கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் என்றால் என்ன?

கேள்வி கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் என்றால் என்ன? பதில் பிசாசு சாஸ்திரம் என்பது பிசாசுகளைப் பற்றிய ஆய்வு ஆகும். கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் என்பது பிசாசுகளைப் பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும். தேவதூத சாஸ்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் பிசாசுகள், அவை என்ன, அவை நம்மை எவ்வாறு தாக்குகின்றன என்பதைப் பற்றி நமக்குக் போதிக்கிறது. சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் விழுந்துபோன தேவதூதர்கள், தேவன், பரிசுத்த தேவதூதர்கள் மற்றும் மனிதகுலத்திற்கு…

கேள்வி

கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் என்றால் என்ன?

பதில்

பிசாசு சாஸ்திரம் என்பது பிசாசுகளைப் பற்றிய ஆய்வு ஆகும். கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் என்பது பிசாசுகளைப் பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும். தேவதூத சாஸ்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் பிசாசுகள், அவை என்ன, அவை நம்மை எவ்வாறு தாக்குகின்றன என்பதைப் பற்றி நமக்குக் போதிக்கிறது. சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் விழுந்துபோன தேவதூதர்கள், தேவன், பரிசுத்த தேவதூதர்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிராக யுத்தம் செய்யும் உண்மையான தனிப்பட்ட ஆள்தன்மையைக் கொண்டவர்கள். கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் சாத்தான், அவனது கூட்டாளிகள் மற்றும் அவர்களின் தீய திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரத்தில் சில முக்கியமான பிரச்சினைகள் இதோ இங்கே:

பிசாசுகளைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? பிசாசுகள் விழுந்துபோன தேவதூதர்கள் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது – சாத்தானுடன் சேர்ந்து தேவனுக்கு எதிராக கலகம் செய்த தேவதூதர்கள். சாத்தானும் அவனது பிசாசுகளும் தேவனைப் பின்பற்றி வணங்கும் அனைவரையும் வஞ்சித்து அழிக்க விரும்புகிறார்கள்.

சாத்தான் எப்படி, ஏன், எப்போது பரலோகத்திலிருந்து விழுந்தான்? சாத்தான் தேவனுக்கு எதிரான கலகத்திற்கு வழிவகுத்தபடியினால், பரலோகத்திலிருந்து கீழே விழுந்தான். அவனுடைய வீழ்ச்சியின் உண்மையான காலம் வேதத்தில் பதிவு செய்யப்படவில்லை. நமக்குத் தெரிந்த காலத்திற்கு வெளியே, அதாவது காலத்தையும் இடத்தையும் தேவன் உருவாக்குவதற்கு முன்பு அது நிகழ்ந்திருக்கலாம்.

சில தேவதூதர்களை பாவம் செய்வதற்கு தேவன் ஏன் அனுமதித்தார்? விழுந்துபோய் பிசாசுகளாக மாறிய தேவதூதர்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரமான விருப்பம் இருந்தது – தேவன் எந்த தேவதூதர்களையும் பாவம் செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை. அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பாவம் செய்தனர், எனவே தேவனுடைய நித்திய கோபத்திற்கு தகுதியானவர்கள் ஆனார்கள்.

கிறிஸ்தவர்களை பிசாசு பிடித்து ஆட்கொள்ள முடியுமா? ஒரு கிறிஸ்தவரை பிசாசு ஆட்கொள்ள முடியாது என்ற நம்பிக்கையை நாம் உறுதியாகப் பிடித்துக் கொள்கிறோம். பிசாசு பிடித்திருப்பதற்கும், பிசாசினால் ஒடுக்கப்படுவதற்கும் அல்லது பாதிக்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக நாம் நம்புகிறோம்.

இன்று உலகில் பிசாசு ஆவிகளின் செயல்பாடு இருக்கிறதா? சாத்தான் “பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8) மற்றும் அவன் சர்வ வியாபியாக இல்லாதபடியினால், அவன் தனது வேலையை இந்த உலகத்தில் செய்ய தனது பிசாசுகளை அனுப்புவான் என்று கருதுவது தர்க்கரீதியானது.

நெஃபிலிம்கள் என்பவர்கள் யார் அல்லது என்ன? ஆதியாகமம் 6:1-4 இல் தேவகுமாரர் மற்றும் மனுஷகுமாரத்திகள் இடையிலான பாலியல் உறவுகளின் விளைவால் உருவான சந்ததியினர் நெஃபிலிம்கள் (“விழுந்தவர்கள், இராட்சதர்கள்”) ஆவர். “தேவகுமாரர்” யார் என்கிற அடையாளம் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன.

சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் தீமையின் உருவங்கள் மட்டுமே என்று பலர் நம்புகிறார்கள். கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் நம் ஆவிக்குரிய எதிரியின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பிசாசையும் அவனது சோதனைகளையும் எவ்வாறு எதிர்ப்பது மற்றும் வெல்வது என்பதை இது நமக்குப் போதிக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தகாரத்திற்கு எதிரான வெற்றிக்காக தேவனைப் போற்றுங்கள்! கிறிஸ்தவர்கள் பிசாசு சாஸ்திரத்தில் ஆர்வம் காட்டக்கூடாது என்றாலும், பிசாசு சாஸ்திரத்தைப் பற்றிய தெளிவான புரிதல் நம் அச்சங்களை போக்கி அமைதிப்படுத்தவும், நம்மை கண்காணிக்கவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நெருக்கமாக இருக்கவும் நினைவூட்ட உதவும். நம் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், மேலும் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4).

கிரிஸ்துவ பிசாசு சாஸ்திரம் தொடர்பான ஒரு முக்கிய வேதபாகம் 2 கொரிந்தியர் 11:14-15, “அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.”

[English]



[முகப்பு பக்கம்]

கிறிஸ்தவ பிசாசு சாஸ்திரம் என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.