ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

கேள்வி ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? பதில் இனையதளத்தில் அதிகமாக தேடப்படுகின்ற வார்த்தைகள் பெரும்பாலும் அல்லது அதிகளவில் பாலியல் இன்பத்தைத் தூண்டுகிற ஆபாசப் படங்களுக்கு (pornography) சமந்தப்பட்ட வார்த்தைகளாகும். இன்றிருக்கும் உலகத்தில் ஆபாச படங்கள் அதிகமாய் பரவி இருக்கின்றது. வேறு எல்லாவற்றிற்கும் மேலாக, பாலியல் உறவை மட்டும் சாத்தான் அதிகமாய் கெடுத்து அதை அசுத்தமானதாக மாற்றி இருக்கிறான். நன்மையும் நேர்மையுமானதாக இருக்கிற இந்த உறவுக்குப் (அதாவது கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பின்…

கேள்வி

ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்

இனையதளத்தில் அதிகமாக தேடப்படுகின்ற வார்த்தைகள் பெரும்பாலும் அல்லது அதிகளவில் பாலியல் இன்பத்தைத் தூண்டுகிற ஆபாசப் படங்களுக்கு (pornography) சமந்தப்பட்ட வார்த்தைகளாகும். இன்றிருக்கும் உலகத்தில் ஆபாச படங்கள் அதிகமாய் பரவி இருக்கின்றது. வேறு எல்லாவற்றிற்கும் மேலாக, பாலியல் உறவை மட்டும் சாத்தான் அதிகமாய் கெடுத்து அதை அசுத்தமானதாக மாற்றி இருக்கிறான். நன்மையும் நேர்மையுமானதாக இருக்கிற இந்த உறவுக்குப் (அதாவது கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பின் தாம்பத்திய உறவு) பதிலாக இச்சை, ஆபாச படங்கள், வேசித்தனம், பலாத்காரம், கற்பழிப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் உலகத்தை நிறைத்திருக்கிறான். ஆபாச படங்களை பார்க்கும் பாவம் மனிதனை அதிக துன்மார்க்கத்துக்கும் ஒழுக்கமற்ற வாழ்க்கைக்கும் நேராக வழிநடத்துகிறது (ரோமர் 6:19). ஆபாச படங்களைப் பார்ப்பது அடிமைப்படுத்தப்படக்கூடிய பழக்கம் என்பது நிச்சயமாய் அறியப்பட்டிருக்கிறது. போதை பொருள் எடுத்துக்கொள்பவர்கள் அதனால் வரும் போதையின் “உச்சநிலையை” அடையும்படி எப்படி இன்னும் அதிகமாக எடுத்துக்கொள்வார்களோ, அதேபோல ஆபாச படங்களைப் பார்ப்பது ஒரு மனிதனை இன்னும் அதிகமதிகமான பாலியல் அடிமைத்தனத்துக்கும், அவபக்தியான ஆசைகளுக்கும் அவனை நடத்தும்.

பாவத்தின் மூன்று விதங்கள் என்னவென்றால், மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, மற்றும் ஜீவனத்தின் பெருமை ஆகும் (1 யோவான் 2:16). ஆபாச படங்களை பார்ப்பதினால் அது நம்மை மாம்ச இச்சைக்கு நேராக இழுத்து செல்லும், மற்றும் அது கண்களின் இச்சை என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. நாம் எவைகளை சிந்திக்க வேண்டும் என்று பிலிப்பியர் 4:8-ல் பார்க்கிறோம். நிச்சயமாக ஆபாச காட்சிகள் என்பது இந்த பட்டியலில் சேர்க்கவே முடியாது. ஆபாச படங்களை பார்ப்பது நம்மை அடிமைப்படுத்தும் (1 கொரிந்தியர் 6:12; 2 பேதுரு 2:19), மற்றும் அழிக்கும் (நீதிமொழிகள் 6:25-28; எசேக்கியேல் 20:30; எபேசியர் 4:19). மற்றவர்களை இச்சிக்கவைப்பதே ஆபாச படங்களின் முக்கிய நோக்கமாகும். இப்படி நம் சிந்தையில் இச்சிப்பது தேவனுக்கு விரோதமான பாவம் (மத்தேயு 5:28). ஒரு மனிதன் ஆபாச படங்களை பார்ப்பதிலிருந்து விலக எந்த முயற்சியும் எடுக்காமல், தேவனுடைய உதவியையும் நாடாமல் அதே பாவக்காரியத்தில் தொடர்ந்து இருந்தால், அது அவன்/அவள் இரட்சிப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது (1 கொரிந்தியர் 6:9-12).

இந்த ஆபாச காட்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு தேவன் அதிலிருந்து விடுதலை மற்றும் வெற்றி கொடுக்கமுடியும்/கொடுப்பார். நீங்கள் ஆபாச படங்களைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்து அதிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்கள் வெற்றிக்கான சில படிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது: (1) உங்கள் பாவத்தை தேவனிடம் அறிக்கை செய்யுங்கள் (1 யோவான் 1:9). (2) உங்களை சுத்திகரித்து, புதித்தாக்கி, மனதை மறுரூபமாக்க தேவனிடம் விண்ணப்பம் செய்யுங்கள் (ரோமர் 12:2). (3) பிலிப்பியர் 4:8-ல் கொடுக்கப்பட்டுள்ள உண்மையுள்ளவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், மற்றும் புகழ் போன்றவைகளால் உங்களுடைய மனதை தேவன் நிரைக்கும்படிக்கு ஜெபியுங்கள் (4) உங்கள் சரீரங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்ளக் கற்றுகொள்ளுங்கள் (தெசலோனிக்கேயர் 4:3-4). (5) பாலியல் உறவை குறித்த நல்ல புரிந்துகொள்ளுதளைப் பெறவும், உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மட்டுமே இந்த விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் தேவன் உங்களுக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேளுங்கள் (1 கொரிந்தியர் 7:1-5). (6) நீங்கள் ஆவியில் நடக்கிறவர்களாய் இருந்தால், மாம்ச இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் (கொலோசியர் 5:16). (7) இந்த ஆபாசமான காட்சிகளை பார்க்காமலிருக்க சில நடைமுறை வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட படங்கள் உங்கள் கைப்பேசியில் (மொபைல் போனில்) கணினியில் (கம்ப்யூடரில்) வராமல் தடுக்கின்ற மென்பொருள்களை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள், இவைகளில் ஏற்கனவே ஆபாச படங்கள் அல்லது வீடியோக்கள் இருந்தால் அதனை அழித்து (delete) விடுங்கள். மேலும் டீவி மற்றும் வீடியோக்கள் பார்ப்பதை குறைத்துக்கொள்ளுங்கள், உங்களுடன் ஜெபிக்கவும் உங்கள்மேல் உத்திரவாதமும் செலுத்தும் ஒரு கிறிஸ்தவரை கண்டுபிடியுங்கள்.

[English]



[முகப்பு பக்கம்]

ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.