மலைப் பிரசங்கம் என்றால் என்ன?

கேள்வி மலைப் பிரசங்கம் என்றால் என்ன? பதில் மத்தேயு 5-7 அதிகாரங்களில் இயேசு கொடுத்த பிரசங்கமே மலைப் பிரசங்கம் என்றறியப்படுகிறது. மத்தேயு 5:1-2 வசனங்களே இது மலைப் பிரசங்கம் என்று அறியப்படுவதற்குக் காரணம்: “அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்…” மலைப் பிரசங்கம் இயேசு இதுவரை வழங்கிய பிரசங்கங்களில் மிகவும் பிரபலமானது, ஒருவேளை…

கேள்வி

மலைப் பிரசங்கம் என்றால் என்ன?

பதில்

மத்தேயு 5-7 அதிகாரங்களில் இயேசு கொடுத்த பிரசங்கமே மலைப் பிரசங்கம் என்றறியப்படுகிறது. மத்தேயு 5:1-2 வசனங்களே இது மலைப் பிரசங்கம் என்று அறியப்படுவதற்குக் காரணம்: “அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்…” மலைப் பிரசங்கம் இயேசு இதுவரை வழங்கிய பிரசங்கங்களில் மிகவும் பிரபலமானது, ஒருவேளை இதுவரை யாரும் வழங்கிய பிரசங்கங்களில் மிகவும் பிரபலமானது.

மலைப் பிரசங்கம் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. இந்த கட்டுரையின் நோக்கம் ஒவ்வொரு பகுதியிலும் கருத்து தெரிவிப்பது அல்ல, மாறாக அதில் உள்ளவற்றை சுருக்கமாக வழங்குவது. மலைப்பிரசங்கத்தை ஒரே வாக்கியத்தில் சுருக்கமாகச் சொன்னால், அது இப்படித்தான் இருக்கும்: தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பிரியமான, மாய்மாலம் இல்லாத, அன்பும் கிருபையும் நிறைந்த, ஞானம் நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. மற்றும் பகுத்தறிவு.

5:3-12 – பாக்கியவான்கள்

5:13-16 – உப்பு மற்றும் ஒளி

5:17-20 – இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்

5:21-26 – கோபமும் கொலையும்

5:27-30 – இச்சை மற்றும் விபச்சாரம்

5:31-32 – விவாகரத்து மற்றும் மறுமணம்

5:33-37 – ஆணைகள்

5:38-42 – கண்ணுக்கு கண்

5:43-48 – உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்

6:1-4 – இல்லாதவர்களுக்கு கொடுங்கள்

6:5-15 – எப்படி ஜெபிக்க வேண்டும்

6:16-18 – உபவாசம் இருப்பது எப்படி

6:19-24 – பரலோகத்தில் பொக்கிஷங்கள்

6:25-34 – கவலைப்படாதிருங்கள்

7:1-6 – மாய்மாலமாக நியாயந்தீர்க்காதீர்கள்

7:7-12 – கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

7:13-14 – இடுக்கமான வாசல்

7:15-23 – கள்ளத்தீர்க்கதரிசிகள்

7:24-27 – கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷன்

மத்தேயு 7:28-29 பின்வரும் கூற்றுடன் மலைப்பிரசங்கத்தை நிறைவுச் செய்கிறது: ” இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” நாம் அனைவரும் அவருடைய போதனைகளைக் கண்டு வியந்து, மலைப்பிரசங்கத்தில் அவர் போதித்த கொள்கைகளைப் பின்பற்றுவோம்!

[English]



[முகப்பு பக்கம்]

மலைப் பிரசங்கம் என்றால் என்ன?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *