தேவதூதர்களுக்கு கட்டளையிட கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

கேள்வி தேவதூதர்களுக்கு கட்டளையிட கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் உள்ளதா? பதில் “தேவதூத சாஸ்திரம்” என்று அழைக்கப்படும் தேவதூதர்களின் கருத்து மற்றும் ஆய்வுகளால் மக்கள் இன்று பெருமளவு ஈர்க்கப்படுகிறார்கள். தங்க நகை மற்றும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் முதல் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் தேவதூதர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். பல கிறிஸ்தவர்கள் தேவதூதர்களுக்கு கட்டளையிட அதிகாரம் இருப்பதாக நம்புகிறார்கள், மற்றவர்கள் இயேசுவின் பெயரால் தேவதூதர்களுக்கு (மற்றும் பிசாசுகளுக்கு கூட) கட்டளையிட முடியும் என்று நம்புகிறார்கள். வேதாகமத்தில் மனிதர்கள் தங்கள் பெயரிலோ…

கேள்வி

தேவதூதர்களுக்கு கட்டளையிட கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

பதில்

“தேவதூத சாஸ்திரம்” என்று அழைக்கப்படும் தேவதூதர்களின் கருத்து மற்றும் ஆய்வுகளால் மக்கள் இன்று பெருமளவு ஈர்க்கப்படுகிறார்கள். தங்க நகை மற்றும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் முதல் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் தேவதூதர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். பல கிறிஸ்தவர்கள் தேவதூதர்களுக்கு கட்டளையிட அதிகாரம் இருப்பதாக நம்புகிறார்கள், மற்றவர்கள் இயேசுவின் பெயரால் தேவதூதர்களுக்கு (மற்றும் பிசாசுகளுக்கு கூட) கட்டளையிட முடியும் என்று நம்புகிறார்கள்.

வேதாகமத்தில் மனிதர்கள் தங்கள் பெயரிலோ அல்லது இயேசுவின் பெயரிலோ தேவதூதர்களுக்கு கட்டளைகளை வழங்கிய நிகழ்வுகள் எதுவும் இல்லை. தேவதூதர்களின் வேலையின் மீது மனிதனின் கட்டுப்பாடு இருக்கிறதாக உள்ள வேதப்பகுதிகள் எதுவும் இல்லை. ஒரு மனிதனாகப் பிறந்து பாடுபட்ட இயேசு தன்னை “தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக” ஆக்க வேண்டும் என்பதால் அவர்கள் உயர் பதவியில் இருப்பவர்கள் என்பது நமக்குத் தெரியும் (எபிரேயர் 2:7-9; சங்கீதம் 8:4).

தேவதூதர்கள் மீது விசுவாசிகளுக்கு கட்டுப்பாடு உள்ளது என்கிற போதனை தவறானது. தேவதூதர்கள் மனிதர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை பின்வரும் வேதாகமக் கோட்பாடுகள் காட்டுகின்றன:

• மோசே இஸ்ரவேல் புத்திரர் “கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்” (எண்ணாகமம் 20:16). இஸ்ரவேலர்கள் ஒரு தேவதூதனை தங்களிடம் வரும்படி கட்டளையிடவில்லை. அவர்கள் தேவனுடைய கட்டளையின் கீழ் தேவதூதர்கள் செயல்படுகிற வல்லமையுள்ள தேவனிடம் முறையிட்டனர்.

• சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ நேபுகாத்நேச்சார் நிறுத்திய சிலையை வணங்க மறுத்தனர் (தானியேல் 3:17-18). தேவன் தமது இரக்கத்தில் “தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்!” (டேனியல் 3:28). மூன்று எபிரேய வாலிபர்களும் கர்த்தருடைய தூதனை வரவழைக்கவில்லை. தேவன் தூதனை அனுப்பினார். தானியேலை அவர்களின் குகையில் உள்ள சிங்கங்களின் வாயிலிருந்து விடுவிக்க தேவன் பின்னர் “தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்” (டேனியல் 6:22).

• எருசலேமில் உள்ள சபை பேதுரு சிறையில் இருந்தபோது அவருக்காக ஜெபம் செய்தது (அப். 12:5). பேதுரு விடுவிக்கப்பட்டபோது, அவர் சாட்சியம் அளித்தார், “ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்” (அப். 12:11). பேதுருவுக்காக ஜெபம் செய்த கிறிஸ்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர், அவர் வீட்டு வாசலுக்கு வந்தபோது அவரை கிட்டத்தட்ட உள்ளே அனுமதிக்கவில்லை. நிச்சயமாக, பேதுருவைக் காப்பாற்ற அவர்கள் எந்த தேவதூதனுக்கும் கட்டளையிடவில்லை.

தேவதூதர்கள் தேவனுடைய “பரிசுத்த தூதர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் அவருடைய சித்தத்தைச் செய்கிறார்கள், நம்முடைய சித்தத்தை அல்ல (மத்தேயு 25:31; வெளிப்படுத்துதல் 14:10).

[English]



[முகப்பு பக்கம்]

தேவதூதர்களுக்கு கட்டளையிட கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.