நான் ஏன் ஒருங்கிணைந்த மதத்தை நம்ப வேண்டும்?

கேள்வி நான் ஏன் ஒருங்கிணைந்த மதத்தை நம்ப வேண்டும்? பதில் ‘மதம்’ என்ற வார்த்தைக்கு அகராதிபடியான விளக்கம் ‘‘ கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள்களை ஆராதிப்பது, செயல்முறை மூலம் சடங்காக வெளிப்படுத்துதல், குறிப்பிட்டு நம்பிக்கை முறை, ஆராதனை போன்றவை. இது ஒரு சில வரைமுறைகளை கடைப்பிடிக்கிறதாயும் இருக்கிறது. இந்த விளக்கத்தை மனதில் கொண்டு வேதாகமமும் ஒருங்கிணைந்த மதத்தைக்குறித்து பேசுகின்றது. பெரும்பாலான ஒருங்கிணைந்த மதம், அதனுடைய நோக்கம், தாக்கம் எதுவுமே தேவனைப் பிரியப்படுத்துகிறதாக இல்லை. ஆதியாகம்ம் 11-வது அதிகாரத்தில்…

கேள்வி

நான் ஏன் ஒருங்கிணைந்த மதத்தை நம்ப வேண்டும்?

பதில்

‘மதம்’ என்ற வார்த்தைக்கு அகராதிபடியான விளக்கம் ‘‘ கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள்களை ஆராதிப்பது, செயல்முறை மூலம் சடங்காக வெளிப்படுத்துதல், குறிப்பிட்டு நம்பிக்கை முறை, ஆராதனை போன்றவை. இது ஒரு சில வரைமுறைகளை கடைப்பிடிக்கிறதாயும் இருக்கிறது. இந்த விளக்கத்தை மனதில் கொண்டு வேதாகமமும் ஒருங்கிணைந்த மதத்தைக்குறித்து பேசுகின்றது. பெரும்பாலான ஒருங்கிணைந்த மதம், அதனுடைய நோக்கம், தாக்கம் எதுவுமே தேவனைப் பிரியப்படுத்துகிறதாக இல்லை.

ஆதியாகம்ம் 11-வது அதிகாரத்தில் ஒருங்கிணைந்த மதம் ஏற்பட்டது, நோவாவுடைய பின் சந்ததியார் பூமியனைத்தையும் நிரப்பும்படியான தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியாமல் அவர்களே ஒருங்கிணைந்த பாபேல் கோபுரத்தைக் கட்ட நினைத்தார்கள். தேவனோடு அவர்களுடைய உறவைக் காட்டிலும் அவர்களுடைய ஒற்றுமையை அதிகமாக நம்பினார்கள். தேவன் அதில் நடுவில் வந்து அவர்களுடை ய பாஷையை தாறுமாறாக்கி, அந்த ஒருங்கிணைந்த மதத்தை உடையும்படி செய்தார்.

யாத்திராகம் 6-வது அதிகாரத்திலிருந்து தொடர்ந்து, தேவன் ‘ஒருங்கிணைந்த’ ஒரு மதத்தை இஸ்ரவேல் தேசத்துக்காக உருவாக்கினார். பத்துக்கட்டளைகளும், ஆசாரிப்புக் கூடாரத்தைக் குறித்த கட்டளைகள் மற்றும் பலியிடும் முறைமைகள் இவை யாவும் தேவன் கொடுத்து இஸ்ரவேலர்களைப் பின்பற்றச் சொன்னார். புதிய ஏற்பாட்டை நாம் ஆராய்ந்து படிக்கும்போது, இந்த மதம் கொடுக்கப்பட்டதன் நோக்கமே அவர்களுக்கு ஒரு மேசிய இரட்சகர் தேவை என்பதை காண்பிக்கவே என்று தெளிவாகிறது. (கலாத்தியர் 3, ரோமர் 7). ஆகிலும், பலர் இதைத் தவறாக புரிந்துக்கொண்டு தேவனை ஆராதிக்காமல் கட்டளைகளையும் சடங்குகளையும் ஆராதித்தனர்.

இஸ்ரவேல் சரித்திரம் முழுவதிலும், இஸ்ரவேல் அனுபவித்த பல போராட்டங்கள், இந்த ஒருங்கிணைந்த மத்தைக் கொண்டுதான். எடுத்துக்காட்டாக பாகாலை ஆராதித்தது (நியாதிபதிகள் 6:1,ராஜாக்கள் 18), தாகோன் (I சாமுவேல் 5) மற்றும் மோகு (2 ராஜாக்கள் 23:10). தேவன் இந்த மதங்களைப் பின்பற்றினவர்களை வீழ்த்தி, தன்னுடைய சர்வ வல்லமையையும், தான் சர்வ வியாபி என்பதையும் காட்டினார்.

சுவிசேஷப்புஸ்தகங்களில் கிறிஸ்து வாழ்ந்த போது பரிசேயர்களும் சதிசேயர்களும் ஒருங்கிணைந்த மதத்தின் தலைவர்களாக இருந்ததைப் பார்க்கிறோம். இயேசு அவர்களுடைய தவறான உபதேசங்களயும் மாய்மாலமான வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கண்டித்து உணர்த்திக் கொண்டே இருந்தார். நிரூபங்கிலும் சில ஒருங்கிணைந்த குழுக்கள் சுவிசேஷத்தோடு சில கிரியைகளையும், சடங்குகளையும் கலந்தார்கள். விசுவாசிகளை இந்த கிறிஸ்தவத்தோடு கூட மற்ற மதத்தையும் பின்பற்றும்படி வற்புறுத்தினார்கள். கலாத்தியர் மற்றும் கொலோசியருக்கு எழுதப்பட்ட நிருபங்கள் இந்த மதங்களைக் குறித்து எச்சரிக்கின்றது. வெளிப்படுத்தின் விசேஷப் புஸ்தகத்தில ஒருங்கிணைந்த மதமானது அந்திகிறிஸ்து ஒரே உலகம் என்ற மத்த்தை ஸ்தாபிக்கும்பொது தாக்கம் உடையதாக இருக்கும்.

அநேக நேரங்களில் தேவனுடைய எண்ணப்படி ஒருங்கிணைந்த மதத்தினுடைய முடிவு அழிவாகத்தான் இருந்திருக்கிறது. ஆகிலும் வேதாகமம் ஒருங்கிணைந்த விசுவாசிகள் அவருடைய திட்டத்தில் இருப்பதைக் குறித்துக் பேசுகின்றது. தேவன் அவர்களை ‘சபைகள்’ என்று அழைக்கின்றார். அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம் மற்றும் நிரூபங்கள், சபை என்பது ஒருங்கிணைந்ததாயும் ஒன்றோடொன்று சார்ந்ததாயும் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றது. அமைப்பு என்பது பாதுகாப்பு, வெளிக்களப்பணி, ஆக்கத்திறன் ஆகியவற்றை அதிகப்படுத்துகின்றது. (அப்போஸ்தலர் நடபடிகள் 2:41-47). சபை என்பதை ‘ ஒருங்கிணைந்த உறவுமுறை ’ என்றும் அழைக்கலாம்.

மதம் என்பது தேவனோடு உறவுகொள்ள மனிதன் எடுத்த முயற்சி. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது தேவன் நமக்காக இயேசுகிறிஸ்துவை பலியாகக் கொடுத்ததினிமித்தம் நமக்கு தேவனோடு இருக்கிற உறவு. தேவனை அடைய ஒரு திட்டமும் இல்லை ( அவரே நம்மைத் தேடிவந்தார் – ரோமர் 5:8). ஒருவருடைய மேன்மைப்பாராட்ட வழியில்லை (எல்லாமே கிருபையினால் பெற்றோம் – எபேசியா 2:8-9). தலைமையைக் குறித்த எந்தப் பிரச்சனையும் இருக்க வேண்டியதில்லை (கிறிஸ்துவே தலையாயிருக்கிறார் கொலோசியர் 1:18). பொல்லாங்கு இருக்கக்கூடாது (கிறிஸ்துவுக்குள் நாம் ஒன்றாயிருக்கின்றோம் – கலாத்தியர் 3:28). ஒருங்கிணைந்திருப்பது பிரச்சனை கிடையாது, சட்டதிட்டங்களையும், சடங்காச்சாரங்களையுமே நோக்கிக் கொண்டிருப்பது தான் பிரச்சனை.

[English]



[முகப்பு பக்கம்]

நான் ஏன் ஒருங்கிணைந்த மதத்தை நம்ப வேண்டும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.