இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?

கேள்வி இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்? பதில் மனிதன் பாவத்தில் விழுந்து போன பிறகு, இரட்சிப்புக்கு அடித்தளமே கிறிஸ்துவின் மரணமாகத்தான் இருந்ததது. சிலுவைக்கு முன்போ அல்லது சிலுவைக்கு பின்போ உலக வரலாற்றில் திருப்பு முனையான நடந்தேறிய ஒரு சம்பவமில்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. கிறிஸ்துவின் மரணத்தில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய கடந்தகால பாவங்களுக்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய எதிர்கால பாவங்களுக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று. இரட்சிப்புக்கு இன்றியமையாதது எப்போதுமே விசுவாசம் மட்டும் தான்….

கேள்வி

இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?

பதில்

மனிதன் பாவத்தில் விழுந்து போன பிறகு, இரட்சிப்புக்கு அடித்தளமே கிறிஸ்துவின் மரணமாகத்தான் இருந்ததது. சிலுவைக்கு முன்போ அல்லது சிலுவைக்கு பின்போ உலக வரலாற்றில் திருப்பு முனையான நடந்தேறிய ஒரு சம்பவமில்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. கிறிஸ்துவின் மரணத்தில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய கடந்தகால பாவங்களுக்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய எதிர்கால பாவங்களுக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று.

இரட்சிப்புக்கு இன்றியமையாதது எப்போதுமே விசுவாசம் மட்டும் தான். ஒருவருடைய விசுவாசத்தின் கருப்பொருள் எப்பொழுதுமே தேவனாகத்தான் இருகிறார். “அவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12) என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். ஆதியாகமம் 15:6ல் ஆபிரகாம் தேவனை விசுவசித்தான் அதை தேவன் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ரோமர் 4:3-8). எபிரேயர் 10:1-10 வரையிலுள்ள வேதபாகம் தெளிவாக போதிக்கின்றதுபோல, பழைய ஏற்பாட்டு பலியின் முறைமைகள் பாவத்தை முற்றிலுமாக எடுதுப்போடவில்லை. அதேவேளையில், அது தேவனுடைய குமாரன் பாவமனுக்குலத்திற்காக இரத்தஞ்சிந்தபோகிற நாளை சுட்டிக்காண்பிக்கிறதாக இருந்தது.

காலங்கள் பல கடந்தபோதும் ஒரு விசுவாசி எதை விசுவசிக்கிறார் என்பதில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதை விசுவாசிக்க வேண்டும் என்ற தேவனுடைய எதிர்பார்ப்பு அந்த காலம்வரைக்கும் மனுகுலத்திற்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டைக் பொறுத்து தான் இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து வருகிற விசுவாசம் எனப்படும். ஆதாம் ஆதியாகமம் 3:15ல் ஸ்திரீயின் வித்து சாத்தானை ஜெயிக்கும் என்ற வாக்குத்தத்தத்தை விசுவசித்தான். ஆதாம் அவரை விசுவசித்தான், ஏவாளுக்கு அவன் ஏவாள் என்று பெயரைக் கொடுத்ததன் மூலமாக அதைக் காண்பித்தான் (ஆதியாகமம் 3:20). தேவன் தம்முடைய அங்கீகாரத்தை தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினதில் தெரியப்படுத்தினார் (ஆதியாகமம் 3:21). அந்த நேரத்தில் ஆதாம் அதை மட்டும்தான் அறிந்திருந்தான், அதையே விசுவாசித்தும் வந்தான்.

ஆதியாகமம் 12 மற்றும் 15 வது அதிகாரங்களில் தேவன் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தங்கள் மற்றும் புதிய வெளிப்பாடுகளைக் கொண்டு ஆபிரகாம் தேவனை விசுவசித்தான். மோசேவுக்கு முன்பாக வேதவாக்கியங்கள் எதுவும் எழுதப்படவில்லை, ஆனாலும் தேவன் மனுமக்களுக்கு வெளிப்படுத்தின காரியங்களுக்கு அவர்கள் பொறுப்புடையவவர்களாக இருந்தார்கள். பழைய ஏற்பாடு முழுவதுமே விசுவாசிகள் தேவன் ஒரு நாள் பாவத்தை பார்த்துக்கொள்வார் என்கிற விசுவாசத்தில் இரட்சிப்புக்குள் வந்தார்கள். இன்றோ, நாம் பின்னோக்கி பார்த்து, இயேசு ஏற்கனவே சிலுவையில் பாவத்தை ஜெயித்தார் என்பதை விசுவசிக்கிறோம் (யோவன் 3:16; எபிரேயர் 9:28).

கிறிஸ்துவின் நாளில் வாழ்ந்தவர்கள், அதாவது சிலுவைக்கும் உயிர்தெழுதலுக்கும் முன்பாக வாழ்ந்த விசுவாசிகளின் நிலை என்ன? அவர்கள் எதை விசுவசித்தார்கள்? கிறிஸ்து அவர்களுடைய பாவங்களுக்காக மரித்ததை முழுவதையும் புரிந்து கொண்டார்களா? அவர் ஊழியம் செய்து கொண்டிருக்கையில், “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” (மத்தேயு 16:21-22). இந்த செய்திக்கு சீஷர்களுடைய பதில் என்னவாயிருந்தது? “அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்”. பேதுருவுக்கும் மற்ற சீஷர்களுக்கும் சத்தியம் எதுவென்று முழுமையாக அறியாதிருந்தார்கள், ஆனாலும் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள் காரணம் அவர்கள் தேவன் அவர்கள் பாவத்திற்குரிய கிரயத்தைப் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசித்தார்கள். அதை எப்படி தேவன் செய்து முடிப்பார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆதாமைவிட, ஆபிரகாமைவிட மோசேயைவிட, தாவீதைவிட சற்று அதிகம் கூட அவர்களுக்கு தெரியாது, ஆனாலும் தேவனை விசுவசித்தார்கள்.

இன்றைக்கு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்களைவிட நமக்கு அதிக வெளிப்பாடு உள்ளது; நமக்கு முழுமையான சித்திரம் தெரியும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்” (எபிரேயர் 1:1-2). நம்முடைய இரட்சிப்பு இப்பொழுதும் கிறிஸ்துவின் மரணத்தை அடித்தளமாக கொண்டேயுள்ளது, நாம் இரட்சிக்கப்பட விசுவாசமே தேவையாக இருக்கிறது, நம் விசுவாசத்தின் கருப்பொருள் தேவனே. இன்று நாம் இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தாரென்றும், அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாவது நாள் உயிர்தெழுந்தாரென்றும் விசுவசிக்கின்றோம் (1 கொரிந்தியர் 15:3-4).

[English]



[முகப்பு பக்கம்]

இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.