ஒழுக்கக்கேடான எதையும் விட்டு விலகவும் பவுல் தீமோத்தேயுவை நினைவுபடுத்துகிறார் (2 தீமோத்தேயு 2:14-26). கடைசிக் காலங்களில் கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து கடுமையான உபத்திரவம் மற்றும் விசுவாசத் துரோகம் ஆகிய இரண்டுமே இருக்கும் (2 தீமோத்தேயு 3:1-17) என்று கூறுகிறார். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், தங்களுக்குள்ள விசுவாச ஓட்டத்தை வலுவாக முடிக்கவும் வேண்டுமென பவுல் ஒரு தீவிர வேண்டுகோளுடன் தனது நிருபத்தை முடிக்கிறார் (2 தீமோத்தேயு 4:1-8).

இணைப்புகள்: மோசேயை எதிர்த்த எகிப்திய மந்திரவாதிகளின் கதையை மேற்கோள்காட்டி, கள்ளப்போதகர்களின் ஆபத்துக்களைப் பற்றி அவர் மேய்ப்பராக இருக்கக் கூடிய சபைகளில் தீமோத்தேயு கவனமாக இருக்கும்படிக்கு பவுல் எச்சரிக்கிறார் (யாத்திராகமம் 7:11, 22; 8:7, 18, 19; 9:11 ). பழைய ஏற்பாட்டில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த மனிதர்கள் பொற்க்காளைக் கன்றைக் கட்டியெழுப்பத் தூண்டினர் மற்றும் மீதமுள்ளவர்களையும் விக்கிரகாராதனையுடன் சேர்ந்து கொல்லப்படுபடியாக செய்தனர் (யாத்திராகமம் 32). கிறிஸ்துவின் சத்தியத்தை எதிர்ப்பவர்களுக்கு அதே கதியை / நிலைமையை பவுல் முன்னறிவிக்கிறார், அவர்களின் முட்டாள்தனம் வெளிப்பட்டதுபோல, இறுதியில் “இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்” (2 தீமோத்தேயு 3:9).

நடைமுறை பயன்பாடு: கிறிஸ்தவ வாழ்க்கையில் பக்க கண்காணிப்புகளில் ஈர்க்கப்பட்டு வழிவிலகிப் போவதென்பது மிகவும் எளிது. ஈவைப் பெற்ற நாம் நமது கண்களை அவைகளின்மேல் வைத்திருக்க வேண்டும் – அது இயேசுவால் பரலோகத்தில் வெகுமதி அளிக்கப்படுகிறது (2 தீமோத்தேயு 4:8). கள்ளப்போதனை மற்றும் தேவபக்தியற்ற நடைமுறைகள் இரண்டையும் தவிர்க்க நாம் பாடுபட வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் பற்றிய நமது அறிவில் அடித்தளமாக உறுதியாக இருப்பதன் மூலமும், வேதாகமமற்ற எதையும் ஏற்க மறுப்பதில் உறுதியாக இருப்பதன் மூலமும் இதைச் செய்ய முடியும்.

[English]



[முகப்பு பக்கம்]

2 தீமோத்தேயு புத்தகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.