பரிசுத்த ஆவியானவருடைய முத்திரை என்றால் என்ன?

கேள்வி பரிசுத்த ஆவியானவருடைய முத்திரை என்றால் என்ன? பதில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களின் இருதயங்களில் “வைப்பு,” “முத்திரை” மற்றும் “அச்சாரம்” என்று குறிப்பிடப்படுகிறார் (2 கொரிந்தியர் 1:22; 5:5; எபேசியர் 1:13-14; 4:30). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஜனங்கள் மீது அவருடைய முத்திரையாக இருக்கிறார், அவர் நம்மை அவருக்குச் சொந்தமானவர்களாக உரிமைக் கோருகிறார். இந்த வேதப்பகுதியில் “அச்சாரம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை அர்ராபோன், அதாவது “ஒரு உறுதிமொழி”, அதாவது மீதமுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக கொடுக்கப்பட்ட முன் பணம்…

கேள்வி

பரிசுத்த ஆவியானவருடைய முத்திரை என்றால் என்ன?

பதில்

பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களின் இருதயங்களில் “வைப்பு,” “முத்திரை” மற்றும் “அச்சாரம்” என்று குறிப்பிடப்படுகிறார் (2 கொரிந்தியர் 1:22; 5:5; எபேசியர் 1:13-14; 4:30). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஜனங்கள் மீது அவருடைய முத்திரையாக இருக்கிறார், அவர் நம்மை அவருக்குச் சொந்தமானவர்களாக உரிமைக் கோருகிறார். இந்த வேதப்பகுதியில் “அச்சாரம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை அர்ராபோன், அதாவது “ஒரு உறுதிமொழி”, அதாவது மீதமுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக கொடுக்கப்பட்ட முன் பணம் அல்லது சொத்தின் ஒரு பகுதி ஆகும். விசுவாசிகளுக்கு ஆவியின் வரம், நம் பரலோக சுதந்திரத்துக்குக் கொடுக்கப்படும் தொகையாகும், இது கிறிஸ்து நமக்கு வாக்குறுதி அளித்து, சிலுவையில் நமக்காகச் செலுத்தி முடித்தார். ஆவியானவர் நம்மை முத்திரையிட்டு வைத்திருப்பதால் தான் நம் இரட்சிப்பு உறுதியானது என்பது தெளிவாகிறது. தேவனுடைய முத்திரையை யாராலும் உடைக்க முடியாது.

பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்கு “முதல் தவணையாக” கொடுக்கப்படுகிறார், அதாவது தேவனுடைய பிள்ளைகளாகிய நமது முழு சுதந்திரமும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறார். கிருபையும் விசுவாசமும் ஈவாக இருப்பது போல, அவருடைய ஆவியையும் நமக்கு ஈவாக அளிக்கும் தேவனுக்கு நாம் சொந்தமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழங்கப்படுகிறார் (எபேசியர் 2:8-9). ஆவியின் வரத்தின் மூலம், தேவன் நம்மைப் புதுப்பித்து பரிசுத்தப்படுத்துகிறார். நாம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளான அந்த உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை அவர் நம் இருதயங்களில் உருவாக்குகிறார், நாம் அவருடைய சுவிகார பிள்ளைகளாகக் கருதப்படுகிறோம், நம் நம்பிக்கை உண்மையானது, அதே போல் நமது மீட்பும் இரட்சிப்பும் நிச்சியமானது. ஒரு முத்திரை ஒரு பத்திரம் அல்லது ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. தேவன் அவருடைய பரிசுத்த ஆவியானவரை நாம் என்றென்றும் அவருடையவர்கள் என்றும் கடைசி நாளில் இரட்சிக்கப்படுவோம் என்றும் உறுதியளித்தார். ஆவியானவரின் இருப்புக்கான ஆதாரம் மனந்திரும்புதலை உருவாக்கும் இருதயத்தின் செயல்பாடுகள், ஆவியின் கனி (கலாத்தியர் 5:22-23), தேவனுடைய கட்டளைகள் மற்றும் சித்தத்திற்கு இணங்குதல், ஜெபம் மற்றும் ஸ்துதிக்கான ஆர்வம் மற்றும் அவரது மக்கள் மீதான அன்பு ஆகியவையாகும். இந்த காரியங்கள் பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை புதுப்பித்ததற்கும், கிறிஸ்தவனை மீட்கப்படும் நாளுக்காக முத்திரையிடுவதற்கும் சான்றுகள் ஆகும்.

எனவே பரிசுத்த ஆவியின் மூலமும், அவருடைய போதனைகள் மற்றும் வழிகாட்டும் வல்லமையின் மூலமும், மீட்கப்படும் நாள் வரை நாம் முத்திரையிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு, பாவம் மற்றும் கல்லறையின் சீர்கேட்டில் இருந்து விடுபெற்று முழுமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம். நம் இருதயங்களில் ஆவியின் முத்திரை இருப்பதால், கற்பனை செய்ய முடியாத மகிமைகளைக் கொண்ட எதிர்காலத்தில் நம் உறுதியான இடத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

[English]



[முகப்பு பக்கம்]

பரிசுத்த ஆவியானவருடைய முத்திரை என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.