புகைப்பிடித்தலைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? புகைப்பிடித்தல் பாவமா?

கேள்வி புகைப்பிடித்தலைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? புகைப்பிடித்தல் பாவமா? பதில் புகைபிடித்தலைக் குறித்து வேதாகமம் நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை. எனினும், புகைப்பிடிப்பிற்கு நிச்சயமாக பொருந்தும் வகையில் சில நியமங்கள் உள்ளன. முதலாவதாக, நம் சரீரங்களை எதையும் “மாற்றியமைக்க” அனுமதிக்கக் கூடாது என்று வேதாகமம் கட்டளையிடுகிறது. “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்” (1 கொரிந்தியர் 6:12). புகைபிடிப்பது எவ்வித சந்தேகமுமின்றி ஒரு…

கேள்வி

புகைப்பிடித்தலைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? புகைப்பிடித்தல் பாவமா?

பதில்

புகைபிடித்தலைக் குறித்து வேதாகமம் நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை. எனினும், புகைப்பிடிப்பிற்கு நிச்சயமாக பொருந்தும் வகையில் சில நியமங்கள் உள்ளன. முதலாவதாக, நம் சரீரங்களை எதையும் “மாற்றியமைக்க” அனுமதிக்கக் கூடாது என்று வேதாகமம் கட்டளையிடுகிறது. “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்” (1 கொரிந்தியர் 6:12). புகைபிடிப்பது எவ்வித சந்தேகமுமின்றி ஒரு வலுவான அடிமைத்தனமாகும். அதே அதிகாரத்தின் இறுதியில், “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:19-20) என்று வாசிக்கிறோம். எவ்வித சந்தேகமுமின்றி புகைபிடிப்பது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் கேடுள்ளதாகும். புகைப்பிடித்தல் நுரையீரல்கள் மற்றும் இதயத்தை சேதப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தல் “நன்மையானது” என்று கருதப்படலாமா (1 கொரிந்தியர் 6:12)? புகைபிடிப்பது உங்கள் சரரீரங்களினாலே மெய்யாகவே தேவனை கனப்படுத்துவதாக கூறமுடியுமா (1 கொரிந்தியர் 6:20)? ஒரு நபர் நேர்மையான நிலையில் “தேவனுடைய மகிமைக்காக” புகைப்பிடிக்க முடியுமா (1 கொரிந்தியர் 10:31)? இந்த மூன்று கேள்விகளுக்கான விடை, “இல்லை” என்றுதான் நாம் விசுவாசிக்கிறோம். இதன் விளைவாக, புகைபிடிப்பது ஒரு பாவமாக இருக்கிறது, எனவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் புகைப்பிடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்று நாம் நம்புகிறோம்.

பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கிறார்கள் என்கிற உண்மையை சுட்டிக் காட்டுவதன் மூலம் சிலர் இந்த கருத்தை எதிர்த்து வாதிடுகிறார்கள். உதாரணமாக, பல மக்கள் காஃபிக்கு (coffee) அடிமையாக இருக்கிறார்கள், அதாவது காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காஃபி இல்லாமல் அவர்களால் செயல்பட முடியாது. இது உண்மைதான் என்றாலும், புகைப்பழக்கம் எப்படி சரியானதாகும்? கிறிஸ்தவர்கள் பெருந்தீனி மற்றும் அதிகப்படியான ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும் என்கிற கருத்து உள்ளது. ஆம், கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் ஒரு பாவத்தை கண்டித்து, மற்றவைகளை கண்டுகொள்ளாமல் பாசாங்கு செய்கிறார்கள். இருப்பினும் புகைப்பிடித்தல் தேவனுக்கு கனத்தையோ மகிமையையோ கொண்டு வராது.

புகைபிடிக்கும் இந்த கருத்துக்கு எதிரான மற்றொரு வாதம், பல பக்தியுள்ள ஆண்கள் புகைபிடிப்பவர்களாக உள்ளனர், பிரபல பிரிட்டிஷ் பிரசங்கி சி.ஹெச். ஸ்பர்ஜன் கூட புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். மீண்டும், இந்த வாதம் ஒரு சரியான வலுவான எந்த எடையையும் வைத்திருப்பதாக நாம் நம்பமுடியாது. காரணம் ஸ்பர்ஜன் புகைப்பிடித்தால் அது தவறு என்றுதான் நாம் நம்புகிறோம். இல்லையெனில் அவர் தேவபக்தியுள்ள மனிதர் மற்றும் தேவனுடைய வார்த்தையை போதிக்கும் அருமையான ஆசிரியரா? ஆம், நிச்சயமாக! அவருடைய செயல்களும் பழக்கவழக்கங்களும் தேவனைப் பிரியப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை.

புகைபிடிப்பது ஒரு பாவம் என்று கூறுகின்ற வேளையில், புகைப்பிடிப்பவர்கள் யாவரும் இரட்சிப்பை பெறாத அவிசுவாசிகள் என்று கூறவில்லை. புகைபிடிக்கும் பழக்கமுள்ள இயேசு கிறிஸ்துவுக்குள்ளான பல உண்மையான விசுவாசிகள் உள்ளனர். ஒரு நபர் இரட்சிக்கப்படுவதை புகைப்பிடித்தல் தடுப்பதில்லை. புகைப்பிடிப்பதால் ஒரு நபர் இரட்சிப்பை இழக்க மாட்டார். புகைபிடிப்பது ஒருவர் கிறிஸ்தவராக மாறுவதில் அல்லது ஒரு கிறிஸ்தவன் அவனது பாவத்தை தேவனிடத்தில் ஒப்புக் கொள்ளுகிற விஷயத்தில் (1 யோவான் 1:9) வேறு எந்த பாவத்தையும்விட குறைவாகத்தான் மன்னிக்கப்பட முடியும் என்பதல்ல. அதே சமயம், புகைபிடிப்பது ஒரு பாவமாக இருக்கிறது, அது கைவிடப்படவேண்டிய பழக்கமாக இருக்கிறது மற்றும் தேவனுடைய உதவியுடன், ஜெயிக்கவேண்டிய பாவம் என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.

[English]



[முகப்பு பக்கம்]

புகைப்பிடித்தலைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டம் என்ன? புகைப்பிடித்தல் பாவமா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.