இயேசுவைப்பற்றி கேள்விப்பட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?

கேள்வி இயேசுவைப்பற்றி கேள்விப்பட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என்ன சம்பவிக்கும்? பதில் எல்லா மனிதர்களும் தேவனைப் பற்றி கேள்விப்பட்டார்களோ இல்லையோ அவருக்கு கணக்கு ஒப்புவித்தாக வேண்டும். வேதாகமம் தேவன் தம்மை இயற்கையின் வாயிலாகவும் (ரோமர்1:20) மனுஷருடைய இருதயத்திலும் (பிரசங்கி 3:11) தம்மை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறுகிறது. பிரச்சனை என்னவெனில் மனித இனமே பாவத்திலிருக்கிறது. நாம் தேவனை அறிகிற அறிவை வெறுத்து அவருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறோம் (ரோமர் 1:21-23). தேவனுடைய கிருபை இல்லையென்றால் நாம் நமது இருதயங்களின்…

கேள்வி

இயேசுவைப்பற்றி கேள்விப்பட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?

பதில்

எல்லா மனிதர்களும் தேவனைப் பற்றி கேள்விப்பட்டார்களோ இல்லையோ அவருக்கு கணக்கு ஒப்புவித்தாக வேண்டும். வேதாகமம் தேவன் தம்மை இயற்கையின் வாயிலாகவும் (ரோமர்1:20) மனுஷருடைய இருதயத்திலும் (பிரசங்கி 3:11) தம்மை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறுகிறது. பிரச்சனை என்னவெனில் மனித இனமே பாவத்திலிருக்கிறது. நாம் தேவனை அறிகிற அறிவை வெறுத்து அவருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறோம் (ரோமர் 1:21-23). தேவனுடைய கிருபை இல்லையென்றால் நாம் நமது இருதயங்களின் பாவ இச்சைகளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, அவரிடத்திலிருந்து பிரிந்து ஒரு பரிதாபமான துக்கமுள்ள நிலையில் இருந்திருப்போம். தேவனை தொடர்ச்சியாக புறக்கநிக்கிரவர்களுக்கு அவர் இதை செய்கிறார் (ரோமர் 1:24-32).

உண்மையில் பார்ப்போமானால் சிலர் தேவனைப்பற்றி கேள்விப்படவில்லை என்று கிடையாது. அவர்கள் கேட்பதையும், இயற்கையில் வெளியரங்கமாய் தெரிகிறதையும் அவர்கள் ‘தேவையில்லை’ என்று உதறித்தள்ளுகிறார்கள். உபாகமம் 4:29 “அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய், உன் முழு இருதயத்தோடும் உன் ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்’’ என்று அறிவிக்கிறது. இந்த வேதவாக்கியம் முக்கியமான ஒரு உண்மையை நமக்கு போதிக்கின்றது. தேவனை உண்மையாய் தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள். ஒரு மனிதன் தேவனை அறிந்துக்கொள்ள உண்மையாய் விருப்பப்பட்டால் தேவன் தம்மை அவனுக்கு வெளிப்படுத்துவார்.

பிரச்சனை என்னவெனில் ‘‘உணர்வுள்ளவன் இல்லை, தேவனை தேடுகிறவன் இல்லை’’ (ரோமர் 3:11). ஜனங்கள் இயற்கையிலும், தங்களுடைய இருதயத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிற தேவனை அறிகிற அறிவை நிராகரிக்கிறார்கள். அவர்களே தங்களுக்கென்று தேவர்களை உருவாக்கிகொண்டு அவைகளை ஆராதிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்படாத ஒருவரை நரகத்திற்கு தேவன் அனுப்புவார் என்று தேவனுடைய நியாயத்தைக்குறித்து வாதிடுவது புத்தியீனமான காரியமாகும். தேவன் ஏற்கனவே வெளிப்படுத்தினக் காரியங்களுக்குத்தான் மனிதர்கள் பொறுப்புள்ளவர்களாயிருக்கிறார்கள். இந்த அறிவை மக்கள் நிராகரிக்கிறார்கள், அதனால்தான் தேவன் நியாயமுள்ளவராய் தண்டித்து அவர்களை நரகத்திற்கு அனுப்புகிறார் என்று வேதாகமம் கூறுகின்றது.

இதுவரை கேள்விப்படாதவர்களுடைய முடிவைக் குறித்து விவாதிக்காமல் கிறிஸ்தவர்களாய் இருக்கிற நாம் அவர்கள் கேள்விப்பட நம்மால் இயன்றதை முழுமூச்சாக செய்ய வேண்டும். சகல ஜாதிகளுக்கும் / தேசங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (மத்தேயு 28:19-20; அப்போஸ்தலர் 1:8). ஜனங்கள் இயற்கையில் வெளிப்படுத்தப்பட்ட தேவனை அறிகிற அறிவை நிராகரிக்கிறார்கள் என்பது நம்மை இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை சொல்ல உந்தித் தள்ள வேண்டும். தேவனுடைய கிருபையை இயேசுகிறிஸ்து மூலமாக பெற்றுக்கொள்வதால் மட்டுமே ஜனங்கள் பாவத்திலிருந்தும், தேவனில்லாத நித்தியத்திலிருந்தும் இரட்சிக்கப்படுவார்கள்.

ஒருவேளை சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களுக்கு தேவன் இரக்கம் அளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது பெரிய பிரச்சனையில் நம்மை கொண்டு விடும். ஒருவேளை சுவிசேஷத்தை கேட்காத ஜனங்கள் இரட்சிக்கப்பட்டால், நாம் ஒருவரும் சுவிசேஷத்தைக் கேள்விப்படாமல் பார்த்துக்கொள்வதே ஞானம் என எண்ணிவிடுவோம். நாம் செய்யக்கூடிய மோசமான காரியம் என்னவாக இருக்கும் என்றால் ஒரு மனிதனுக்கு சுவிசேஷத்தை சொல்லி அதை அவனோ அல்லது அவளோ நிராகரிப்பது தான். அப்படி நடந்தால் அவனோ அல்லது அவளோ குற்றமுள்வர்களாகிறார்கள் தண்டிக்கவும் படுவார்கள். சுவிசேஷத்தை கேளாதாவர்கள் குற்றமுள்வர்களாக தீரக்கப்படவேண்டும், அப்படி இல்லையெனில் சுவிசேஷ ஊழியத்திற்கு உந்துதல் இருக்காது (நாம் சுவிசேஷ வேலையை செய்யவும் மாட்டோம்). நமக்கு எதற்கு பிரச்னை, ஜனங்கள் சுவிசேஷத்தை நிராகரித்து குற்றமுள்ளவர்களாவதைவிட அவர்கள் கேள்விப்படாமல் இருந்துக்கொண்டே இரட்சிக்கப்படலாமே?

[English]



[முகப்பு பக்கம்]

இயேசுவைப்பற்றி கேள்விப்பட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.