2 யோவான் புத்தகம்

2 யோவான் புத்தகம் எழுத்தாளர்: 2 யோவானின் புத்தகம் அதன் எழுத்தாளரை நேரடியாக அவரது பெயரைக் குறிப்பிட்டு கூறவில்லை. திருச்சபையின் ஆரம்ப நாட்களிலிருந்து வந்த பாரம்பரிய நம்பிக்கையானது, இந்த புத்தகத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய யோவான் என்று கூறுகிறது. கிறிஸ்துவின் மற்றொரு சீடரான யோவான் இந்த கடிதத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பல ஆண்டுகளாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், எல்லா ஆதாரங்களும் எழுத்தாளரை யோவானின் சுவிசேஷத்தை எழுதிய அன்பான சீஷனாகிய யோவான் என்று சுட்டிக்காட்டுகின்றன. எழுதப்பட்ட காலம்:…

2 யோவான் புத்தகம்

எழுத்தாளர்: 2 யோவானின் புத்தகம் அதன் எழுத்தாளரை நேரடியாக அவரது பெயரைக் குறிப்பிட்டு கூறவில்லை. திருச்சபையின் ஆரம்ப நாட்களிலிருந்து வந்த பாரம்பரிய நம்பிக்கையானது, இந்த புத்தகத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய யோவான் என்று கூறுகிறது. கிறிஸ்துவின் மற்றொரு சீடரான யோவான் இந்த கடிதத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பல ஆண்டுகளாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், எல்லா ஆதாரங்களும் எழுத்தாளரை யோவானின் சுவிசேஷத்தை எழுதிய அன்பான சீஷனாகிய யோவான் என்று சுட்டிக்காட்டுகின்றன.

எழுதப்பட்ட காலம்: 2 யோவானின் புத்தகம் யோவானின் மற்ற நிருபங்களான 1 மற்றும் 3 யோவான், கி.பி. 85-95 க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எழுதப்பட்ட நோக்கம்: 2 யோவானின் புத்தகம், யோவானின் கடிதத்தைப் படிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கும், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் கட்டளையிடுவதன் மூலம் தேவன் மீதும் அவருடைய குமாரனாகிய இயேசு மீதும் தங்கள் அன்பைக் காட்ட வேண்டும் என்கிற அவசர வேண்டுகோளை விடுக்கிறது. 2 யோவானின் புத்தகமும் கிறிஸ்து மாம்சத்தில் உண்மையில் உயிர்த்தெழுப்பவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஏமாற்றுக்காரர்களைத் தேடுவதற்கான ஒரு வலுவான எச்சரிக்கையாகும்.

திறவுகோல் வசனங்கள்: 2 யோவான் 6, “நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.”

2 யோவான் 8-9, “உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.”

சுருக்கமான திரட்டு: 2 யோவானின் புத்தகம் தெரிந்துகொள்ளப்பட்டவளாகிய அம்மாளுக்கு மற்றும் அவரது குழந்தைகளுக்கு எழுதப்பட்டது. இவர் திருச்சபையில் முக்கியமான ஒரு பெண்மணியாகவோ அல்லது உள்ளூர் திருச்சபையையும் அதன் கூடிவரவையும் குறிக்கும் ஒரு குறியீடாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட அந்த நாட்களில் இதுபோன்ற குறியீட்டு வாழ்த்துதல்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.

2 யோவான் புத்தகம் பெரும்பாலும் கிறிஸ்துவின் சரியான உபதேச கோட்பாட்டைக் கற்பிக்காத ஏமாற்றுக்காரர்களைப் பற்றிய ஒரு அவசர எச்சரிக்கையுடன் அக்கறை கொண்டுள்ளது, இயேசு உண்மையில் மாம்சத்தில் எழுந்திருக்கவில்லை, ஆனால் ஆவிக்குரிய நிலையில் மட்டுமே இருந்தார் என்கிறார்கள். உண்மையான விசுவாசிகள் இந்த கள்ளப்போதகர்களை அறிந்திருக்க வேண்டும் என்றும், அவர்களுடன் எந்த நமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் யோவான் மிகவும் வலுவாக கூறுகிறார்.

இணைப்புகள்: யோவான் அன்பை ஒரு உணர்ச்சி அல்லது உணர்வு என்று விவரிக்கவில்லை, ஆனால் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று விவரிக்கிறார். கட்டளைகளின் முக்கியத்துவத்தை இயேசு மீண்டும் வலியுறுத்தினார், குறிப்பாக “முதலாவது மற்றும் மிகப் பிரதானமான கற்பனை”, தேவன் மீது அன்பு கூறுவதாகும் (உபாகமம் 6:5), இரண்டாவதாக ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல் (மத்தேயு 22:37-40; லேவியராகமம் 19:18). தேவனுடைய பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை ஒழிப்பதற்குப் பதிலாக, இயேசு அதை நிறைவேற்றுவதற்கான வழிகளை வழங்குவதன் மூலம் அதை நிறைவேற்றினார்.

நடைமுறை பயன்பாடு: வேதவசனங்களுடன் “கிறிஸ்தவர்” என்று கூறும் நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்தையும் சரிபார்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இதை மிகவும் வலுவாக வலியுறுத்த முடியாது, ஏனெனில் சாத்தானின் மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்று வஞ்சகம். வேதத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றும் ஒரு புதிய மற்றும் உற்சாகமான கோட்பாட்டின் மூலம் எடுத்துக்கொள்வது மிகவும் எளிதானது, ஆனால் இது உன்னிப்பாக ஆராய்ந்தால், உண்மையில் தேவனுடைய வார்த்தையிலிருந்து வழுவிப் புறப்படுவதாகும். என்ன நடக்கிறது என்று தோன்றுகிறதோ அது வேதவசனத்துடன் வெளிப்படையாக பொருந்தவில்லை என்றால், அது தவறானது, அது ஆவியினால் அல்ல, அதற்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இருக்கக்கூடாது.

[English]



[முகப்பு பக்கம்]

2 யோவான் புத்தகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.